இலங்கை யானை குட்டிகளின் நீர் விளையாட்டு பற்றி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யால தேசிய பூங்காவிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குட்டி யானை ஒன்றையும் சாதாரண இளம் வயதுடைய யானை ஒன்றையும் குளிர்மைப்படுத்துவதற்காக நீரிலுள்ள இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
எனினும் அந்த இளம் யானை அந்த சந்தர்ப்பத்தை ஓய்வெடுக்க பயன்படுத்தி கொண்டுள்ளது.
இந்த யானைகளின் விளையாட்டை அவுஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 47 வயதுடைய Inger Vandyke என்ற புகைப்பட கலைஞரே இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக யானைகளின் பல்வேறு குறும்புத்தனமான விளையாட்டுக்களை அவதானித்த போதிலும் யால தேசிய பூங்காவில் தான் பார்த்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக காணப்பட்டதென அவர் தெரிவித்துள்ளார்.
குட்டி யானை ஏனைய யானைகளை குழப்பி விடுவதில் சிறந்ததாக காணப்படுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.










