நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும், அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு செலவு திட்ட செயன்முறை, பொருளாதார கொள்கைகள் மற்றும் நிதியியல் முறைமைகள் தொடர்பில் சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற அறிக்கையொன்றை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட மேலும் பல சேவைகள், வசதிகளை வழங்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.