லூசிஹாம் சிவன் கோவிலுக்கு முன்பாக நடந்துசென்ற, தமிழ் பெண் ஒருவரை பின் தொடர்ந்து வந்த தலைக் கவசம் அணிந்த நபர். குறித்த பெண்ணின் தாலியை அறுக்க முயற்ச்சி செய்துள்ளார். அப்பெண் தாலியை இறுக்கிப் பிடித்ததால் அதனை அவர்களால் சுலபமாக அறுக்க முடியவில்லை. இதனால் அப்பெண்ணை அப்படியே நிலத்தில் வீழ்த்தி. இந்த கயவர்கள், தாலியை அறுத்துள்ளார்கள்.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற மற்றைய நபர், இவரை ஏற்றிக்கொண்டு தப்பி ஓடுகிறார். பட்டப் பகலில் இவ்வாறு ஒரு பெண்ணிடம் கொடூரமாக நடந்துள்ள கயவர்களை, மெற்றோ பொலிடன் பொலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
அத்தோடு அவர்கள் CCTV கமராவையும் வெளியிட்டு. சம்பவத்தை நேரில் பாத்தவர்கள் தயங்காமல் வந்து சாட்சி சொல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.இதேவேளை வரும் ஞாயிறு ஈலிங் அம்மன் கோவில் தேர் நடைபெற உள்ளது. அங்கேயும் தமிழ் பெண்கள் இதுபோன்று அள்ளிக் குவித்து போட்டுக்கொண்டு வந்தால். சங்கிலி அறுக்கும் கோஷ்டிக்கு அமோக கொண்டாட்டமாக தான் இருக்கும் ! பார்த்து நடந்து கொள்வது நல்லது.







