விவேகம் படத்தின் அதிகாலை காட்சி ஏற்பாடு செய்ய பயமாக இருக்கிறது- பிரபல திரையரங்க உரிமையாளர்

தமிழ் சினிமா படங்கள் மற்ற இடங்களில் எப்படியோ சென்னையில் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் பெரிய நடிகர்களின் படங்களின் ரிலீஸின் போது சென்னையில் நடக்கும் கொண்டாட்டமே வேறு.

kajal-ajith

ரசிகர்களின் ஆர்வத்தை பார்த்த பல திரையரங்குகளில் பெரிய நடிகர்களின் படங்கள் அதிகாலையிலேயே திரையிடப்படும், அப்படி சில படங்கள் திரையிடப்பட்டிருக்கிறது.

அதேபோல் அண்மையில் வெளியான தனுஷின் VIP2 படத்திற்கும் பிரபல திரையரங்கம் அதிகாலை ஷோ ஏற்பாடு செய்திருக்கின்றனர், ஆனால் கடைசியில் சில விஷயங்களால் அந்த ஷோ நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் வருத்தம் அடைந்த பிரபல திரையரங்க உரிமையாளர் தொடர்ந்து சில படங்களின் காலை ஷோக்கள் ரத்தானதால் விவேகம் படத்தின் அதிகாலை ஷோ ஏற்பாடு செய்ய பயமாக இருக்கிறது என கூறியுள்ளார்.