தனியார் வகுப்பு ஒன்றுக்கு தொடன்கொடை பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த 16 வயதுடைய மாணவி ஒருவர், முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியை, இவ்வாறு முச்சக்கர வண்டியில் கடத்திய மூன்று பேரை கைது செய்வதற்காக, தொடங்கொடை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
மாணவியை கடத்திய 3 பேரில், ஒருவர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாக மாணவி காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் மாணவி வீடு செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்தில் விட்டு சென்றுள்ளமை அறியவந்துள்ளது.
மதுகம பிரதேச பிரபல பாடசாலையில் குறித்த மாணவி கல்வி பயின்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மாணவி மருத்துவ பரிசோதனைக்காக, களுத்துறை – நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.