பாரதப் பிரதமர் மோடி சட்ட விரோத செயலைச் செய்துள்ளதாக மும்பை அந்தேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியா, பாரதம் எனும் இரு சொற்களே பயன்படுத்தப்பட வேண்டும் எனினும் மோடி அண்மைய சுதந்திர தின உரையின் போது, இந்தியாவை ஹிந்துஸ்தான் எனக் குறிப்பிட்டது சட்ட விரோதமானது என மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராம வித்தால்ராவ் காலே எனப்படும் வழக்கறிஞர் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், ஹிந்துஸ்தான் எனப்படும் சொல் மதத்தைக் குறிப்பிடுவது என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு மோடியின் உரை அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளை மீறும் செயல் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.







