இன்றைய ராசிபலன் (10.08.2017)

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புது வீடு வாங்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள்  வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். இனிமையான நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்:  எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும்.  வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். திடீர் யோகம்  கிட்டும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள்  மதிப்பார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும்  நாள்.

  • கடகம்

    கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட் கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் அறிமுகமாவார்.  வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். போராடி வெல்லும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்  தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும்  நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம்  வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். உறவினர்கள் உங்களின்  பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.  சாதிக்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை படும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். முன்கோபத்தால்  பகை உண்டாகும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். பண விஷயங்களில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க  வேண்டுமென நினைப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.