ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க் கட்சி முயற்சி செய்து வருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

images (9)

பிணை முறி விவகாரம் நடைபெற்ற போது மத்திய வங்கியானது பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ச்சுன் மகேந்திரனை நியமிக்கப்பட்டு, அவரின் செயற்பாட்டில் காலத்தில் தான் இந்த பிணைமுறை விவகாரத்தில் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதனை முதன்மைப்படுத்தி, பிரதம் மீது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு வருகின்றனர் என தெரியவருகிறது.

இந்த தீர்மானத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களின் உதவியினையும் நாடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

முன்னதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருந்த நிலையில் அவர் தனது பதவியினை துறந்திருந்தார். இது அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்களை ஏற்படுத்தியிருந்தது.

இதன் அடுத்த கட்டமாக பிரதமர் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.