யாழில் பொலிசாரைக் கொண்டு கிணறு இறைத்த கில்லாடிகள்!! பொலிசார் கொதிப்பு!!

கொடிகாமம் தவசிகுளம் பகுதியில் உள்ள வீட்டுக்கிணற்றில் உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கியொன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர முறைப்பாட்டு இலக்கமான 119 க்கு பொய்யான தகவல் வழங்கப்பட்டுள்ளது.

well

நேற்று காலை 10.30 மணிக்கு இவ்வாறு பொய்யான தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸ் அவசர பிரிவால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு குறித்த தகவல் பரிமாறப்பட்டுள்ளது.

இதனையடுத்து துப்பாக்கி கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட வீட்டிற்கு சென்று கிராம சேவகர் மற்றும் அயல் வீட்டார் முன்னிலையில் கிணற்றை இறைத்துள்ளனர்.

இதன்போது கிணற்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை.

இதனால் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு பொய்யான தகவல் வழங்கியவர்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணை அறிக்கை நேற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் பொலிஸ் பிரிவில் தொடர்ட்சியாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு பொய்யான தகவல்களை சிலர் வழங்குகின்றனர்.

இதனால் பொலிஸாரின் கடமை வீணடிக்கப்படுவதோடு அரச வளங்களும் வீண்விரையமாகின்றது என கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பீ.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே அவசர இலக்கத்திற்கு பொய்யான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் இருந்து நஷ்டஈடும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.