வெளிநாடொன்றில் கணவனை அடித்துக் கொலை செய்த இலங்கை பெண்!

ve

அவுஸ்திரேலியாவில் கணவனை அடித்துக் கொலை செய்த இலங்கை பெண் வைத்தியர் ஒருவர், அந்நாட்டு உயர் நீதிமன்றத்திடம் சிறப்பு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களில் இருந்து தனது பெயரை நீக்குமாறு குறித்த பெண் வைத்தியர் கோரியுள்ளார்.

2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் தனது கணவரான வைத்தியர் தினேந்திர அத்துகோரலவை சுத்தியலால் அடித்து கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வைத்தியர் சமரி லியனகே என்ற பெண் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மூன்று வருடங்களின் பின்னர் கடந்த மார்ச் மாதம் விடுமுறை அடிப்படையில் அவருக்கு விடுதலை வழங்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, குறித்த பெண் மருத்துவரின் கணவர், சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்தமையாலேயே தன் கணவரை சுத்தியலால் தாக்கி கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் கடந்த ஜுன் மாதம், மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரது தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டினை நிராகரித்தது.

ஆனால் கடந்த வாரம், லியனகேவின் வழக்கறிஞர் George Giudice உயர் நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு ஒன்று கோரி விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தார்.

தனது கட்சிக்காரர் நியமற்ற தண்டனைக்கு உட்படுவதாக குறிப்பிட்டு வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் Geraldton பகுதியில் ஒரு கலை கண்காட்சி நடத்தப்படும், எனினும் சமரி லியனகே அதற்கு அனுமதிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

தனது கணவனைக் கொன்ற குற்றச்சாட்டிற்காக அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டிருந்தார். ஆனால் குடியேற்ற திணைக்களம் லியனகேயின் நிரந்தர வதிவிட நிலையினை மீண்டும் ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது. எனினும் மீண்டும் வைத்தியராக செயற்படுவதே அவரது விருப்பம் என வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.