109 பேர்களுடன் எரிந்துபோன எயார் பிரான்ஸ் விமானம்!!

இயற்கை அழிவுகளை காலாகாலமாக பார்த்திருந்தாலும்.. இதுபோன்ற விபத்துக்கள் அவ்வப்போது நெஞ்சுருக வைத்து விடுகின்றன!! 2000 ஆம் ஆண்டு. ஜூலை 25. பரிஸ் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க்கின் ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி இன்னும் சற்று நிமிடங்களில் எயார் பிரான்சின் 4590 விமானம் புறப்பட தயாரானது. அதற்கு முன்னதாக, எயார் பிரான்சின் 4590 விமானம், 1985 ஆம் ஆண்டு பிரான்சுக்கு சேவைக்கு வந்தது.
a-p
பிரான்சில் இருந்து பல நாடுகளுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்துள்ளது. சேவையில் இருந்த எயார் பிரான்சின் விமானங்களில் மிக முக்கியமான விமானம் இது. மிகவும் பாதுகாப்பான விமானமும் கூட. பயணிகள் ஒவ்வொருவராக ஏறுகின்றனர். குறிப்பாக ஜெர்மனியை சேர்ந்த பயணிகள் மிக அதிகம். மொத்தம் 100 பயணிகள், விமானி, விமானப்பணியாளர்கள் 9 பேர் உட்பட மொத்தம் 109 பேருடன் விமானம் பறப்பதற்கு தயாராக இருந்தது. அன்று விமானம் மேலதிகமாக 810 கிலோ எடையை சுமந்திருந்தது.
விமானம் மெல்ல ஓடு பாதையில் முன்னேறியது.. மெல்ல மெல்ல வேகமெடுக்க… பாரத்தை தாங்க முடியாத விமானத்தின் இரு சக்கரங்கள் வெடித்தது… சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்த 4.5 கிலோ எடையுள்ள இரும்பு கம்பி உடைத்து, ஒரு செக்கனுக்கு 140 மீட்டர்கள் எனும் வேகத்தில் பறந்து நேரே விமானத்தின் எரிபொருள் தாங்கியில் ஓட்டை போட்டது!! அதே நொடியில் விமானம் மெல்ல மேலெழும்பி பறக்க ஆயத்தமாகும் போது தான் அந்த விபரீதம் நடந்தது. கண்ணிமைக்கும் நொடியில் விமானம் தீப்பற்றியது. விமானம் மேலெழும்பிய அதே வேகத்தில்,
அருகில் உள்ள Gonesse பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் கூரையை பிய்த்துகொண்டு கீழே விழுந்து வெடித்து எரிந்தது. விமானத்தில் இருந்த 109 பேரும் உடல் கருகி இறந்து போயினர். தவிர விமானம் கீழே விழும்போது தரையில் நின்றிருந்தவர்கள் நால்வர் உயிரிழந்தனர். உணவக ஊழியர்கள் அதுவரை தலைக்கு மேலே விமானம் பறந்ததை பார்த்துள்ளார்கள். தலையில் விமானம் விழுந்தது இதுவே முதன் முறை!! விபத்து, உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பல நாட்கள்.. மாதங்கள் என விசாரணைகள் தொடர்ந்தன.. இறுதியாகவே ‘டயர்’ வெடித்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் பறக்க தயாரானபோது 94 வீதம் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. விமானம் வெடிப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னர் விமானிக்கும் துணை விமானிக்கும் இடையே இடம்பெற்ற சம்பாஷணை பதிவாகியிருந்தது. கண்களை பனிக்கச்செய்யும் அந்த சம்பாஷணை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது.