மதம் மற்றும் ஆன்மீகத்திற்கு இடையே உள்ள 7 வேறுபாடுகள்

aanmeekam

தேடல் நிறைந்ததே வாழக்கை. நம்மில் பலர் எதையோ தேடி வாழக்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.

நம்முடைய தேடல் புறத்தே உள்ளது. “அகத்தே ஆராய்வதே ஆன்மீகமாகும்” என பல்வேறு ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாம் ஞானிகள் அல்ல. மிகவும் சாதாரண மக்கள். நம்மில் பலர் ஆன்மீகம் என்பதை தவறாக புரிந்து வைத்துள்ளனர். அவர்கள் மதம் அல்லது சில மர்மமான, மற்றும் இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளை ஆன்மீகம் என தவறாக நினைத்துக்கொண்டுள்ளனர்.

மேலும் ஒரு சிலர் இதை ஒரு தனிப் பிரிவு என தவறாக நினைக்கின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் அவர்களுக்கு ஆன்மீகத்தைப் பற்றிய போதிய புரிதல் இல்லாததும் அல்லது அவர்கள் தவறாக வழிநடத்தபட்டதுமே காரணம் ஆகும்.

நாம் இதையெல்லாம் கடந்து உண்மையில் ஆன்மீகம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முயன்றால், ஆன்மீகம் என்பது மர்மமான அல்லது இயற்கைக்கு மீறியது அல்ல என்பதும் அதற்கும் எந்த ஒரு பிரிவிற்கும் இம்மியளவு கூட சம்பந்தம் இல்லை என்பதும் நமக்கு புரிய வரும்.

நாம் இங்கே மதம் மற்றும் ஆன்மீகத்திற்கு இடையே நிழவும் மிக முக்கியமான 7 வேறுபாடுகளைப் பற்றி எடுத்துரைத்துள்ளோம். இது உங்களுக்கு ஆன்மீகம் என்றால் என்ன என்கிற புரிதலைத் தரும் என நம்புகின்றோம். எனவே அகத்தை ஆராய்ந்து பார்க்கும் ஆர்வம் உள்ளவர்களே தொடர்ந்து படியுங்கள்.

மதம் உங்களை தலைவணங்கச் செய்கிறது – ஆன்மீகம் உங்களை சுதந்திரமாகச் செயல்படச் செய்கின்றது . மதம் உங்களை ஒரு சித்தாந்தத்தை பின்பற்றச் சொல்கின்றது. அது உங்களை சில விதிமுறைகளைக்கு உட்படச் சொல்கின்றது. அவ்வாறு செய்யவில்லை எனில் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என அறிவுறுத்துகின்றது.

ஆனால் ஆன்மீகம் நீங்கள் உங்களுடைய இதயம் எதைச் சரி என்று சொல்கின்றதோ அதைப் பின்பற்றுங்கள் என்று அறிவுறுத்துகின்றது. இது உங்களை சுதந்திரமாக நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை ஒருவருக்கும் அல்லது எந்தவொரு சித்தாந்தத்திற்கும் தலை வணங்காமல் உணரச் செய்கின்றது. ஏனெனில் நாம் அனைவரும் ஒன்றே என ஆன்மீகம் கூறுகின்றது. அனைத்திற்கும் மேலாக உங்களை தெய்வீகமாக்கி பெருமை அளிக்கும் வழியைத் தேர்ந்தெடுப்பது என்பது உங்களின் கைகளில்தான் உள்ளது.

மதம் உங்களை பயப்படச் சொல்கின்றது – ஆன்மீகம் நீங்கள் எவ்வாறு தைரியமாக இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது நீங்கள் எவற்றிற்கெல்லாம் பயப்பட வேண்டும் என்பதை மதம் சொல்கிறது. நீங்கள் அவ்வாறு இல்லை எனில் அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் மதம் சொல்கிறது. ஆனால் ஆன்மீகம் விளைவுகளை உணரச் செய்கிறது. ஆனால் இது உங்களுக்கு பயத்தை பற்றி கவலைப் பட வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றது.

ஆன்மீகம் நீங்கள் உங்களுடைய பயத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைத் தெரிவிக்கின்றது. விளைவுகளைப் பற்றி கவலை கொள்ளாமல் உங்களுக்கு எது சரி என்று தோன்றுகின்றதோ அதைச் செய்யுங்கள் என்று ஆன்மீகம் வலியுறுத்துகின்றது. ஆன்மீகம் எவ்வாறு பயத்தால் இல்லாமல் அன்பால் செயல்படவேண்டும் என்பதை உங்களுக்கு போதிக்கின்றது. மேலும் இது பயத்தை எப்படி கட்டுப்படுத்தி அதை சிறந்ததாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் காட்டுகிறது.

மதம் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றது – ஆன்மீகம் நீங்கள் உண்மையக் கண்டறிய உங்களுக்கு உதவுகிறது. மதம் நீங்கள் நம்ப வேண்டியதை மற்றும் சரியானவற்றை மட்டுமே உங்களுக்கு சொல்கிறது. ஆனால் ஆன்மீகம் உண்மையை நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட சொந்த முயற்சியில் கண்டறிந்து அதை முழுவதுமாக புரிந்து கொள்ள உதவுகிறது.

ஆன்மீகமானது உங்களை விட உயர்நிலையில் உள்ளவர்களிடம் ஒரு இணக்கமான முறையில் தொடர்பு கொள்ள உங்களுக்கு உதவுகின்றது. அதன் மூலம் நீங்கள் உண்மை என்ன என்பதை உங்களுடைய சொந்த மனதில் உணர வழி வகுக்கின்றது. ஏனெனில் உண்மை மட்டுமே முழுமையானது மற்றும் அது மட்டுமே எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கின்றது.

மதம் தன்னுடய மதத்தை மற்ற மதங்களில் இருந்து பிரிக்கிறது – ஆன்மீகம் எல்லா மதங்களையும் இணைக்கின்றது. நமது உலகில் பல்வேறு மதங்கள் உள்ளன. அவைகள் அனைத்தும் தங்களுடைய வழியே மிகச் சரியானது என்றும் மற்ற மதங்களின் வழிகள் தவறானது என்றும் போதிக்கின்றன. இதன் மூலம் ஒரு மதமானது பிற மதத்தில் இருந்து தன்னுடைய மதத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றது.

ஆனால் ஆன்மீகமானது பல்வேறு மதங்களில் உள்ள உண்மையை கண்டறிந்து பல்வேறு மதங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை உரக்கச் சொல்கின்றது. ஏனெனில் உண்மை எந்த வடிவில் இருந்தாலும் அது உண்மையே. ஆன்மீகம் ஒவ்வொரு மதத்தில் உள்ள தெய்வீக சக்தியைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்துகின்றது. மதங்களின் வேறுபாடுகளைப் பற்றி சிறிதும் கண்டுகொள்வதில்லை.

மதம் உங்களை சார்ந்திருக்கச் செய்கின்றது – ஆன்மீகம் உங்களை தற்சார்பு உடையவராக்குகின்றது. நீங்கள் ஏதேனும் சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டால் மட்டுமே, நீங்கள் ஒரு மதத்தைச் சார்ந்த நபராக கருதப்படுவீர்கள். அப்பொழுதுதான் நீங்கள் மகிழ்ச்சியை அடையத் தகுதியாவீர்கள் என மதம் தெரிவிக்கின்றது.

ஆனால் ஆன்மீகம் நீங்கள் எப்பொழுதும் மகிழ்ந்திருக்க எதையும் சார்ந்திருக்கத் தேவையில்லை என்று தெரிவிக்கின்றது. மகிழ்ச்சி எப்போதும் நம்முடைய ஆழ் மனதில் காணப்படுகிறது. அதை வெளிக்கொணரும் பொறுப்பு நம்முடையதே என ஆன்மீகம் தெரிவிக்கின்றது. நாம் எதுவாக மாற வேண்டும் என விரும்புகின்றோமோ அதுவாகவே விளங்குகின்றோம் என ஆன்மீகம் தெரிவிக்கின்றது. அதைத் தவிர்த்து மதம் குறிப்பிடுவது போல், மாற்றங்களுக்காக சில நிகழ்வுகள் அல்லது கட்டிடங்களில் இருப்பதால் எப்பொழுதும் ஒரு பிரயோஜனமில்லை. தெய்வீகம் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது. எனவே நாம் அனைவரும் மதிப்பு மிக்கவர்களே.

மதம் தண்டனையைப் பின்பற்றுகின்றது – ஆன்மீகம் கர்மாவை பின்பற்றுகின்றது .

மதம், நீங்கள் சில விதிமுறைகளுக்கு கீழ்ப்படியாமல் போனால், உங்களுடைய நம்பிக்கையின் படி கண்டிப்பாக உங்களுக்கு தண்டனை காத்திருக்கிறது என்று கூறுகிறது.

ஆன்மீகம் நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினை உண்டு என்று கூறுகின்றது. நாம் அனுபவிக்கும் தண்டனை என்பது நாம் ஏற்கனவே புரிந்த செயல்களின் நீட்சியே என நம்மை உணரச் செய்கின்றது. ஆன்மீகம் முற்றிலும் அண்டத்தின் அடிப்படை சக்திகளை நம்பியிருக்கிறது. ஆன்மீகத் தேடலில் ஈடுபடும் நீங்கள் அந்த சக்தி இருப்பது உண்மை என்று நம்ப வேண்டிய அவசியம் இல்லை. மதம் அடுத்தவருடைய பயணத்தைப் பின்பற்றச் செய்கிறது – ஆன்மீகம் உங்களுடைய சொந்தப் பயணத்தை உருவாக்க உதவுகிறது ஒரு மதத்தின் அடித்தளம் என்பது அங்கு வழங்கப்படும் கடவுள் அல்லது கடவுள்கள் பற்றிய கதைகளே. மேலும் அது கடவுளின் ஞானத்தைப் பற்றிய தேடலையும், அவர்கள் எவ்வாறு உண்மையை கண்டறிந்தார்கள் என்பதையும் மிகவும் சுவைபடச் சொல்கின்றது. இத்தகைய கதைகளில் கட்டுறும் நீங்கள் உங்களை அறியாமலே அதைப் பின்பற்ற தொடங்கிவிடுவீர்கள்.

ஆனால் ஆன்மீகமானது ஞானத்தை உங்களுடைய சொந்த முயற்சியில், சொந்த வழியில் தேட உதவுகின்றது. உங்களுடைய உள்ளம் என்ன சொல்கிறதோ அதன் படி உங்களுடைய தேடல் ஆத்மார்த்தமாக அமையுமேயானால், அது இறுதியில் கண்டிப்பாக உங்களுக்கு உண்மையை உணர்த்தும். ஏனெனில் நீங்கள் எந்த வழியில் சென்றாலும் அது உண்மையையே சென்றடையும்.

மதம் அடுத்தவருடைய பயணத்தைப் பின்பற்றச் செய்கிறது – ஆன்மீகம் உங்களுடைய சொந்தப் பயணத்தை உருவாக்க உதவுகிறது ஒவ்வொரு மதமும் ஆன்மீகத்தின் வழித்தோன்றலே. ஒரு நபர் ஆன்மீக வழியில் உண்மையைத் தேடி பயணத்தை மேற்கொண்டு கடவுளாக உருமாறுகின்றார். அந்தப் பயணத்தைப் பற்றிய விபரங்கள் முக்கியமல்ல. அவர்களுடைய பாத்திரம் தான் நாம் உண்மையை கண்டறிய மிக முக்கியமக உதவுகின்றது.

உண்மையை பகிர்ந்து கொள்ளும் செய்திதான் மிகவும் முக்கியமானது. மனித இதயத்தின் தெய்வீகக் குறியீடு நாம் ஒவ்வொருவருக்குள்ளும் சுமூகமாக ஒத்திசைகின்றது. அதன் காரணமாகவே ஒவ்வொரு மதத்திலும் சிறிதளவேனும் உண்மை உள்ளது. அது வேறொன்றும் இல்லை. உண்மையே.