பாடசாலை நேரம் நீடிப்பு!

முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்களில் திருத்தம் செய்யப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, பாடசாலை நேரம் அரை மணி நேரம் நீட்டிக்கப்படும் என்று கல்விச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தென் மாகாணத்தில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நேற்று (19) காலியில் கலந்து கொண்டபோது அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பாக கல்வி அமைச்சு, வழிகாட்டியாக தொகுதி நேர அட்டவணைகளை வழங்கும் என்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் தொடர்பில் அம்பலமாகியுள்ள பல விடயங்கள்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் (Pillayan) தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala ) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற விடயத்தை நான் அண்மையில் நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கமைய, நீதிமன்றத்துக்கு கண்டறியப்பட்ட விடயங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றில் அவற்றை முன்வைத்ததன் பின்னர், நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேநேரம், ஏற்கனவே விசாரணைகளில் வெளிவந்த அல்லது கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றுக்கு முன்வைக்க வேண்டியுள்ளது.

இந்தநிலையில், தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், விசாரணைகளில் கண்டறியப்பட்ட சில விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நிலநடுக்கம்!

ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கடற்கரைக்கு அருகில் இன்று (20) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள யூரோ மத்திய தரைக்கடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஆரம்பத்தில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அதனை அண்டிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை!

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (20) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) காலை 10.00 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சியால், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஒரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்!

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவில் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு, யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டெல் அவிவில் உள்ள பென் குரியன் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது நேற்று முன்தினம் (18)இரவு ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளின்மூலம் தாக்குதல் நடத்தியதாக, யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஹவுதிகளின் செய்தித் தொடர்பாளர், யஹ்யா சரீயா கூறுகையில், பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறையை எதிர்த்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, முடக்கங்கள் விலக்கப்படும் வரையில், தங்களது ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர் எச்சரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

57வது பிறந்தநாளை கொண்டாடும் எஸ்.ஜே. சூர்யா

இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின் நியூ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார்.

இன்று தமிழ் சினிமாவின் மிரட்டல் வில்லனாக கலக்கிக்கொண்டு இருக்கிறார். மான்ஸ்டர், ஸ்பைடர், மெர்சல், மாநாடு, சரிபோதா சரிவாரம், வீர தீர சூரன் என தொடர்ந்து பல ஹிட் படங்களை நடிகராக கொடுத்து வரும் எஸ்.ஜே. சூர்யா, தற்போது மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

கடைசியாக இவர் இயக்கத்தில் இசை படம் வெளிவந்தது. அதை தொடர்ந்து கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பின் இயக்கத்தில் இறங்கியுள்ள எஸ்.ஜே. சூர்யா கில்லர் எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் First லுக் போஸ்டர் நேற்று மிரட்டலாக வெளிவந்தது.

பிறந்தநாள் – சொத்து மதிப்பு

இன்று எஸ்.ஜே. சூர்யாவின் 57வது பிறந்தநாளை. திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், எஸ்.ஜே. சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரூ. 150 கோடி சொத்துக்கு எஸ்.ஜே. சூர்யா சொந்தக்காரர் என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்திற்காக ரூ. 5 கோடி முதல் ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இறுதிக் கட்டத்தை நெருங்கும் பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியில் கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. 5 ஆண்டுகளாக தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்று வந்த இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஆம், பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்துள்ளதாக ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளனர். இதில் மாபெரும் வெற்றி தொடரின் இறுதி கட்டம் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ப்ரோமோ வீடியோவில் தனது கணவரை சந்திக்க இனியா செல்கிறார். இதன்பின் இருவருக்கும் இடையே கைகலப்பு நடக்க, தனது கணவர் பிடித்து தள்ளிவிடுகிறார் இனியா.

இதில் தவிர விழும் நிதிஷிற்கு தலையில் அடிபடுகிறது. என்ன ஆனது என்று பார்க்க நிதிஷ் அருகே இனியா செல்ல, அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

 

தலைமுடி முழங்கால் வரை வளர

தலைமுடி என்பது மனிதனின் அழகையும், ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இயற்கையான தலைமுடி வளர்ச்சி என்பது சில காரணிகளின் அடிப்படையில் நடக்கிறது.

உதாரணமாக, மரபியல், உணவு பழக்கங்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் தலைமுடி வளர்ச்சி சீராக நடக்கிறது. ஆனால் தற்போது மேற்குறிப்பிட்ட காரணங்கள் சீராக இல்லாததால் தலைமுடி வளர்ச்சி குறைந்து உதிர்வு அதிகமாகிறது.

தேவையான ஊட்டச்சத்துகள், சிறந்த பராமரிப்பு மற்றும் பொறுமை ஆகியன இருந்தால் தலைமுடி அடர்த்தியாக பார்ப்பதற்கு பட்டுப்போன்று காணப்படும். இதனால் நீங்களும் பார்ப்பதற்கு அழகாக இருப்பீர்கள்.

தற்போது தலைமுடி உதிர்வு பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலாருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினையாகும். உடல் மற்றும் வெளிநிலை காரணங்களால் இளம் வயதில் வழுக்கையாக சிலர் இருக்கிறார்கள்.

தூக்கமின்மை, உடல் சோர்வு, தைராய்டு பிரச்சனை, அதிக ஹிட்/கெமிக்கல் பயன்படுத்தல், தோல் பிரச்சனைகள் உள்ளிட்ட பிற காரணிகளாலும் தலைமுடி உதிர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே தலைமுடி எந்தவித பிரச்சினையும் அழகாக வளர வேண்டும் என்றால் குறிப்பிட்ட விடயங்களை தெரிந்து கொண்டு, செயற்படுத்துவது அவசியம்.

அந்த வகையில், தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் பழக்கங்கள் மற்றும் கட்டாயம் செய்ய வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள்
பயோட்டின், ஜிங்க் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் டி போன்ற சத்துக்கள் அடங்கிய உணவு பழக்கம் இருப்பது அவசியம். ஏனெனின் உணவில் உள்ள முக்கிய மினரல்கள் தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். அதே போன்று தலைமுடியும் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருக்கும்.

மசாஜ்
உச்சந்தலை மற்றும் தலையின் பிற பகுதிகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் எதிர்பார்ப்பதை விட மசாஜ் மூலம் கூடுதல் நன்மைகளை தரும். மசாஜ் செய்யும் பொழுது ரோஸ்மேரி அல்லது பெப்பர்மின்ட் போன்ற எண்ணெய்களை பயன்படுத்தினால் நல்லது.

ஹீட் ஸ்டைலிங்கை தவிர்க்கவும்.
ஸ்ட்ரைட்னர் மற்றும் கர்லிங் அயர்ன்களிலிருந்து வரும் அதிகப்படியான வெப்பம் தலைமுடியை பலவீனப்படுத்தும். இதனால் தலைமுடி உடைந்து முடியின் வேர்களில் அல்லாமல், தலைமுடியின் தண்டின் குறுக்கே உள்ள இழைகள் உடையும். எனவே அடிக்கடி உங்கள் கூந்தலுக்கு ஹீட் ஸ்டைலிங் செய்வதை தவிர்க்கவும். பாதுகாப்பான ஹீட் ஸ்டைலிங்கிற்காக ஸ்ப்ரே வடிவில் இருக்கும் ஹீட் ப்ரொட்டக்டன்ட் தயாரிப்புகளை பயன்படுத்தினால் தலைமுடி சேதங்களை கணிசமாக குறைக்கலாம்.

சீரான முறையில் கூந்தலை ட்ரிம் செய்யவும்.
6–8 வாரங்களுக்கு ஒருமுறை தலைமுடியின் முனைகளை வெட்டி எடுப்பது, முடியின் முனைகள் பிளவுபடுவதைத் தடுக்க உதவியாக இருக்கிறது. பிளவு பாதிப்பானது முடி வளர்ச்சியை தடுக்கும். ஆரோக்கியமான முடிகள் தலையில் இருப்பது ஒட்டுமொத்தமாக கூந்தலின் ஆரோக்கியமான வளர்ச்சியிலும் பங்களிப்பு செய்கிறது.

சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு
சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் முடியை சேதப்படுத்துகிறது. வறட்சி மற்றும் உடையக்கூடிய தன்மை கொண்டதாக மாற வழிவகுக்கும். எனவே வெயிலில் வெளியே செல்லும் போது தொப்பி அணியுங்கள். அப்படி அணியும் பொழுது புற ஊதா பாதுகாப்பு பெற (UV-protectant) ஹேர் ஸ்ப்ரேக்களை பயன்படுத்தலாம்.

இன்றைய ராசிபலன்கள்20.07.2025

ரிஷபம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமுடன் பழகுங்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமுடன் பழகுங்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிப்புக் கூடும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்

எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சி அதிகாரிகள் பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும் புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்றப் பொலிவு கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

தனுசு

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். வியாபாரத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் தர்மசங்கடமான சூழல்களில் சிக்குவீர்கள். சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டிய நாள்.

மகரம்

திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள் புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

கருவிலே விற்க்கப்படும் குழந்தைகள்!

சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டு 25 குழந்தைகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட கடத்தல் கும்பலை இந்தோனேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில், சில குழுந்தைகளுக்கு கருவிலேயே தத்தெடுக்கப்பட்டு குழந்தை பிறப்பிற்கான செலவுகள் தீர்த்த பின்னர் விற்பனை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்களும் வெளிவந்துள்ளன.

இந்தோனேசியாவின் இரண்டு நகரங்களில் 13 பேரை பொலிஸார் கைது செய்து, கடத்தப்படவிருந்த சுமார் ஒரு வயதுடைய ஆறு குழந்தைகளை மீட்டுள்ளனர்.

இந்த கும்பல் குழந்தைகளை வைத்திருக்க விரும்பாத பெற்றோர்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்களை குறிவைத்து, பெரும்பாலும் வட்ஸ்அப்பில் குறுஞ் செய்திகளை அனுப்பி பேஸ்புக்கில் தொடர்பை ஆரம்பிப்பதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழுவில் குழந்தைகள் தொடர்பான தகவல்களைத் தேடுபவர்கள், அவர்களைப் பராமரிக்க வீடு வழங்குபவர்கள், போலி ஆவணங்களை செய்பவர்கள் ஆகியோர் அடங்குவர்.

குழந்தைகள் அவர்களின் தாய்மார்களிடமிருந்து எடுக்கப்பட்டு, இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு வளர்ப்பு பெற்றோரிடம் கொடுக்கப்பட்டு, பின்னர் ஜகார்த்தாவிற்கு கொண்டு வரப்பட்டு பிறப்புச் சான்றிதழ்கள், கடவுசீட்டுக்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒவ்வொரு குழந்தையும் 11 முதல் 16 மில்லியன் இந்தோனேசிய ரூபாய்க்கு ($673–£502) விற்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுமார் 12 ஆண் குழந்தைகள், 13 பெண் குழந்தைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட கும்பல் தெரிவித்துள்ளது.

மேற்கு ஜாவா உட்பட இந்தோனேசியாவின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளே விற்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதே தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோர விபத்தில் இருவர் பலி!

ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் ஹபரகெட்டிய பகுதியில் வேன் ஒன்று விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (19) மாலை இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையை பார்க்க சென்ற தந்தைக்கு நிகழ்ந்த சோகம்!

குழந்தையை பார்க்கச் சென்றபோது காதலனுடன் சேர்ந்து மனைவி பேராசிரியரை கொன்ற சமபவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் பிரெஸ்மிஸ்லாவ் ஜெசியோர்ஸ்கி.

இவர் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் அவர் தனது மனைவியை பிரிந்தார்.

இதனையடுத்து குழந்தைகள் கிரீஸ் நாட்டில் தாயின் பராமரிப்பில் உள்ளனர். எனவே அவர்களை பார்ப்பதற்காக அவ்வப்போது அவர் கிரீஸ் சென்று வருவது வழக்கம். அந்தவகையில், பிரெஸ்மிஸ்லாவ் தனது குழந்தைகளைப் பார்க்க கிரீஸ் தலைநகர் ஏதென்சில் முன்னாள் மனைவியின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த பிரெஸ்மிஸ்லாவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது பிரெஸ்மிஸ்லாவின் முன்னாள் மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து அவரைக் கொன்றது தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பில் பேராசிரியரின் அவரது மனைவி, முன்னாள் காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

களியாட்ட விடுதிக்கு முன் துப்பாக்கிச்சூடு!

இன்று அதிகாலை கொழும்பு – தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள இரவு நேரக் களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாகத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என்று தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு நேர களியாட்ட விடுதிக்கு வருகை தந்திருந்த இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது அங்கிருந்த நபர் ஒருவர் ரிவோல்வர் ரக துப்பாக்கியால் நான்கு தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் இந்தத் துப்பாக்கிச்சூட்டின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கிருந்த இருவரை உடனடியாகக் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தலங்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 225 காட்டு யானைகள் மரணம்!

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 225 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகளவான யானைகள் ரயிலில் மோதியும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் மற்றும் மின்சார வேலிகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன

இதேவேளை, கல்லெல்ல பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதல் கோட்டை படத்தில் நடிக்க இருந்தவர் இந்த நடிகராம் அவரே கூறிய தகவல்!

90 களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரவணன். அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

இதையடுத்து உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது சரவணன் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் அஜித் நடிப்பில் வெளியான ‘காதல் கோட்டை’ படம் குறித்து சரவணன் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” பல படங்களை நான் மிஸ் பண்ணி இருக்கிறேன். அதில் ஒன்று காதல் கோட்டை படம். இந்த படம் எனக்காக உருவாக்கப்பட்டது தான். இந்த திரைப்படத்தின் இயக்குநர் அகத்தியன் பல தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை சொன்னார்.

ஆனால் யாருக்கும் நம்பிக்கை வரவில்லை. அந்த படத்தில் பல ரயில் காட்சி இருந்ததால் அதை மாற்றி பஸ்ஸில் வைக்கலாம் என்று சொன்னார்கள்.

ஒரு முறை அவர் கதையை கேட்டு ஒரு தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை, கடைசியில் அந்த வாய்ப்பு அஜித்திற்கு போனது” என்று தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் பராசக்தி பட அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பராசக்தி படத்தின் ஷூட்டிங் குறித்து தற்போது, ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் இலங்கையில் தீவிரமாக நடந்தது. தற்போது, அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு பொள்ளாச்சியில் அடுத்த ஷெட்யூல் ஷூட் இன்று முதல் தொடங்கவிருக்கிறதாம்.

AK64 உறுதி செய்த முன்னணி இயக்குனர்..

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்றாக இருக்கிறது. அஜித் தற்போது தனது கார் ரேஸ் கெரியரில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார், அதனால் அவர் படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை.

ரேஸிங் சீசன் முடிந்து இந்த வருடத்தின் இறுதியில் தான் அவர் அடுத்த படத்தை தொடங்குவார் என ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான AK64 படத்தை இயக்குவதை உறுதி செய்து இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகும் மீண்டும் இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்திருக்கிறது.

படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவித்த ஆதிக், படத்தில் இருக்கும் மற்ற பிரபலங்கள் பற்றிய தகவல் அப்போது தெரிவிக்கப்படும் என கூறி இருக்கிறார்.

மேலும் இது கேங்ஸ்டர் படம் இல்லை என்பதையும் அவர் கூறி இருக்கிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தாய் தந்தையரை பார்த்துள்ளீர்களா?

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என கொண்டாடப்பட்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா ஆகிய மூன்று திரைப்படங்களும் பான் இந்தியன் ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்துள்ளது. இதை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா சிக்கந்தர் படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் தோல்வியை தழுவிய நிலையில், குபேரா படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்தார். அடுத்ததாக Girlfriend, Thama மற்றும் மைஸா ஆகிய திரைப்படங்கள் ராஷ்மிகா மந்தனா கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகாவின் அப்பா, அம்மா
நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின், விராஜ்பேட்டையில் மதன் மந்தனா மற்றும் சுமன் மந்தனா ஆகிய தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்துள்ளார். இவருக்கு ஷிமன் மந்தனா என்கிற ஒரு தங்கையும் உள்ளார்.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அப்பா, அம்மாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அவர்களின் புகைப்படம்..

மறுமணம் என்றதும் தெறிச்சு ஓடும் காமெடி நடிகை!

சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களான விவேக், வடிவேலு என பலரின் காமெடி காட்சிகளில் நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை பிரியங்கா.

பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மருதமலை, வில்லன் போன்ற பல படங்களில் நம்மை சிரிக்க வைத்துள்ளார்.

இவர் சமீபத்தில் தனது வாழ்க்கை பயணம் குறித்து பேசியுள்ளார்.

அதில் நடிகை பிரியங்கா, திருமண வாழ்க்கை எதிர்ப்பார்த்தபடி சரியாக அமையாத காரணத்தால் பல பிரச்சனைகள் இருந்தது, ஆனால் எனது குடும்பத்தினர் பக்கபலமாக இருந்தனர்.

தவறான ஒரு உறவில் இருந்து கஷ்டப்படுவதை விட அதில் இருந்து விலகி வருவது சிறப்பான முடிவு. எனது முன்னாள் கணவருக்கு இப்போது இரண்டாவது திருமணம் ஆகிவிட்டது, என்னையும் மறுமணம் செய்துகொள்ள சிலர் அறிவுறுத்தினர்.

எனக்கு விருப்பம் இல்லை, ஒருமுறை திருமணம் செய்தபோது பல பிரச்சனைகளை பார்த்து விட்டேன், இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு திருமணம் வேண்டாம் என கூறியுள்ளார்.

நடிகை லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா?

தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை தான் லைலா.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்திருக்கிறார். 1996ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான துஷ்மன் துனியா கா மூலம் நடிகை லைலா நாயகியாக அறிமுகமானார்.

பின் தமிழில் கள்ளழகர், முதல்வன், பார்த்தேன் ரசித்தேன், த்ரீ ரோசஸ், கம்பீரம், உள்ளம் கேட்குமே, பரமசிவன் போன்ற படங்களில் தொடர்ந்து நடிக்க நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, பிதாமகன் போன்ற படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

இடையில் திருமணம் செய்து குழந்தைகள் என கேமரா பக்கம் வராமல் இருந்தவர் சர்தார் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

லேட்டஸ்ட்
நடிகை லைலாவிற்கு கடந்த 2006ம் ஆண்டு Mehdin என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

இந்த ஜோடிக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது லைலா சமீபத்தில் தனது மொத்த குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர செம வைரலாகி வருகிறது.