நீதிபதி மீதான துப்பாக்கி பிரயோகம்! சந்தேக நபர் வாக்குமூலம்!

i

நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன்.

அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார்.

நான் சும்மா அவரது பிஸ்டலை எடுத்தேன். அது சுடுபட்டு விட்டது.

இவ்வாறு இன்று காலை சரணடைந்த பிரதான சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.