பெண்களை துஸ்பிரயோகம் செய்த ஒரு பெண் உட்பட்ட 18 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

பிரித்தானியாவின் நியூகாசல் பகுதியில் சிறுமிகள் உட்பட பலவீனமான பெண்களை போதையூட்டி பாலியல்ரீதியாக துன்புறுத்தி வன்புணர்வு செய்த ஒரு பெண் உட்பட்ட 18 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

img

பாலியல் வன்புணர்வு வலையமைப்பு போல செயற்பட்ட இவர்களில் பெரும்பாலானோர் ஆசிய நாட்டவர்களாவார்கள்.

இவர்களில் மூவர் சிறையிடப்பட்டுள்ள நிலையில் மிகுதிப்பேருக்கு அடுத்த மாதம் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.

2010 ஆம் ஆண்டுமுதல் 2014 ஆம் ஆண்டுவரை இந்த பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றிருந்தன.