ராஜபக்ஷர்களின் ஆபத்தான இடமாக கருதப்படுகிறது குற்ற விசாரணை திணைக்களம் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை குற்ற விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

mahintha

அதற்கமைய இன்று காலை 9.30 மணியளவில் ஷிரந்தி ராஜபக்ச குறித்த திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக ராஜபக்ச குடும்ப தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஷிரந்தி ராஜபக்சவுக்காக மஹிந்த திணைக்களத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மனைவிக்கு பலம் சேர்க்கும் வகையில் திணைக்கள வளாகத்தில் மஹிந்த காவல் நிற்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைக்கு வாக்குமூலம் பெற்று கொள்வதற்காக ஷிரந்தி இன்றைய தினம் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்ற விசாரணை திணைக்களம் ராஜபக்ஷர்களின் ஆபத்தான இடமாக கருதப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ முதல் அவரது கடைசி மகன் வரை திணைக்களத்தில் விசாரணை மேற்கொள்ள அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.