சந்தேக நபர் கடல்மார்க்கமாக தப்ப முயற்சி! மடக்கிப் பிடித்த பொலிஸார்

arr

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர்மீது கத்திக்குத்து நடத்திய சந்தேக நபர் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முற்பட்டவேளை பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – முகத்துவாரம், கொக்கிளாய் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

நேற்றையதினம் மாலை வேளையில் கடற் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முத்தி அது கைகலப்பில் முடிந்தது. இதன்போது இளைஞர் ஒருவர்மீது மற்றுமொரு இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்தை மேற்கொண்ட இளைஞன் கடல்வழியாகத் தப்பிச் செல்ல முற்பட்டபோது மற்றொரு படகில் சென்ற பொலிஸார் துரத்திச் சென்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுவருவதோடு கத்திக்குத்துக்கு இலக்காகிய இளைஞன் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகச் சொல்லப்படுகிறது.