தேசிய பாதுகாப்பினருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு சபை வியாழக்கிழமை (19) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குதல் என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

மேலும் , தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

யாழில் பதிவுத் திருமணம் இடம்பெற்ற சில மாதங்களில் யுவதிக்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் பதிவுத்திருமணம் செய்து ஒன்பது மாதங்களில் இளம் பெண் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவத்தில் பண்டத்தரிப்பு காலையடி பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வரும் இளைஞர் ஒருவரை ஒன்பது மாதங்களுக்கு முன்னர் யுவதி பதிவுத்திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் நுரையிரலில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பெற்று வந்தார். எனினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

விடுதி ஒன்றில் சிக்கிய இளம் ஜோடி!

விடுதியொன்றின் அறையொன்றில் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த இளம் ஜோடி இன்று (19) கைதுசெய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெலும்மஹர வெலிவேரிய வீதி பகுதியிலுள்ள விடுதி ஒன்றிலேயே ஜோடிகள் கைது செய்யப்படுள்ளனர்.

சந்தேக நபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது சந்தேக நபரிடம் 26 கிராம் 250 மில்லி கிராம் போதைப்பொருள் இருந்ததாகவும், யுவதியிடம் 3500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பகஸ்பிட்டிய, கந்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை கைதான சந்தேகநபர் ஹிரியால பொலிஸாரினால் இதற்கு முன்னர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவர் என்றும், அவிசாவளை மீகஹா கொடல்ல பிரதேசத்தைச் 22 வயதுடைய யுவதி தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் மக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் பிரச்சார நடவடிக்கைகள் முடிந்தாலும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட நடவடிக்கை
அதற்கமைய, குறிப்பாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தனியான சேவை ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலின் போதும் அதன் பின்னரும் உளவுத்துறையினர் தேவையான முழுமையான சோதனைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக எந்தவொரு தகவல் கிடைத்தாலும் அவதானம் செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானம் செலுத்தி வருவதாகவும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களை தேடுவதற்கு சமூக ஊடக நிறுவனங்களின் உதவியை நாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து இது தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தளபதி 69 படத்தில் இணையும் மாஸ் வில்லன் நடிகர்

தளபதி 69
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவரவிருக்கும் திரைப்படம் தளபதி 69. GOAT படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் இப்படத்தை ஹெச். வினோத் இயக்கவுள்ளார்.

விஜய் – ஹெச். வினோத் இருவரும் முதல் முறையாக இப்படத்திற்காக இணைகின்றனர். மேலும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சமீபத்தில் தான் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவந்த நிலையில் அடுத்த மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மேலும் அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கத்தி, பீஸ்ட், மாஸ்டர், லியோ படங்களை தொடர்ந்து ஐந்தாவது முறையாக விஜய்யுடன் கைகோர்த்துள்ளார் அனிருத். கண்டிப்பாக பாடல்களும், பின்னணி இசையும் மாஸாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இப்படத்தில் மமிதா பைஜூ, சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள் என சொல்லப்பட்டது. அதே போல் சமீபத்தில் வெளிவந்த தகவலில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகி என கூறினார்கள். அதே போல் படத்தின் வில்லன் குறித்தும் சமீபத்தில் தகவல் வெளிவந்தது. பாலிவுட் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் பாபி தியோல் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்கின்றனர். ஆனால், கதாநாயகி மற்றும் வில்லன் குறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

முக்கிய கதாபாத்திரத்தில் இவரா
இந்த நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விஜய் – பிரகாஷ் ராஜ் கூட்டணியில் கில்லி, சிவகாசி, வில்லு, போக்கிரி, வாரிசு ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் ஜீ தமிழின் முன்னணி தொகுப்பாளர்

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் கிட்டதட்ட 20 போட்டியாளர்கள் பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் ஒரே வீட்டில் தங்கவைக்கப்படுவார்கள்.

விஜய் டிவியின் தொடர்களின் நடிகர்கள், நடிகைகள், தொகுப்பாளர்கள், காமெடியன்கள் என பலரும் இதில் கலந்துகொள்வார்கள். அதே போல மற்ற சேனல்களின் பிரபலங்களும் பிக் பாஸ் வருவது உண்டு.

தற்போது ஜீ தமிழில் தொகுப்பாளராக இருக்கும் மிர்ச்சி விஜய் பிக் பாஸ் 8க்கு போட்டியாளராக செல்கிறார் என ஒரு தகவல் சமீபத்தில் பரவியது.

அது பற்றி அவரே சினிஉலகத்திற்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். “நான் பிக் பாஸ் எல்லாம் போகவில்லை. ஜீ தமிழில் தான் தொடர்ந்து இருப்பேன்” என அவர் கூறி இருக்கிறார்.

14 நாள் முடிவில் விஜய்யின் கோட் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்..

விஜய்யின் கோட்
விஜய்யின் கோட், பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி படு மாஸாக வெளியானது.

வெங்கட் பிரபு முதன்முதலாக விஜய்யை வைத்து இப்படம் இயக்கியுள்ளார், அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா படம் போல் இந்த படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

மக்கள் எதிர்ப்பார்த்த அளவு வந்ததா என்பதை பாக்ஸ் ஆபிஸ் கண்டே புரிந்திருக்கும்.

ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.

சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

பாக்ஸ் ஆபிஸ்

நாளுக்கு நாள் படத்தின் வசூல் வேட்டை குறித்த தகவலை நாம் பதிவிட்ட வண்ணம் உள்ளோம். கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து படத்தின் வசூல் விவரங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

விஜய்யின் கோட் வெளியாக 14 நாட்கள் ஆன நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 191 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

வாக்குச்சாவடிக்குள் நுழைய தகுதியானவர்கள் தொடர்பில் வெளியாகிய செய்தி!

எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளுக்குள் நுழைய அங்கீகரிக்கப்பட்ட நபர்களை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அந்தந்த வாக்குச் சாவடியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்குச் சாவடி பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்படுவர் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள், அவர்களது தேர்தல் முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், பிரதேச முகவர்கள் மற்றும் முறையாக நியமிக்கப்பட்ட வாக்களிப்பு முகவர்கள் ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் அல்லது வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த தேர்தல் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் சட்டவிரோத செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தொலைபேசிகளை பயன்படுத்துதல், புகைப்படம் எடுப்பது, காணொளி பதிவு செய்தல், துப்பாக்கி வைத்திருப்பது மற்றும் புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் ஆகியவை சட்டவிரோத செயல்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மது அல்லது மற்ற போதைப்பொருளின் போதையில் இருக்கும்போது மையங்களுக்குள் நுழைவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களில் மகிழ்ச்சி தகவல்!

இரண்டு வாரங்களுக்குள் நாடு உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்றையதினம் (18) இடம்பெற்ற “இயலும் சிறிலங்கா” பொது கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடந்தும் அவர் அங்கு தெரிவித்ததாவது, “ஐ.எம்.எஃப், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் நான் கலந்துரையாடினேன். எங்களைப் போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாட்டிற்கு ஏற்ற ஒரு ஒப்பந்தத்தை எட்டினோம்.

இப்போது வங்குரோத்து நிலையை அகற்ற மூன்றாவது குழுவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அந்த தனியார் பங்குகளும் நாளைக்குள் முடிவடையும்.

நான் இந்த நாட்டின் வங்குரோத்து நிலையை நீக்கும் அதிகாரபூர்வ நிலையை அடைந்துவிட்டேன்.

இந்த விடயங்களை மாற்ற மாட்டொம் என ஐ.எம்.எஃப் மேலாண்மை இயக்குனர் கூறினார், தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரத்தில் அவர்கள் இந்த வேலைத்திட்டங்களை நிறைவு செய்து விடுவார்கள்.” என்றார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை
இதற்கமைய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பலத்த காற்று
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

இன்றைய ராசிபலன்கள் 19.09.2024

மேஷ ராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். அம்பிகையை வழிபட, நல்ல திருப்பங்கள் ஏற்படும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப் பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாலட்சுமி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பணிகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர் களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சிவபெருமானை வழிபட்டு நாளைத் தொடங்க, அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தடைப்பட்ட பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். சிலருக்குக் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரி களின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சரபேஸ்வரர் வழிபாடு நன்று.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

கன்னி ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு சகோதரர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். விநாயகப்பெருமானை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் பொறுமை அவசியம்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

துலா ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களால் சங்கடங்கள் உண்டாகும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நன்று.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரின் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சலனம் ஏற்படக்கூடும். பைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியா பாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். லட்சுமி நரசிம்மரை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை. அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத் தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலின் காரணமாக உடல் அசதி உண்டாகும்.

கும்பராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும், உரிய சிகிச்சையினால் உடனே நிவாரணம் கிடைத்து விடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.

மீனராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல் படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண் டாகும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியா பாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும். இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் நீங்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் நீக்கம்!

இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளில் 3 வினாக்களை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் பகுதி வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

வாக்காளர் அட்டை கிடைக்காதோர் தபால் நிலையத்தில் பெற்றுக்கொள்க!

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று (18) முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். கடற்றொழில் சம்மேளனம் ரணிலுக்கு ஆதரவு!

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதவு வழங்கவுள்ளதாக யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

பேருந்து சில்லுக்குள் சிக்கி பெண்பலி!

பேருந்து சில்லுக்குள் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (18.9.2024) அதிகாலை நாவலமுல்ல – மீகொடை வீதியில் சிரிமெதுரவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மீகொடதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

புலமைப்பரிசில் வினாத்தாள் நீக்கம் பரீட்சை திணைக்களத்தில் பெற்றோர் ஆர்பாட்டம்!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பரீட்சை திணைக்களத்துக்கு முன்பாக பெற்றோர் இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது, எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்சிலர், பரீட்சை திணைக்களத்துக்கு சென்று கடிதம் ஒன்றை வழங்கி உள்ளனர்.

கனேடிய அரசிக்கு எதிராக நம்பிக்கையில்ல பிரேரணை!

கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என பொலியேவ் தெரிவித்துள்ளார்.

லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த என்.டி.பி கட்சி ஆதரவு வழங்குவதை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பில் கலந்துரையாடல் !

காங்கேசன்துறையில் (Kankesanturai) சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (18) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (B.S.M. Charles) தலைமையில், அவரது செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தாது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை கொண்டு சீமெந்து தயாரித்து பொதி செய்து உள்நாட்டு தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலைக்கான முதலீட்டை மேற்கொள்ளவுள்ள ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சீமெந்து தொழிற்சாலை
இந்திய (India) முதலீட்டில் மேற்கொள்ளவுள்ள சீமெந்து தொழிற்சாலையில் அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும், இதனூடாக உள்ளூர் மக்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர்கள தெரிவித்துள்ளனர்.

நிதி மூலம், தொழிற்சாலையை நிறுவுவதற்கான காணி கோரிக்கை, மூலப்பொருட்களின் இறக்குமதி, விற்பனை செயற்பாடுகள், செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கான கால எல்லை மற்றும் சுற்றாடல் அறிக்கை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அடங்கிய முழுமையான முன்மொழிவு திட்டத்தை விரைவாக சமர்பிக்குமாறு தெரிவித்த ஆளுநர் , உரிய நடைமுறைகளை பின்பற்றி அதனை சாதகமான முறையில் பரிசீலிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த கலந்துரையாடலில் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் யாழ் பிராந்திய சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் எ.ஆர். ஜெயமனோன் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சாதி ஒடுக்குமுறை தொடர்பில் நாமல் குற்றச்சாடு!

வடக்கில் சாதி ஒடுக்குமுறைமை காரணமாக இந்துக்களை உள்ளே அனுமதிக்காத சில கோயில்கள் இருக்கின்றன. அது அரசாங்க முறைமையினால் ஏற்பட்ட பிரச்சினையல்ல, மாறாக அது வடக்கின் கலாசார ரீதியிலான பிரச்சினையாகும் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மத சுதந்திரம் கொண்ட நாடு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உல­க­ளா­விய ரீதியில் உயர் வரு­மானம் பெறும் சில நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் உயர் மத சுதந்­தி­ரத்தைக் கொண்­டி­ருக்கும் நாடு­களில் ஒன்­றாக இலங்கை இருக்­கி­றது.

பௌத்­தர்­களும் இந்­துக்­களும் பல நூற்­றாண்டு கால­மாக அமை­தி­யாக ஒரு­மித்து வாழ்ந்து வரு­கின்­றனர். பௌத்த விகா­ரை­களை பாருங்கள் அவற்­றுக்குள் இந்து வழி­பாட்டு பகு­திகள் உள்­ளன.

தெற்கில் உள்ள இந்து கோயில்­களில் அவர்­க­ளது பண்­டி­கை­களை கொண்­டா­டு­வ­தற்­கான சுதந்­திரம் உள்­ளன.

மோதல்கள் தொடர்பில் ஆங்­காங்கே சில சம்­ப­வங்கள் எப்­போதும் இருக்கும் சட்­டங்கள் மற்றும் தண்­ட­னை­களின் ஊடாக மாத்­திரம் எம்மால் ஒரு முழு நிறை­வான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.

மத தலை­வர்­க­ளுக்கு அவர்­களை பின்­பற்­றுவோர் மத்­தியில் நம்­பிக்­கைகள் சார்ந்த பரஸ்­பர புரிந்­து­ணர்வு மற்றும் சகிப்புத் தன்­மையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய பொறுப்­புண்டு. வடக்கை பாருங்கள். அங்கே சாதி ஒடுக்­கு­மு­றைமை கார­ண­மாக இந்­துக்­களை உள்ளே அனு­ம­திக்­காத சில கோயில்கள் இருக்­கின்­றன.

அது அர­சாங்க முறை­மை­யினால் ஏற்­பட்ட பிரச்சி­னை­யல்ல மாறாக அது வடக்கின் கலா­சார ரீதி­யி­லான பிரச்­சி­னை­யாகும். அதனை இந்து மத தலை­வர்­களே தீர்க்க வேண்டும். அதில் அர­சாங்கம் தலை­யிட்டால் அவர்கள் தமது மத சுதந்­திரம் பறிக்­கப்­ப­டு­வ­தாக கூறுவார்கள்.

நாம் அர­சாங்கம் என்ற ரீதியில் அர­சி­ய­ல­மைப்பில் கூறப்­பட்­டுள்­ள­வாறு அனைத்து பிர­ஜை­க­ளுக்­கு­மான மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தி பாது­காப்போம். இது குறித்த தனித்த பிரிவு எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ளது என குறிப்பிட்டுள்ளார்.