அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலம் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா தனது 71ஆவது சுதந்திர தினத்தை இன்றைய தினம் (15) கொண்டாடுகின்றது.
இதையொட்டி, ஆகஸ்ட் 14ஆம் திகதி நேற்று மாலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனக்கு தொலைபேசியில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல பல உலக நாட்டு தலைவர்களும் மோடிக்கு இந்திய சுதந்திர தினத்தையொட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.







