ஆதி குணசேகரனாக மாஸ் என்ட்ரி கொடுத்த வேல ராமமூர்த்தி

ஆதி குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மரணத்திற்கு பின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தந்து.

பிரபல நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தான் அடுத்த ஆதி குணசேகரன் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், மற்ற சில நடிகர்களின் பெயர்களும் இதில் அடிபட்டது.

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் புதிய ஆதி குணசேகரனாக நடிக்கவிருப்பதாக வேல ராமமூர்த்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம், எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மறைவால், ஆதி குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என கதையை மாற்றி அமைந்தனர்.

மாஸ் என்ட்ரி
தற்போது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க வந்துவிட்டதால், வீட்டை விட்டு வெளியேறிய ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். அதன் ப்ரோமோ வீடியோ தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது.

இதில் வேல ராமமூர்த்தியின் முகத்தை காட்டவில்லை என்றாலும், அது அவர் தான் என உறுதியாக கூற முடிகிறது. மாரி முத்துவை போல் வேல ராமமூர்த்தியும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் கலக்குவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ

 

கோவை சரளாவின் வாழ்க்கை வரலாறு

ஆச்சி மனோரமாவை போல் சினிமாவில் சாதிக்க வந்த ஒரு காமெடி நடிகை.

கோயம்புத்தூரில் ஏப்ரல் 7ம் தேதி 1962ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு 4 சகோதரிகள் மற்றும் 1 சகோதரன் உள்ளனர். ஆரம்ப வாழ்க்கை நல்ல பேச்சுத் திறமை கொண்ட கோவை சரளா ஒருமுறை எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

அவருடைய திறமைகளைப் பற்றி அறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள், அவரிடம் அவரிடம் ‘உனக்கு நிறைய திறமை இருக்கு.. நீ நல்லாப் படிக்கணும்னு சொல்லி, மேலும் படிப்பதற்காக உதவித் தொகை வழங்கினார்.

அவரை முன்மாதிரியாகக் கொண்ட கோவை சரளா மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தானாகவே வளர்த்துக் கொண்டார்.

திரைப்பயணம்
நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்த கோவை சரளாவிற்கு பாக்யராஜ் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து தனது திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.

அவரது பேச்சு மற்றும் நடிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பாக்யராஜ், 1983ம் ஆண்டு திரைக்கதை எழுதி நடிக்க முந்தானை முடிச்சு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கோவை சரளாவை அறிமுகம் செய்தார்.

அப்படம் நல்ல பெயர் வாங்கிகொடுக்க அடுத்தடுத்து, வைதேகி காத்திருந்தாள்’ (1984), ‘தம்பிக்கு எந்த ஊரு’ (1984)போன்ற படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து, ‘உயர்ந்த உள்ளம்’ (1985), ‘சின்ன வீடு’ (1985), ‘லக்ஷ்மி வந்தாச்சு’ (1985), ‘ஜப்பானில் கல்யாணராமன்’ (1985), ‘வசந்த ராகம்’ (1986), ‘ராஜா சின்ன ரோஜா’ (1989), ‘தங்கமான புருஷன்’ (1989), ‘பாண்டிநாட்டுத் தங்கம்’ (1989), ‘சோலைக் குயில்’ (1989), ‘கரகாட்டக்காரன்’ (1989), ‘மை டியர் மார்த்தாண்டன்’ (1990), ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’ (1990), ‘சின்னவர்’ (1992), ‘திருமதி பழனிச்சாமி’ (1992), ‘எங்களுக்கும் காலம் வரும்’ (1992), ‘மகளிர்க்காக’ (1994), ‘காதலா காதலா’ (1998), ‘பாட்டாளி’ (1999), ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ (1999), ‘பட்ஜெட் பத்மநாபன்’ (2000), ‘கந்தா கடம்பா கதிர்வேலா’ (2000), ‘ஷாஜஹான்’ (2001), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ (2001), ‘என்னமா கண்ணு’ (2002), ‘கோவை பிரதர்ஸ்’ (2006), ‘உளியின் ஓசை’ (2007), எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

இடையில் சில வருடங்களுக்கு பின் நடிக்க வந்த கோவை சரளா இப்போதும் அதே வேகத்துடன் படங்கள் நடிக்கிறார்.

தொலைக்காட்சி
பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோது கோவை சரளா சன் டிவியில் ‘சுந்தரி சௌந்தரி’, கலைஞர் டிவியில் ‘வந்தனா தந்தனா’ மற்றும் ஜெயா டிவியில் ‘சபாஷ் மீரா’ போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார்.

பின்னர், சன் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சியான ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு நடுவராக இருந்தார்.

திருமணம்
நடிகை கோவை சரளா அவர்கள் இன்றுவரை யாரையுமே திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார்.

மேலும், அவர் பல ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கும், வயதானவர்கள் நலனுக்காகவும் பல உதவிகள் செய்து வருகிறார்.

விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001) மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ (2003) என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதுகளையும்’ வென்றுள்ளார்.

மனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவை நாயகியாக திகழும் கோவை சரளா இனியும் நிறைய பட வாய்ப்புகள் பெற்று நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பிரபாஸ் கன்னத்தில் அறைந்த ரசிகை!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் அறியப்படும் ஹீரோவாகிவிட்டார். அதற்கு பிறகு அவர் பல pan இந்தியா படங்களில் நடித்தாலும் பெரிய ஹிட் கொடுக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து அவர் பெரிய படஜெட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அடுத்து கேஜிஎப் இயக்குனர் உடன் பிரபாஸ் கூட்டணி சேர்ந்திருக்கும் சலார் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த படம் வரும் டிசம்பர் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கன்னத்தில் அடித்த ரசிகை
பிரபாஸ் ரசிகை ஒருவர் பொது இடத்தில் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரும் பொறுமையாக அந்த பெண்ணுடன் செல்பிக்கு போஸ் கொடுக்கிறார்.

உணர்ச்சியில் பொங்கிய அந்த பெண் போகும்போது பிரபாஸ் கன்னத்தில் அடித்துவிட்டு சென்றிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

சீரியல் நடிகை நிஷா – கணேஷ் ஜோடிக்கு இரண்டாம் குழந்தை பிறந்தாச்சு

சின்னத்திரை நடிகை நிஷா மற்றும் நடிகர் கணேஷ் வெங்கடராம் இருவரும் 2015ல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நிஷா அதற்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

நிஷா – கணேஷ் ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை 2019ல் பிறந்தது. அவருக்கு சமைரா என பெயர்சூட்டினர்.

இரண்டாம் குழந்தை
இந்நிலையில் இரண்டாவது முறையாக நிஷா கர்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தனர்.

இன்று காலை நிஷாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாய், சேய் இருவரும் இருப்பதாக நலமாக இருப்பதாக கணேஷ் தெரிவித்து இருக்கிறார்.

புகைப்படங்கள் இதோ..

500கோடி பஜ்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்ட படம்

சூர்யா
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வரலாற்று பகுதியும் இருப்பதாகவும், அதை பிரம்மாண்டமாக தயாரித்து வருவதாகவும் படக்குழு கூறி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சூர்யா ஹிந்தியில் பிரம்மாண்டவரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கர்ணா
மகாபாரத கதையை மையப்படுத்தி கர்ணா என்ற படத்தை Rakeysh Omprakash Mehra இயக்க இருக்கிறார். அதில் தான் சூர்யா ஒப்பந்தம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் 500 கோடி ரூபாய் படஜெட்டில் உருவாக இருக்கிறதாம். சூர்யா தற்போது கைவசம் இருக்கும் வாடிவாசல், சுதா கொங்கரா படம் ஆகியவற்றை முடித்தபிறகு இந்த படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவிற்கு செக் வைத்த முத்து!

சிறகடிக்க ஆசை சீரியல் தான் இப்போது விஜய் டிவியில் நம்பர் 1 தொடராக இருக்கிறது. பாக்கியலட்சுமி உள்ளிட்ட மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது.

தற்போது மாமியார் விஜயா தனது இரண்டாவது மருமகள் ரோகிணி பணக்கார வீட்டு பெண் என நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது உண்மை முகம் தெரியவந்தால் தான் மாமியார் நிலைமை என்ன ஆகுமோ.

அடுத்த வார ப்ரோமோ
அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. மூன்றாவது மகன் ரவிக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு பெண் வீட்டாரை வர சொல்லி இருக்கிறார் விஜயா.

அவர்கள் வரும் நேரத்தில் மீனா அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும், மேலும் முத்து வீட்டில் இருக்க கூடாது எனவும் கூறுகிறார்.

அதை கேட்டு டென்ஷன் ஆகும் முத்து ‘நான் இங்கே தான் இருப்பேன்’ என கூறுகிறார். மேலும் வர போகும் பெண் யார் என்பது அடுத்த வாரம் தான் தெரிய வரும். ப்ரோமோ இதோ..

பட புரமோஷன்களில் நயன்தார கலந்து கொள்ளாமைக்கு இதுதான் காரணமாம்

நயன்தாரா
நடிகை நயன்தாரா என்னதான் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தாலும், அவர் பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்வதில்லை என்கிற விமர்சனம் அவர் மீது இருந்து வருகிறது.

நயன்தாரா ஹிந்தியில் நடித்த ஜவான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளவில்லை. இது பற்றி பாலிவுட் மீடியாக்கள் கூட கேள்வி எழுப்பிய நிலையில், ஷாருக் கான் பல்வேறு காரணங்களை கூறி கேள்விகளை சமாளித்தார்.

ஏன் வருவதில்லை..
நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து அழகு சாதன பொருட்கள் விற்கும் பிராண்ட் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதன் அறிமுக விழா மலேசியாவில் சமீபத்தில் நடந்தது. அதில் நயன்தாரா கலந்துகொண்டார்.

பட ப்ரோமோஷனில் மட்டும் நயன் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது ஏன் என்கிற காரணத்தை விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார்.

“படம் நன்றாக இருந்தால் அதுவே promote செய்துகொள்ளும். That’s her inner belief” என்று அவர் கூறி உள்ளார்.

அதிரடி முடிவு எடுத்துள்ள விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி
இயக்குனர் எஸ்ஏசியின் சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பின் கடந்த 2012ம் ஆண்டு நான் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

பிச்சைக்காரன் என்ற படம் அவருக்கு நடிகருக்கான பெரிய அந்தஸ்தை கொடுத்தது என்றே கூறலாம். நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் காட்டி வருகிறார்.

அடுத்த பிளான்
வரும் அக்டோபர் 6ம் தேதி விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, சமீபத்தில் நடந்த எனது இசைக் கச்சேரி மூலம் ஒரு விஷயத்தை புரிந்துகொண்டேன்.

இசைக் கச்சேரி மூலம் இசையமைப்பாளராக தற்போதும் தன்னை ரசிகர்கள் அதிகமாக விரும்புவதை எடுத்துக் காட்டியுள்ளதாகவும் அதனால் பெரிய நடிகர்களின் படங்களுக்கு பிஜிஎம் இல்லாமல் பின்னணி பாடல்களை மட்டும் எடுத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வருங்காலத்தில் நடிப்பு மற்றும் இசையமைப்பது என இரண்டிலும் கவனம் செலுத்த முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை

நயன்தாரா
நடிகை நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் இறைவன் திரைப்படம் வெளிவந்தது. ஆனால், இப்படத்தில் இவருக்கு பெரிதும் ஸ்கோப் இல்லை என பல விமர்சனங்கள் வெளிவந்தன.

அடுத்ததாக மண்ணாங்கட்டி, நயன்தாரா 75, டெஸ்ட் என பல படங்களை நடிகை நயன்தாரா கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், ஒரு படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா தற்போது ரூ. 10 கோடி முதல் ரூ. 11 கோடி வரை சம்பளமாக வாங்கி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இதன்மூலம் இவர் தான் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகை.

நயன்தாராவை மிஞ்சிய திரிஷா
ஆனால், தற்போது நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் இடத்தில் திரிஷா இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. லியோ, விடாமுயற்சி என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வரும் திரிஷா அடுத்ததாக கமல் – மணி ரத்னம் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிக்க நடிகை திரிஷாவிற்கு ரூ. 12 கோடி சம்பளம் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகை திரிஷா தான் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆதி குணசேகரன் இவர் தான்

ஆதி குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம் எவ்வளவு பெரிய வலியமான ரோல் என்பதை தமிழக ரசிகர்கள் அறிவார்கள். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது நடிகர் மாரிமுத்து தான்.

ஆம், இயக்குனரின் சொல்லையும் தாண்டி தன்னுடைய உடல் மொழியாலும், ஏம்மா ஏய் போன்ற வசனங்களிலாலும் ஆதி குணசேகரனாக வாழ்ந்தவர் மாரிமுத்து.

இவருடைய இறப்புக்கு பின் யார் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தது. முதலில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரனாக நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது.


இனி இவர் ஆட்டம் தான்
அதன்பின், மற்ற சில நடிகர்களின் பெயர் கூட அடிபட்டது. ஆனால், தற்போது உறுதியாக வெளிவந்துள்ள தகவலின்படி, இனி ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் வேல ராமமூர்த்தி தான் நடிக்கவுள்ளாராம்.

பொறுத்திருந்து பார்ப்போம் புதிய ஆதி குணசேகரனின் என்ட்ரி எப்படி இருக்க போகிறது என்று.

லெஜண்ட் சரவணன் இத்தனை கோடிக்கு சொந்தகாரரா?

லெஜண்ட் சரவணன்
தொழிலதிபர் சரவணன் கடந்த ஆண்டு வெளிவந்த தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தையே பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டு இருந்தார்.

இப்படத்தை ஜெடி – ஜெரி இயக்கியிருந்தார். ஊர்வசி ரவுடேலா, விவேக், யோகி பாபு, விஜயகுமார், சுமன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சமீபத்தில் கூறியுள்ளார். அதற்கான பணிகள் தான் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படத்தை இயக்கப்போவது யார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணனின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 6000 கோடி இருக்குமாம்.

ஒரு நாளைக்கு மட்டுமே தனது தொழில் மூலம் ரூ. 1.5 கோடி வரை சம்பாதித்து வருகிறாராம் லெஜண்ட் சரவணன்.

மேலும் Rolls Royce G host ரூ. 8 கோடி, Ferrari 488 GTB- ரூ. 3.68 கோடி, Rolls Royce Wraith- ரூ. 5 கோடி, Lamborghini Huracan- ரூ. 3.73 கோடி, Rolls Royce Phantom- ரூ. 10 கோடி உள்ளிட்ட இனி பல கோடி மதிப்பிலான பல கார்களை சொந்தமாக வைத்துள்ளாராம்.

விவாகரத்தால் நொறுங்கி போன இமான்

டி.இமான்
திரைப்பட இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருந்து வருபவர் டி இமான். இவர் அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு 2008 -ம் ஆண்டு ஏப்ரலில் திருமணம் நடந்தது. முதல் திருமணத்தில், எனக்கு இரு குழந்தைகள் உள்ளன. என்னுடைய உயிர் உள்ள வரை அவர்கள் மீது உள்ள பாசம், கொஞ்சம் கூட குறையப்போவதில்லை.

அந்த மணமுறிவுக்குப் பின்னர் நான் பெரிய மன அழுத்ததிற்குள் சென்றேன். என்னால் வேலையே செய்ய முடியவில்லை. நான் அப்படி இருந்ததே கிடையாது. என்னுடைய வாழ்கையில் இசையும், ஆன்மிகமும் இல்லாமல் போயிருந்தால், இந்த நேரம் இமானின் இரங்கல் செய்தி உங்களை வந்தடைந்து இருக்கும்.

விவாகரத்து
குழந்தைகள் திடீரென்று ஒரு நாள், இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நொறுங்கி விட்டேன். அந்த வலியை, வேதனையை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கடந்த 3 வருடங்களாக அவர்களது வாயில் இருந்து அப்பா என்ற வார்த்தையை கேட்கவேயில்லை.

ஆனால், அமலியின் குழந்தை என்னை அப்பா… அப்பா.. என்று கூப்பிட்டு தினமும் 1000 முறை எனக்கு பதக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள். யாருமே, விரும்பிச் சென்று விவாகரத்தை பெறப்போவதில்லை. அந்த சூழ்நிலையில் இருந்து, அந்த ஆணி மீது உட்கார்ந்து பார்த்தால்தான் தெரியும்

நான் என்னை நினைத்து பெருமை படுகிற விஷயம்.. நான் புகைப்பிடித்தது கிடையாது. மது அருந்தியது கிடையாது. எந்த பெண்ணின் பின்னாலும் சென்றது கிடையாது. என்னிடம் பெண்ணுடன் உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகர் தனுஷ்
தந்தை, அண்ணன் உதவியுடன் சினிமாவில் அறிமுகமானாலும் நாயகன் என்ற பெயர் எடுக்கவே பல கஷ்டங்களை அனுபவித்தவர் தனுஷ்.

ஆரம்பத்தில் இவரை ஏற்றுக்கொள்ளாத சினிமாவில் தனது முழு திறமையை வெளிக்காட்டி இப்போது இவர் பெயர் அடிபடாத நிகழ்ச்சியே இல்லை என்ற அளவிற்கு வளர்ந்துவிட்டார்.

கோலிவுட்டை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என சாதனை நிகழ்த்தியுள்ளார் தனுஷ். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷின் நடிப்பில் அடுத்து கேப்டன் மில்லர், D50 படங்கள் வெளியாக இருக்கின்றன.

சொத்து மதிப்பு
கடந்த சில ஆண்டுகளாகவே தனுஷின் சொத்து மதிப்பு உயர்ந்துகொண்டே வருகிறது. ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியவில் தனுஷ் 6 முறை இடம் பெற்றிருக்கிறார். தனுஷ் தற்போது ரூ. 20 முதல் 30 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

தயாரிப்பு நிறுவனம் Wunderbar Films மூலம் இதுவரை 19 படங்களை தயாரித்துள்ளார், இதன்மூலம் நிறைய லாபத்தையும் பெற்றுள்ளார்.

ரூ. 150 கோடி செலவில் போயஸ் கார்டனில் தனுஷ் ஒரு சொகுசு வீடும் கட்டியுள்ளார்.

ரூ. 45 லட்சம் மதிப்புள்ள Jaguar XE, ரூ. 75 லட்சம் மதிப்புள்ள Ford Mustang, ரூ. 1.65 கோடி விலையுள்ள Audi A8 உட்பட பல சொகுசு கார்களை அவர் வைத்திருக்கிறார். இவை தவிர ரூ. 3.40 கோடி) மதிப்புள்ள Bentley Continental Flying Spur மற்றும் ரூ. 7 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost , ரூ.1.50 கோடி மதிப்புள்ள Range Rover Sport HSE’ ரூ. 1.42 கோடி மதிப்புள்ள Mercedes-Benz S-Class S350 ஆகிய ஆடம்ப கார்களையும் தனுஷ் வைத்திருக்கிறார்.

மொத்தமாக நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு ரூ. 250 முதல் ரூ. 300 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.

முடிவடைந்தது காற்றுக்கென்ன வேலி சீரியல்

காற்றுக்கென்ன வேலி
இளைஞர்கள் கொண்டாடும் வகையில் சீரியல்கள் வருவது என்பது அழகு தான்.

கல்லூரி, அழகிய ஜோடி, ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு நாயகி, இளமை துள்ளும் வகையில் கதைக்களம் என எல்லாம் அமைந்த தொடராக விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது காற்றுக்கென்ன வேலி சீரியல்.

ரமேஷ் என்பவரின் இயக்கத்தில் தயாரான இந்த தொடரில் நாயகன் மாற்றம் அடைந்த பின்பும் வெற்றிகரமாக ஓடியது. 809 எபிசோடுகளோடு தற்போது சீரியல் முடிந்துள்ளது.

கடைசி எபிசோட்
போதை கடத்தல் வழக்கில் வெண்ணிலா சில சூழ்ச்சியால் கைதாக அவர் தவறு ஏதும் செய்யாதவர் என்பதை நிரூபிக்க சூர்யா நிறைய முயற்சிகள் எடுத்து வந்தார்.

இன்றைய எபிசோடில் வெண்ணிலா குற்றம் செய்யாதவர் என்பது நிரூபிக்கப்பட அவரது குடும்பம் சந்தோஷம் அடைகின்றனர்.

பின் வெண்ணிலா தனது வெற்றிகரமாக பரீட்சைகள் எழுதி IAS ஆனதாக தொடர் முடிக்கப்படுகிறது.

ஆனால் ரசிகர்கள் தொடரை முடித்திருக்க கூடாது, இன்னும் சூப்பரான கதைக்களத்துடன் தொடரை முடித்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay TV Express (@vijaytvexpresss)

லவ் டுடே பட நடிகை பிக்பாஸ் 7ல்

ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் தற்போது பிக் பாஸ் 7ம் சீசன் தொடக்கத்திற்காக தான் காத்திருக்கின்றனர். நாளை அக்டோபர் 1ம் தேதி இந்த ஷோ படுபிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது.

பிக் பாஸ் 7ல் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என பல்வேறு தகவல்கள் கடந்த பல வாரங்களாகவே பரவி வருகின்றன.

லவ் டுடே நடிகை
தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இளைஞர்களை அதிகம் கவர்ந்த லவ் டுடே படத்தில் நடத்த நடிகை பிக் பாஸ் வருகிறாராம்.

இவானாவுக்கு தங்கை ரோலில் நடித்து இருந்த அக்ஷயா உதயகுமார் தான் பிக் பாஸ் 7ம் சீசனுக்கு வர இருக்கிறார்.

சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் பிரபல நடிகை

நயன்தாரா
அஜித் எப்படி தனது சினிமா பயணத்தில் தனி பாதையை அமைத்து செயல்பட்டு வருகிறாரோ அதேபோல் தான் நடிகை நயன்தாரா.

சினிமாவில் ஒரு படம் நடித்தால் வழக்கமாக செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளது, அதனை செய்து காட்டாமலும் சக்சஸ் காட்டி வருகிறார் நடிகை. ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தெலுங்கு, மலையாளம் என 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இப்போது அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். படங்களை நடிப்பதை தாண்டி நயன்தாரா நிறைய தொழில்களையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகையின் விமானம்
நடிகை நயன்தாரா பிரைவேட் ஜெட் விமானத்தை வைத்துள்ளார், அதன் சில புகைப்படங்களும் இதற்கு முன் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.

ஜெட் விமானத்தை வைத்திருக்கும் எலைட் நடிகைகளின் குழுவில் நயன்தாராவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை நயன்தாரா வைத்திருக்கும் ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பின்பு சீரியலில் நடிக்க வந்துள்ள ரம்யாகிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன், படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து வயதானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகவில்லை என்று கூறுவார்.

அந்த வசனம் இவருக்கும் பொருந்தும், 53 வயதாகும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இப்போது யங் ஆக காணப்படுகிறார்.

கடைசியாக ரம்யா கிருஷ்ணன், ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அப்படத்தை தொடர்ந்து வேறு படங்களில் நடிப்பார் அறிவிப்பு வரும் என்று பார்த்தால் இப்போது சின்னத்திரையில் இவர் நடிக்க வந்துள்ளது குறித்து செய்தி வந்துள்ளது.
புதிய தொடர்
நடிகை ரம்யா கிருஷ்ணன் கலசம், தங்கம், ராஜகுமாரி, வம்சம் என நிறைய தொடர்கள் நடித்துள்ளார். கடைசியாக தெலுங்கில் Naga Bhairavi என்ற தொடரில் நடித்துள்ளார்.

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் நள தமயந்தி என்ற தொடரில் நடிக்க வந்துள்ளார். சீரியலில் அவர் நடிக்கும் காட்சிகள் புகைப்படமாக வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

சித்தா திரைப்படம்!.. முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

சித்தா
நடிகர் சித்தார்த் நடிப்பில் பிரபல இயக்குநர் SU.அருண் குமார் இயக்கத்தில் சித்தா திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஹீரோயினாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.

இப்படத்தை சித்தார்த்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ETAKI எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.

வசூல்
எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானது இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சித்தா திரைப்படம் முதல் நாளே ரூபாய் 1.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிரபல தொலைக்காட்சியில் ஹிட் சீரியல் நாயகிகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சன் டிவி
சீரியல்களுக்கு என்று பெயர் போன தொலைக்காட்சிகளில் ஒன்று தான் சன். இதில் படங்கள் அதிகம் வருகிறதோ இல்லையோ, சீரியல்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

காலை 10 முதல் இரவு வரை ஒளிபரப்பாகிறது, 3 மணி நேரத்திற்கு ஒரு படம் மட்டும் ஒளிபரப்பாகும்.

ஒரு சீரியல் TPRயில் டாப்பில் வந்தாலோ அல்லது விறுவிறுப்பின் உச்சமாக ஒரு கதைக்களம் அமைந்தாலோ அந்த தொடர் சிறப்பு காட்சியாக 1 மணி நேரம் எல்லாம் ஒளிபரப்பாகிறது.

கயல், எதிர்நீச்சல், வானத்தைப் போல என பல சீரியல்கள் தொடர்ந்து வெற்றிகரமாக TRPயில் டாப்பில் இருந்து வருகிறது.

சம்பள விவரம்
சரி இப்படி டாப் சீரியல்களான கயல், எதிர்நீச்சல், இனியா என தொடர்களில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விவரத்தை காண்போம்.

சைத்ரா ரெட்டி- ரூ. 20,000
கேப்ரியல்லா- ரூ. 12,000
ஆல்யா மானசா- ரூ. 20,000
ஜனனி- ரூ. 20,000
பாப்ரி கோஷ்- ரூ. 10,000