இன்றைய ராசிபலன் (31.07.2017)

  • மேஷம்

    மேஷம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்தருவார். தொட்டது துலங்கும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

  • கன்னி

    கன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். போராடி வெல்லும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர் களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

  • மகரம்

    மகரம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடிவந்துப் பேசுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாகனப் பழுது நீங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

  • மீனம்

    மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். சந்தேகபுத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.