ஐநா: வட கொரியாவிற்கு எதிராக கடுமையான தீர்மானம் நிறைவேற்றம்

அமெரிக்காவினால் முன் மொழியப்பட்ட வட கொரியா மீதான கடுமையான தடைத் தீர்மானத்தை ஐநா சபை நிறைவேற்றியது.
un
ஐநா அவை (நியூயார்க்)
கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மீது விதிக்கப்படும் ஏழாவது தடைத் தீர்மானம் ஆகும் இது.
குறிப்பாக இத்தீர்மானம் வட கொரியாவின் 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஏற்றுமதிகளின் மீது விதிக்கப்பட்டுள்ளது. இத்தடைகள் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும். அதிபர் டிரம்ப் பதவிக்கு வந்தப்ப் பின் முதல் முறையாக சீனாவும் தனது கூட்டாளி நாட்டை விட்டுக் கொடுக்க வைத்த தீர்மானத்தை நிறைவேற்ற வழி செய்துள்ளார்.
வட கொரியாவின் 90 சதவீத வர்த்தகம் சீனாவுடனே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீர்மானத்தின் போது பேசிய சீனா பிரதிநிதி வட கொரிய மக்கள் மீது இத்தடைகள் எதிர்மறையான பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றார். எனினும் அணு ஆயுதங்கள் அற்ற கொரிய தீபகற்பத்தினை உருவாக்க பேச்சுக்கள் நடத்துவதைத் தூண்டும் என்றார். ரஷ்யாவின் தூதரும் இது முடிவல்ல… அந்நாட்டை பயனுள்ள முறையில் பேச்சு நடத்த வைக்க ஒரு கருவியாக பயன்படும் என்றார்.
வட கொரியாவை ஏவுகணை சோதனைகளிலிருந்து விலகி இருக்கச் செய்ய முடியாது; ஆனால் அணு ஆயுதங்களை தயாரிக்க இருக்காமல் வைக்க முடியும் என்பதுவே டிரம்பின் யோசனை என்று அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அமெரிக்கா நேரடியாக வட கொரியாவுடன் பேசத் தயார் என்று கூறியுள்ளது.
இதனிடையே வருகின்ற ஆசியன் அமைப்பின் கூட்டம் ஒன்றில் வட கொரியாவின் வெளியுறவு அமைச்சருடன் தென் கொரியாவின் அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2015 ஆண்டில் வட-தென்கொரிய நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சு வார்த்தை நின்று போனதிலிருந்து முதல் முறையாக இரு நாடுகளும் பேசவுள்ளன.