இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

ch

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், டெங்கு நோய் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டெங்கு நோய் காரணமாக 103,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 250 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெங்கு நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், டெங்கு நோயினால் பாதிக்கப்படக் கூடிய மேலும் அதிகளவு நோயாளர்களை கவனிக்கக் கூடிய ஆற்றலை அதிகரிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோய் நுளம்புகள் மூலம், பரவுவதன் காரணமாக இலங்கைக்கு செல்லும் பயணிகள், நுளம்புக்கடியில் இருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, டெங்கு நோயை கட்டுப்படுத்தக் கூடிய தடுப்பு மருந்துகள் எவையும் அமெரிக்காவில் இல்லை என அந்நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.