`வேலையில்லா பட்டதாரி-2′ படத்தின் நீளம் இவ்வளவா?

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் `வேலையில்லா பட்டதாரி-2′. தனுஷ் – அமலாபால் – கஜோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி தமிழில் அகிலமெங்கும் ரிலீசாக இருக்கிறது.

vip2-3

அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

 

சீன் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகும் இந்த படம் தமிழகம் மட்டுமின்றி மலேசியாவிலும் அதிக திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட தணிக்கைக் குழு சோதனையின் மூலம் `வேலையில்லா பட்டதாரி-2′ படத்தின் நீளம் 128 நிமிடங்கள் (2 மணி 8 நிமிடங்கள்) என்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.