12 கோடி ரூபாய் சம்பளம்… புவியை காக்கும் அதிகாரி பணி: விருப்பமுள்ளவர்களை விண்ணப்பிக்க அழைக்கிறது நாசா..!!

நாசாவில் வேலை என்பது அறிவியலில் கடைந்தெடுத்த விஞ்ஞானிகளுக்கே குதிரைக்கொம்பாக இருக்கிறது.

naasa

சில சமயங்களில் அராய்ச்சிகாக மட்டும் வெளியில் இருந்து ஆட்களை பணியில் அமர்த்தும். உதாரணமாக தூங்கும் சோதனை செய்தல், புவி ஈர்ப்பு இல்லாத நிலையில் நடப்பதை பற்றி மனிதர்களை வைத்து சோதனை செய்தல் போன்றவை.

விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம்ஸ் கூற்றின் படி இன்னும் வேற்று கிரக வாசிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அனுமானத்தின் அடிப்படியில் பல விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்த கூற்று.

நிச்சயம் மனித சக்திக்கு மீறிய அல்லது அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது. அதனைஆதாரத்தின் அடிப்படையில் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியாது.

இதனை உணர்ந்த நாசா தற்போது  வேற்றுகிரக நுண்ணுயிர்கள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றிலிருந்து பூமியை பாதுகாப்பதற்காக ‘பூகோள பாதுகாப்பு அதிகாரியை’நாசா தேடி வருகிறது.

இதற்கு பொறியியல் துறையில் பரந்த அனுபவமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ஆகஸ்ட் 14 கடைசி தேதியாகும். இந்த பணிக்கு ஆண்டு சம்பளம் 8 முதல் 12 கோடி ஆகும். வேற்றுகிரக நுண்ணுயிர்களிடம் இருந்து பூமியைக் காப்பது,

விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களால் வேற்று கிரகங்களுக்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது ஆகியன இப்பணியின் நோக்கமாகும்.

செயற்கை கோள் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றிலிருந்து வரும் தகவல்களை கவனிப்பது ஆகியன பூகோளத்தைக் காக்கும் அதிகாரியின் பணி ஆகும்.