நீதிமன்றத்தில் கைதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நீதிபதி..!

அமெரிக்காவில் விசாரணைக் கைதி ஒருவர் திடீரென தாக்குதலில் ஈடுப்பட்டதை தொடர்ந்து அவரை நீதிபதி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள நகர் நீதிமன்றம் ஒன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

n-t

குற்றம்சாட்டப்பட்ட ரிச்மண்ட் என்ற கைதி நேற்று காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியே கைதி வந்துள்ளார். அப்போது, நீதிபதியும் வெளியே வந்துள்ளார்.

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் செயல்பட்ட கைதி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் நீதிபதி நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.

இத்தாக்குதலில் நீதிபதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்த நீதிபதி தற்காப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கைதியை 5 முறை சுட்டுள்ளார்.

சில நிமிடங்கள் நீடித்த தாக்குதலில் கைதி நீதிமன்ற வளாகத்திலேயே பலியாகியுள்ளார், படுகாயம் அடைந்த நீதிபதி உடனடியாக ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஓஹியோ மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.