பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் கிராக்கி

சின்ன பட்ஜெட் படங்களின் தொலைக்காட்சி உரிமையை வாங்க நாதியில்லை. இடைத்தரகர்கள் மூலமும், நேரடியாகவும் டிவி சேனல்களில் ஏறி இறங்குகின்றனர். சின்ன படங்களை வாங்குவதில்லை என்று வாசலோடு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

NTLRG

இதற்கிடையில் சின்ன பட்ஜெட் படங்களை சேனல்கள் வாங்க வேண்டும் தயாரிப்பாளர்கள் சங்கம் சேனல்களுக்கு கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறது.
சேனல்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. அதே சமயம், பெரிய ஹீரோக்களின் படங்களின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றுவதில், முன்னணி சேனல்களுக்கு இடையே கடும் போட்டி நிலகிறது.

அஜித் நடித்திருக்கும் ‘விவேகம்’ படத்தின் உரிமை மற்றும் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் சிங்கம் 3 படத்தின் உரிமையை கடும் போட்டிக்கு இடையே சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ தொலைக்காட்சி உரிமையை ஜி தமிழ்சேனல் கைப்பற்றி இருக்கிறது. சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்திருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியது.

சிவகார்த்திகேயன் – பொன்ராம் படம், சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் இணையும் படங்களின் தொலைக்காட்சி உரிமையை இப்போதே சன் டிவி வாங்கிவிட்டது.