-
மேஷம்
மேஷம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக் கும். வெளிவட்டாரத் தில் யாரையும் விமர்சித்து பேசாதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்
களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத் யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார் கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: புதிய பாதை யில் பயணிக்கத் தொடங்குவீர் கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
கடகம்
கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதி காரி ஒத்துழைப்பார். நிம்மதியான நாள்.
-
சிம்மம்
சிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்களை பற்றி வதந்திகள் வரும். திட்டமிட்டவை தாமதமாக முடியும் நாள்.
-
கன்னி
கன்னி: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்து வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக் கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம் பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். கடையை விரிவுப்படுத்து வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.
-
தனுசு
தனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். எதிர்பார்த்த இடத் திலிருந்து நல்ல செய்தி வரும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
-
மகரம்
மகரம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.
-
கும்பம்
கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
-
மீனம்
மீனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.