8, 17, 26 ஆம் திகதிகளில் பிறந்தோருக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017

மனக்கட்டுப்பாட்டால் வாழ்க்கையில் முன்னேறும் எட்டாம் எண் அன்பர்களே, நீங்கள் கர்ம தொழில்காரகன் சனியை நாயகனாகக் கொண்டவர்கள்.

astro-numo8

சுயமரியாதைக் கருத்துகளால் மக்களைக் கவர்வீர்கள். நற்குணம் உடையவர்கள். பிறருக்காக உழைக்கும் உத்தமசீலர்கள். தோல்வியைத்தான் சந்தித்து வருகிறாமோ என குழம்பி அஞ்சுவீர்கள். தாமரை இலைத் தண்ணீர்போல வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். தங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டு, தீர்வைப்பெற்று வாழ்வில் உடனடியாக உயர்ந்துவிடுவீர்கள். உடல்நலத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிய நோய் என்றாலும் உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்துக்கொள்வது நல்லது. அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்காலும், மதிநுட்பத்தாலும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெறுவது உறுதி. எண்ணற்றவர்கள் போராடி அடையும் வாழ்வின் உச்சக்கட்ட வளர்ச்சியை, நீங்கள் எளிதில் எட்டிவிடுவீர்கள். மனோதிடத்துடன் எந்த இலக்கையும் நோக்கிப் பயணிக்கும் இவர்களுக்கு நேர்மறை நிகழ்வுகள்தான் ஏராளமாக நடக்கும்.

இந்த ராகுகேது பெயர்ச்சியில் முயற்சிகளில் வெற்றியும், குடும்பத்தில் முன்னேற்றமும் உண்டாகும். உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபகாரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பொருளாதாரம் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். கணவன்மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொண்டாலும் முன்னேற்றம் அடையமுடியும். எந்த விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. குடும்ப சூழ்நிலை ஓரளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

பணவரத்தில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும். பொருளாதாரம் தேவைகேற்றபடி இருந்தாலும் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாகக் கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண்பிரச்னைகளை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு, வழக்குகள் உண்டாகி மனசஞ்சலம் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் குறைந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகளுக்கு தடை இருக்காது. நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். பணியில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு அதைக் குறைக்கும். பிறர் விஷயங்களில் தலையிடாமலிருப்பது நல்லது.

எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு தாமதப்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை ஏற்பதே சிறப்பு. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம், அலைச்சலை ஏற்படுத்தும். அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் பெயர், புகழை காப்பாற்றிக்கொள்ள முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்யவேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேடைப் பேச்சுகளில் கவனம் தேவை. உடன் பழகுபவர்களை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்காமலிருப்பது உத்தமம். பெண்களுக்கு உடல்நலத்தில் வயிறு, சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தோன்றிமறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடைகள் ஏற்படும். பணவரத்தில்நெருக்கடி உண்டாகக்கூடிய காலம் என்பதால் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும்.

கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அது தகுதிக்கேற்றதாக இருக்காது. ரசிகர்களின் ஆதரவு குறையாமலிருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடமுடியும். கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் கடன்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவ, மாணவியருக்குக் கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லுமென்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பொதுவாக உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணவு விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முடியும்.

பரிகாரம்:

தினமும் முன்னோர்களை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீகோவிந்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

மரிக்கொழுந்தை தினமும் ஆஞ்சநேயருக்கு சாத்தி வணங்கவும்.

சிறப்பான கிழமைகள்:

திங்கள், புதன், வெள்ளி.

அனுகூலமான திசைகள்:

தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட எண்கள்:

1, 5, 6.