ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு அருகிலிருந்து வெடி பொருட்கள் …..!

aauthamயாழ்ப்பாணம், காரைநகர், ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு அருகிலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாழடைந்த கிணற்றில் இருந்து வெடி பொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிணற்றை சுத்தப்படுத்தி கொண்டிருந்த பிரதேச மக்கள் முதலில் இராணுவ உபகரணங்களை அவதானித்தவுடன், கடற்படையினரிடம் தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் கடற்படையினர் மற்றும் பொலிஸார் தலையிட்டு அங்கிருந்து 14 கிளேமோர் குண்டுகள், 02 வெடி குண்டுகள் மற்றும் ஒரு அழுத்த குண்டும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வெடி குண்டுகள் மற்றும் இராணுவ உபகரணங்கள் பழையது எனவும் அதனை அழிப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.