தாம்பத்திய உறவு! வெறுப்பு ஏன்?…

பொதுவாகவே பெண்கள் அந்தரங்கம் பற்றி பேச கூச்சப்படுவார்கள், இதற்கு காரணம் அவர்கள் வளரும் குடும்பம் மற்றும் சமூகமே. சிறு பிள்ளையில் இருந்தே பெற்றோர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு அம்மாக்கள் தாம்பத்தியம் பற்றி எடுத்துக் கூறுவது அவசியம்.

அதுமட்டுமின்றி இன்றைய காலகட்டத்தில் சிறுவயதில் இருந்தே பெண்களை காம பெருமூச்சுகளால் நசுக்கும் ஆண்கள் ஏராளம். தினம் ஒரு செய்தி இதுதொடர்பாக வந்துவிடுகிறது, இதையெல்லாம் கேள்விப்பட்டுக் கொண்டே வளர்வதால் என்னவோ தாம்பத்தியம் மீது பெண்களுக்கு ஒருவித வெறுப்பு உண்டாகிறது.

மேலும் மற்ற பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி கூறுவதும் இதற்கு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமாக கணவன் இதை உடல் ரீதியான உறவாக பார்க்காமல் மனரீதியாக பார்ப்பதும் மிகவும் அவசியம்.

மனைவிக்கு விருப்பம் இல்லை என்றால் கட்டாயப்படுத்தக்கூடாது, புரிந்து கொண்டு தள்ளி இருப்பது நல்லது. சின்ன சின்ன கொஞ்சல்களும், செல்ல சண்டைகளும் தாம்பத்தியத்திற்கு மிக முக்கியமானவை.

மனைவியை குஷிப்படுத்த அவ்வப்போது வெளியில் அழைத்து செல்லுங்கள், அவர்களுக்கு பிடித்த விடயத்தை பற்றி பேசுங்கள். குறிப்பாக அவர்களிடம் மனம் விட்டு பேசுவது அவசியம், அவர்களுக்கு உறவில் இருக்கும் பிரச்னையை நீங்கள் புரிந்து கொண்டாலே சரிசெய்தாலே இல்லறம் சிறக்கும்.

தினமும் நாம் செய்யும் தவறுகள்: உயிருக்கு ஆபத்தாகிவிடும்!

நம்முடைய வீட்டில் சமைக்கப்பட்ட உணவை மீண்டும் சூடுசெய்து சாப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் அப்படி செய்யும் போது ஒரு சில உணவுகள் விஷமாகின்றன.

சிக்கன்

சிக்கனில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இதை ஒரிரு நாள் கழித்து மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வர அதிக வாய்ப்புள்ளது.

அரிசி சாதம்

வேகவைத்து சமைக்கபடாத அரிசிகளில் பேக்டீரியா இருக்கும், இதனால் புட் பாய்சனிங் ஏற்படும் என உணவு பல்கலைகழக ஆய்வானது கூறுகிறது.

அரிசியை சரியாக வேகவைத்து விட்டால் அதன் சிதல்கள் மூலம் அது சர்வைவ் ஆகிவிடும். இதை மீண்டும் சூடாக்கினால் வாந்தி, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

உருளைக்கிழங்கு

பூமிக்கடியில் விளையும் உருளைக்கிழங்கை மீண்டும் சூடு பண்ணி சாப்பிடுவதும் பிரச்சனை தான். அதுவும் நாம் அதை எப்படி, எங்கே வைக்கிறோம் என்பது தான் முக்கிய விடயமாகும். உருளைக்கிழங்கை வெளியில் வைக்காமல் பிரிட்ஜில் வைத்தால் உணவு ஒவ்வாமை தான் ஏற்படும்.

கீரை வகைகள்

நைட்ரேட் கீரைகளில் இருப்பதால் அதை மீண்டும் சூடாக்குவதால் அது நச்சு தன்மையடைய வாய்ப்புகள் உள்ளது. இந்த நச்சானது பின்னர் புற்று நோயை கூட அடைய வாய்ப்புள்ளது.

முட்டைகள்

வேக வைத்த முட்டைகளை மீண்டும் சூடாக்க கூடாது. இது வயிற்று பிரச்சனையையும் செரிமான கோளாறுகளையும் உண்டாக்கும்.

உட்கார, நடக்க பயிற்சி செய்யும் ஜெயலலிதா! விரைவில் வீடு திரும்புகிறார்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுந்து உட்கார, நடக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிற நிலையில் அவர் விரைவில் மருத்துவமனையிகிருந்து வீடு திரும்புவார் என அப்பலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலகுறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பல்வேறு விதமான பிரார்த்தனைகள், பூஜைகள் செய்து வருகிறார்கள்.

லண்டர் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் மருத்துவ குழுவினரின் சிகிச்சை, சிங்கப்பூர் பிசியோ தெரபி மருத்துவர்களின் தொடர் சிகிச்சை காரணமாக முதல்வரின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வருக்கு தற்போது எழுந்து உட்காருவதற்கு, நடப்பதற்கு பயிற்சி அளிக்க பட்டுவருகிறது. அவரது உடல்நிலையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை கண்டு மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் முதல்வர் ஜெயலலிதா மிக விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என அப்பலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

புலியுடன் விளையாடிய கார் பந்தய வீரனுக்கு நடந்ததை…? நீங்களே பாருங்கள்!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் லெவிஸ் ஹாமில்டன். இவர் சமீபத்தில் மெக்சிகோவில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் முதலிடம் பெற்றவர்.

போட்டியை முடித்து விட்டு, அந்நாட்டில் உள்ள வன விலங்கு பூங்காவிற்கு சென்றார். அங்கு ஒரு பெண் புலி இருந்தது. பயப்படாமல் அதனிடம் அவர் சென்று விளையாட ஆரம்பித்தார். அந்த புலியும் அவரை தாக்கமல், அவருடன் நாய்க்குட்டி போல் விளையாட ஆரம்பித்தது.

அவரின் மீது காலை தூக்கி போட்டும் அவரின் விரல்களை கடிப்பது போல பாவனை செய்தும் அந்த புலி அவருடன் ஜாலியாக விளையாடியது. இந்த வீடியோவை ஹாமில்டன் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆண்களை ஈர்க்கும் கவர்ச்சிகரமான ரகசியங்கள்

பெண்களை பார்த்தவுடன் காதலில் விழும் சில ஆண்கள் இருப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் அந்த ஆண்கள் எதிர்ப்பார்க்கும் உடற்தோற்றம் அந்த பெண்ணுக்கு இருப்பதால் தான்.

மேலும், பெண்களிடம் இருக்கும் சில கவர்ச்சிகரமான ரகசியங்கள் தான் ஆண்களை பார்த்ததும் காதலில் விழச் செய்கிறது.

ஏனெனில் பெண்களின் ஒருசில முக்கிய அம்சங்கள் அவர்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத் தன்மையுடன் தொடர்புடையதை வெளிப்படுத்துகிறது.

எனவே ஆண்களைக் கவரும் பெண்களின் முக்கிய ரகசியங்கள் குறித்து அறிவியல் கூறுவதை பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

 

  • பெண்களின் விலா எலும்புகளுக்கும், இடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதி சிறியதாகவும், பரந்த இடுப்பையும் கொண்ட பெண்களை ஆண்கள் அதிகமாக கவருகின்றார்கள் என்று ஆய்வில் கூறப்படுகிறது.
  • ஆண்கள், அழகிய இடுப்பின் வளைவுகளைக் கொண்ட பெண்களால் எளிதில் கவரப்படுவதற்கு, அந்தப் பெண்களின் இனப்பெருக்கம் நன்றாக இருக்கும் என்பதால், அவர்களை அறியாமலேயே அந்த மாதிரியான பெண்களால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.
  • அமைதியாக இருக்கும் ஆண்கள் அதிகமாக பேசும் பெண்களை விரும்புவார்கள். ஏனெனில் உயிரியல் ரீதியாக உரக்க குரலில் பேசும் பெண்களின் இளமை என்பது ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சாதகமாக இருப்பதை வெளிக்காட்டுகிறது.
  • நீளம் குறைவான கூந்தலை உடைய பெண்களை விட, நீளம் அதிகமான கூந்தலைக் கொண்ட பெண்களால் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். ஏனெனில் நீளமான பட்டுப் போன்ற கூந்தலானது அந்த பெண்களின் ஆரோக்கியமான உடலை வெளிப்படுத்துகிறது.
  • பெண்களின் புன்னகை எப்போதும் அவர்களின் அழகை அதிகமாக வெளிப்படுத்தும். எனவே எப்போதும் புன்னகை முகத்துடன், வெண்மையான பற்களை கொண்டுள்ள பெண்கள், ஆண்களால் அதிகம் கவரப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.
  • ஆண்கள் மேக்கப் போடாமல் இயற்கை அழகுடன் இருக்கும் பெண்களின் மீது அதிக காதல் வயப்படுவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
  • பெண்களின் ஆடை கருப்பு நிறத்திற்கு அடுத்தப்படியாக, சிவப்பு நிறமானது அவர்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காட்ட உதவுகிறது. எனவே மானுடவியல் ஆய்வுகளின் படி, பெண்கள் அணியும் சிவப்பு நிற ஆடைகள் ஆண்களை எளிதில் கவருகிறது என்பது மிகவும் உண்மையாகும்.

பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகள்… மாமியார் கொடுத்த பரிசு என்னனு தெரியுமா?…

தன் குடும்பத்து வாரிசை பெற்றெடுத்ததற்கும், தனக்கு பேத்தியை பெற்றுகொடுத்ததற்கும் மருமகளுக்கு கார் பரிசு வழங்கி சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஒரு மாமியார்.

உத்தரபிரதேச மாநிலம், ஹமீர் பூரை சேர்ந்த பிரேமா தேவி, சுகாதாரத்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது மருமகள் குஷ்புவை மகளாக பாவித்து வந்தார். குஷ்பு பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மிகவும் பரபரப்பாக இருந்த பிரேமா தனக்கு பேத்தி பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

தனக்கு பேத்தி பிறந்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக, வீட்டில் ஒரு சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார் பிரேமா. இந்த விருந்தின் போது அனைவரும் வியக்கும் வகையில், தனக்கு குடும்பத்திற்கு பெண் வாரிசை அதாவது பேத்தியை பெற்றெடுத்த மருமகளுக்கும், பேத்திக்கும் சேர்த்து ஹோண்டா சிட்டி காரை பரிசாக வழங்கி மகிழ்ச்சியடைந்தார்.

பெண்களுக்கு சமுகத்தில் பல்வேறு பிரச்சனைகள் அதிகரித்துள்ள நிலையில், பெண் குழந்தையை பெற்றதால், மாமியார் மருமகளை கவுரவிக்கும் விதமாக கார் பரிசு வழங்கி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சம்பவம் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.

கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சுவாரசியமான வீடியோ!

முதல் நாள் திருடன் பார்த்த வேலையால் அடுத்தநாள் காத்திருந்த விபரீதம்!

போதைப் பொருள் விற்பனையாளர்களின் பங்காளிகளாக பொலிஸ் அதிகாரிகள்

பொலிஸ் அதிகாரிகளில் பெரும்பாலானோரும் சில அரசியல்வாதிகளும் இலங்கையில் நடக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களின் பங்காளிகளாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்தும் முன்னர், அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹாவின் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிராமத்தில் உள்ள விகாரைகளின் பிக்குகள் மற்றும் பொலிஸாரை இணைத்து கொள்ளாமல் போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுக்க முடியாது.

எனினும் அதற்கு முன்னர் பொலிஸ் மா அதிபர் பொலிஸில் சுத்திகரிப்பை மேற்கொள்ள வேண்டும். இதனை பொலிஸ் மா அதிபரும் அறிந்துள்ளார்.

பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் அதிகாரிகள் போதைப் பொருள் கடத்தல்கார்களின் முகவர்களாக மாறியுள்ளனர்.

சிறியளவில் காணப்பட்ட இந்த விடயம் கடந்த 10 வருடங்களில் அரைவாசிக்கும் மேல் அதிகரித்துள்ளதுடன், அரைவாசிக்கும் மேற்பட்ட பொலிஸார் போதைப் பொருள் விற்பனையாளர்களின் முகவர்களாக மாறியுள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இருக்கும் போது எப்படி பிரச்சினையை தீர்ப்பது. அரசியல்வாதிகளும் இதில் எப்படியாவது இணைத்து கொள்கின்றனர்.

பல லட்ச்சம் பேர் பார்த்து ரசித்த இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள்!

இந்த பொண்ணு எவ்வளவு வித்தியாசமான முறையில் மீன் பிடிக்கிறார்?

உருளைக்கிழங்கின் தோலை சீவ வேண்டாம்.

> உருளைக் கிழங்கின் தோலைச் சீவிவிட்டே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். மண்ணுக்குள் விளையும் இந்தக் கிழங்கை நன்றாகக் கழுவிவிட்டுத் தோலுடன் பயன்படுத்துவதே நல்லது. உருளை தோல் தரும் ஆரோக்கியப் பலன்கள்:

> உருளைக் கிழங்குத் தோலில் பொட்டாசியம் அதிகம். இது உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

> தோலில் உள்ள நார்ச்சத்து ரத்தக் கொலஸ்ட்ரால் அளவை குறைத்துச் செரிமானத் திறனை அதிகரிக்கிறது.

> தோலில் வைட்டமின் பி6 அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு நன்மை தரும் செரடோனின், டோபமைன் சுரப்புகளைத் தூண்டுகிறது.

> உருளைக்கிழங்குத் தோலில் வைட்டமின் சி, மக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துகளும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன.

இளம் பெண்ணை பின்தொடர்ந்து செல்லும் பேய்!

இராணுவமும் ஆவா குழுவும்!

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைக் குறைக்க வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் தடையாக உள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.

ஆயினும், இராணுவத்தைக் குறைப்பதற்கும், இராணுவத்தின் பிடியில் உள்ள பொதுமக்களின் காணிகளைக் கைவிடுவதற்கும் முன்னைய அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை. வடக்கில் இருந்து இராணுவம் குறைக்கப்படமாட்டாது. இராணுவத்தினர் தேசிய பாதுகாப்புக்காகவே வடக்கில் நிலைநிறுத்தப்ட்டிருக்கின்றார்கள்.

ஆகவே, அவர்கள் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படமாட்டாது என்று அந்த அரசாங்கம் பிடிவாதமானதொரு போக்கைக் கடைப்பிடித்து வந்தது.

ஆட்சி மாறியுள்ள போதிலும், நல்லாட்சி அரசாங்கமும் முன்னைய அரசாங்கத்தின் போக்கிலேயே சென்று கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இராணுவத்தைக் குறைப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை.

அதேபோன்று, யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு, மன்னாரில் முள்ளிக்குளம் போன்று பாரிய அளவிலான காணிகளைக் கைப்பற்றி நிலைகொண்டுள்ள இராணுவம் அந்தக் காணிகளைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.

அவ்வப்போது ஒரு சில ஏக்கர் காணிகளை யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீள்குடியேற்றத்திற்காகப் பொதுமக்களிடம் ஒப்படைப்பதாக அரசாங்கம் அறிவித்தாலும்கூட,  இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்களை முழுமையாகவும், உளப்பூர்வமாகவும் உணர்ந்து அதற்கேற்ற வகையில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை.

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்காகக் கையளிக்கும் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டதாகவே மேற்கொள்ளப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடாகத் தெரியவில்லை.

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் அவலம் மிகுந்த நிலையில் உள்ள மக்களை ஆறுமாத காலத்தில் மீள்குடியேற்றுவதாக ஜனாதிபதி அவர்களுடைய குடிசைகளில் சென்று சந்தித்துப் பேசிய போது உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த உறுதி மொழி உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை.

வலிகாமம் பிரதேசத்தில் இராணுவத்தினர் பிடித்து வைத்துள்ள காணிகளை விடுவிப்பதற்கு மனமில்லாத ஒரு போக்கிலேயே அவ்வப்போது காணிகள் சில்லறை சில்லறையாக விடுவிக்கப்படுகின்றன. இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் அரசாங்கமும், இராணுவமும் மறைமுகமான ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றன என்பதை இந்த நடவடிக்கை தெளிவாக உணர்த்துகின்றது.

அதேநேரத்தில் கேப்பாப்பிலவு, முள்ளிக்குளம் போன்ற பிரதேசங்களில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கமும் இராணுவமும், கடற்படையும் விருப்பமில்லாதிருப்பதையே காண முடிகின்றது.

இங்கு பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. பல்வேறு வழிகளிலும் செயற்பாடுகளின் ஊடாகவும், அந்தக் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தி அவை செயற்பட்டு வருகின்றன.

அமைதியைக் குலைத்துள்ள செயற்பாடுகள்

இது ஒரு புறமிருக்க, யாழ்ப்பாணத்தில் ஆவா என்ற பெயரிலான குழுவினர் செயற்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்களும், ஆவா குழுவின் உருவாக்கம் பற்றிய செய்திகளும் இராணுவம் வடக்கில் தொடர்ந்து நிலைகொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.

ஆவா குழுவினர் இராணுவத்தினால் உருவாக்கப்பட்ட வாள்களை ஆயுதமாகக் கொண்ட ஆயுதக் குழுவாகச் செயற்பட்டு வந்துள்ளது.

கடந்த காலங்களில் இவர்களின் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தைப் பெரும் அச்சத்தில் முழ்கச் செய்திருந்தன. அச்சுறுத்தல்கள், கொள்ளைகள் காரணமாக யாழ்ப்பாணத்து மக்கள் பெரும் அச்சமடைந்திருந்தனர். பல்வேறு இழப்புக்களுக்கும் ஆளாகியிருந்தனர்.

பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருப்பதன் மூலம், அரசாங்கத்தின் நடவடிக்கைகள், இராணுவத்தின் செயற்பாடுகள் என்பவற்றில் இருந்து அவர்களுடைய கவனத்தைத் இந்தக் குழுவினர் முழுமையாகத் திசை திருப்பியிருந்தனர்.

தற்போது ஆவா குழு தொடர்பில் எழுந்துள்ள – உருவாக்கப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையானது, தமிழ் மக்களினதும், நாட்டினதும் எதிர்காலத் தலைவிதியை நிர்ணயிக்கின்ற செயற்பாடுகளில் யாழ்ப்பாணத்து மக்களையும் புத்திஜீவிகளையும், ஏன் – அரசியல்வாதிகளையும்கூட கவனம் செலுத்த முடியாத அவதானம் செலுத்த முடியாத நிலைமைக்கு ஆளாக்கியிருக்கின்றது.

நாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செய்றபாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மும்முனைச் செயற்பாட்டைக் கொண்டுள்ள இந்த அரசிலயமைப்பு உருவாக்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

மறபக்கத்தில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதற்கான பொறிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றுக்கிடையே, வற் வரி அதிகரிப்பு என்ற பொதுமக்களை பெரிய அளவில் பொருளாதார ரீதியாக பாதிக்கின்ற செயற்பாட்டையும் அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

அத்துடன் அதிமுக்கிய செயற்பாடாகிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

வற் வரியை சாதாரண மக்களையும் நடுத்தர வகுப்பினரையும் பெரிய அளவில் பாதிக்கத்தக்க வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது,

இது குறித்து தென்பகுதியில் பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்புக்களில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. அது குறித்து உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசிய மட்டத்தில் இடம்பெறுகின்ற இந்த வரிவிதிப்புச் செயற்பாடு குறித்து வடக்கு கிழக்குப் பிரதேச மக்கள் தரப்பில் உரிய கவனம் செலுத்துவதற்குக் குந்தகமாகவே பதட்டத்தையம், பயப்பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நள்ளிரவில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவமானது. வடமாகாணத்தை முழுமையாகத் தன்வசப்படுத்தியிருந்தது.

பலரும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக மாணவர்கள் கொல்லப்பட்மைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்திச் செயற்பட்டிருந்தனர். வேறு விடயங்கள் குறித்து எவரும் சிந்திக்கத்தக்க மனநிலையில் இல்லாதது போன்றதொரு தோற்றமே அப்போது வெளிப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற சிவிலுடையில் கடமையில் ஈடுபட்டிருந்த தேசிய புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிசார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவமும்,

அதற்கு உரிமை கோரும் வகையில் வெளியிடப்பட்டிருந்த துண்டு பிரசுரமும், அதனைத் தொடர்ந்து பிரபாகரன் படை என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்த மற்றுமொரு துண்டுப் பிரசுரமும் ஆவா என்ற வாள்வெட்டுக் குழு போன்ற சமூகத்தை அச்சத்தில் ஆழ்த்துகின்ற குழுக்களின் பால் கவனத்தை ஈர்த்திருந்தன.

மாணவர்களின் மரணங்கள் வடமாகாணத்தில் மட்டுமல்லாமல் தேசிய மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததைப் போலவே, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற ஆவா குழுவின் செயற்பாடுகளும் நாடளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

அம்பலமாகியுள்ள ஆவா குழு

இராணுவமே ஆவா குழுவின் பிதா மகர் என்பது அதிகாரபூர்வமாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

அமைச்சரவைப் பேச்சாளராகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகிய கோட்டாபயவே ஆவா குழுவை உருவாக்கியிருந்தார் என்று நேரடியாகவும் பகிரங்கமாகவும் அறிவித்திருக்கின்றார்.

இந்தக் குற்றச்சாட்டை கோட்டாபய மறுத்துரைத்திருக்கின்ற போதிலும், இராணுவத்தின் கைக்கூலியாக – கையாளாகவே ஆவா குழு போன்ற குழுக்கள் செயற்பட்டிருந்தன என்று பொதுமக்கள் மத்தியில் நிலவிய சந்தேகம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது.

வடமாகாணத்தின் அமைதியைக் குலைத்து, அங்குள்ள மக்களை பயப்பீதியிலும், ஒரு கொதி நிலையிலும் வைத்திருப்பதற்கான ஓர் உத்தியாகவே சமூகக்குற்றச் செயல்களும், சமூகத்தைச் சீரழிக்கின்ற சமூகவிரோதச் செயற்பாடுகளும் இத்தகைய குழுக்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனவே, தொட்டிலையும் ஆட்டி, குழந்தையைக் கிள்ளிவிடுகின்ற கைங்கரியம் சாதுரியமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவே எண்ண வேண்டியுள்ளது.

அளவுக்கு அதிகமாகவே இராணுவத்தினரும் பொலிசாரும் தேசிய பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று கருதப்பட்ட வடபகுதியில் காலத்துக்குக் காலம் தீவிரமாகச் செயற்பட்டிருந்த இந்த சமூக விரோதக் குழுக்கள் அடக்கியொடுக்கப்படவில்லை. அவர்களை நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.

தற்போது வடபகுதியில் வெளிப்பட்டுள்ள ஆவா குழுவினருடைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுமா என்ற கேள்வி பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களால் மட்டுமல்ல தென்பகுதியில் உள்ளவர்களினாலும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் ஆவா குழுவினருடைய செயற்பாடுகளுக்குக் காரணமாக இருந்தவர்கள் யார் என்பது ஒரு புறமிருக்க, இப்போது அதனைச் செயற்படுத்தி வருபவர் யார், என்ன காரணத்திற்காக ஆவா குழுவினர் இயங்குநிiiயில் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது போன்ற கேள்விகள் இப்போது முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆவா குழுவை உருவாக்கியவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்றும் யுத்த காலத்தில் இந்தக் குழுவுக்குப் பொறுப்பாக பிரிகேடியர் ஒருவரே செயற்பட்டிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன அந்த பிரிகேடியர் யார், அவருடைய பெயர் என்ன என்பதையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் நல்லாட்சி அரசாங்கம் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள இந்தச் சூழலில், அமைதியைக் குலைத்து மக்கள் மத்தியில் குழப்பகரமான ஒரு நிலைமையை உருவாக்குவதற்காக ஆவா குழுவினர் இப்போது செயற்படத் தொடங்கியிருக்கின்றனர் என்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

ஆவா குழு யுத்த காலத்தில் யாரால் உருவாக்கப்பட்டது, யாரால் நேரடியாகச் செயற்படுத்தப்பட்டது என்பதிலும் பார்க்க, இப்போது அந்தக் குழு யாரால் செயற்படுத்தப்படுகின்றது, நல்லாட்சி அரசாங்கத்தில் அத்தகைய குழுவொன்று எவ்வாறு பகிரங்கமாகச் செயற்பட முடிந்திருக்கின்றது என்பது குறித்து ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறிய வேண்டியது முக்கியமாகும்.

எதேச்சதிகார போக்கைக் கொண்டிருந்த ஓர் ஆட்சியை மாற்றியமைத்து, ஜனநாயகத்தை மேலோங்கச் செய்துள்ள நல்லாட்சி அரசாங்கம் முன்னைய ஆட்சியில் தமிழ் மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருப்பதற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட மறைமுக அச்சுறுத்தல் நடவடிக்கைகளைத் தொடரவிடுவது ஆரோக்கியமான செயற்பாடாக இருக்க முடியாது.

சட்டத்தையும் ஒழுங்கையும் முறையாக நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே, நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லையேல் புதிய அரசாங்கமும் எதேச்சதிகாரப் போக்கையே கடைப்பிடித்து வருகி;ன்றது என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்.

வெளியில் வருவதற்கான முயற்சியா?

ஆவா குழுவினரின் செயற்பாடுகள் தலையெடுத்துள்ளதையடுத்து சட்டமும் ஒழுங்கும் யாழ்ப்பாணத்தில் சீர்குலைந்துள்ளதாகவே பலரும் கருதுகின்றனர்.

இந்தக் குழுவினரைக் கட்டுப்படுத்துவதிலும் அவர்களை இனங் கண்டு, அவர்களின் செயற்பாடுகளை முடக்கி, அந்தச் செயற்பாட்டாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கு பொலிசாரினால் முடியாமல் போயிருக்கின்றதோ என்ற சந்தேகமும் இப்போது பரவலாக எழுந்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள இப்போதைய நிலைமை குறித்து சாதாரண மக்கள் இவ்வாறு சந்தேகப்படுவது இயல்பு.

அரசியல்வாதிகளும் இவ்வாறான சந்தேகம் கிளப்பினால் அதுவும் சாதாரணமாகவே கருதப்படும். ஆனால் பொலிசாரினால் ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருப்பதாக இராணுவ தரப்பில் இருந்து குரல் எழுந்திருப்பதை வேடிக்கையானதாகவும் அநேரத்தில் உள்நோக்கம் கொண்டதொரு கருத்து வெளிப்பாடாகவும் கருத வேண்டியிருக்கின்றது.

அரசாங்கம் இராணுவத்திற்கு அனுமதியளிக்குமானால், இராணுவம் ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்தி யாழ்ப்பாணத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று யாழ் மாவட்ட இராணுவ தளபதி கூறியுள்ளார். பொறுப்புள்ள இராணுவ அதிகாரி ஒருவரின் கடமை சார்ந்த ஒரு கூற்றாக இதனைக் கருதலாம்.

அதேவேளை, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொறுப்பை ஏற்றுள்ள பொலிசாருக்கு, ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்தவும், அவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் இராணுவம் உறுதுணையாகச் செயற்படத் தயாராக இருக்கின்றது என்று அவர் கூறியிருப்பாரேயாகில் அது மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

பொலிசார் மீது நம்பிக்கையற்ற வகையிலும், ஆவா குழுவினரை அவர்களால் கட்டுப்படுத்த முடியாதது போலவும் தொனி செய்துள்ள இந்தக் கருத்தானது, இராணுவம் வெளியில் வந்து முந்திய அரசாங்கத்தில் இருந்தது போன்று, சிவில் நிர்வாகக் கடமைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதை வெளிப்படுத்துவதைப் போன்று அமைந்திருக்கின்றது.

இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்தால் தெற்கில் உள்ளவர்கள் பேசுகின்றார்கள். முகாம்களை விட்டு அவர்கள் வெளியில் வந்தால், வடக்கில் உள்ளவர்கள் குறை கூறுகின்றார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மொத்தத்தில் இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்காமல் வெளியில் வரவே விரும்புகின்றது – முயற்சிக்கின்றது என்பதையே யாழ் இராணுவ தளபதியின் கூற்று வெளிப்படுத்தியிருப்பதாக சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது.

இராணுவம் வடக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே வடபகுதி மக்களினதும், அவர்களுடைய அரசியல் தலைமையினதும் விருப்பமாகவும் வேண்டுகோளாகவும், நீண்ட நாளைய நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவும் இருக்கின்றது.

இந்த நிலையில் ஆவா குழுவின் செயற்பாடுகளைக் காரணம் காட்டி, இராணுவம் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முயற்சிக்கின்றதா என்று சந்தேகப்படுவதைத் தவறாகக் கருத முடியாது.

இராணுவத்தினர் மட்டுமல்ல. ஜனாதிபதியும்கூட, வடக்கில் இராணுவம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள சொந்தக் காணிகளற்ற குடும்பங்களுக்காக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கென ஒதுக்கப்பட்டிருந்த காணிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட நூறு வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி இதனைக் கோடி காட்டியிருக்கின்றார்.

வடபகுதி மக்களை வாயாரப் புகழ்ந்து, நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த வடபகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் ஒரு லட்சம் வீடுகளை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த வீடுகளை இராணுவத்தினரும் தனியார் கம்பனிகளும் நிர்மாணிப்பார்கள் என்றும் கூறியிருந்தார்.

இதன் மூலம் தமக்கு வாக்களித்த தமிழ் மக்கள் விரும்புகின்ற – அவர்கள் முன்வைத்துள்ள – இராணுவத்தைக் குறைக்க வேண்டும் அல்லது வடக்கில் இருந்து நகர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர் பெரிதாகக் கருதவில்லை என்று கருத வேண்டியிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், இறுதியாக இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 454 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக யாழ் அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதி பொறுப்பளித்துள்ள போதிலும், அந்தப் பகுதியில் உள்ள இரண்டு இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது. அவர்கள் அங்கு மீள்குடியேறுகின்ற மக்களுடன் சேர்ந்து நிலைகொண்டிருப்பார்கள் என்ற இராணுவ தர்பபில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும், இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கை வெறும் கோரிக்கையாகவே இருக்கப் போகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

7 நாளில் இத்தனை கோடி வசூலா? விபரங்கள் உள்ளே!

கொடி திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்தது. இதனுடன் காஷ்மோராவும் வர கொடி வசூல் குறையும் என எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால், தனுஷ் திரைப்பயணத்திலேயே கொடி தான் முதல் வார இறுதியில் அதிக வசூலாம், மேலும், தற்போது தெலுங்கில் அதிக திரையரங்குகள் இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கொடி 7 நாட்களில் ரூ 50 கோடியை கடந்துள்ளதாம், மேலும், இந்த வாரமும் வசூல் நன்றாக இருக்கிறதாம், எனெனில் எந்த படமும் இந்த வாரம் திரைக்கு வரவில்லை.

இதனால், எப்படியும் கொடி ரூ 60 கோடி வசூலை தாண்டிவிடும் என தெரிகின்றது, இப்படத்தின் பட்ஜெட் வைத்து பார்க்கையில் பல மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது.

காதலியை காரை ஏற்றிக் கொன்ற காதலன்! இதுதான் காரணமா?…

வேலூர் மாவட்டத்தில் காதலி திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காரை ஏற்றிக் கொன்ற காதலனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 30 ஆம் திகதி இரவு இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விசாரணை நடத்தியதில் குறித்த பெண், அத்திபட்டு கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவரது மகள் சாந்தி(25) என தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சாந்தியின் கைப்பேசி எண்ணை ஆய்வு செய்ததில் வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவர் சக்திவேல்குமாரின் மகன் நிலவுராஜன் (24) என்பவருடன் அதிகமாக தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சரணடைந்த 2 பேரையும், வாலாஜா பொலிசில் ஒப்படைத்தார். இவரிடம் விசாரணை நடத்தியதில், சாந்தியும், நிலவுராஜனின் அத்தை மகனான ஜான் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.

இந்நிலையில் ஜானுக்கும், வேறொரு பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளது. இருந்த போதிலும், சாந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அப்போதைய கலெக்டரிடம் சாந்தி புகார் அளித்துள்ளார், புகார் மனு மீது விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள் ஜானுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதால் விலகி செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நிலவுராஜன் ஜானுடன் சேர்த்து வைப்பதாககூறி சாந்தியுடன் அடிக்கடி போனில் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த விவகாரம் தெரியவந்ததால் நிலவுராஜனுக்கு அவரது பெற்றோர் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் சாந்தி தன்னை ஏமாற்றி விட்டதாக நிலவுராஜனிடம் கதறி அழுதுள்ளார். அப்பொழுது அவரை சமாதானம் செய்யும் விதமாக தனது அண்ணன் நித்தியானந்தம் என்பவருடன் நிலவுராஜன் காஞ்சீபுரத்திற்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.

பின்பு வீடு திரும்பும் போது, சாந்தி தன்னை திருமணம் செய்து கொள் என வலியுறுத்த இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே சாந்தி காரை விட்டு இறங்கி சாலையில் நடக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நிலவுராஜன் சாலையில் நடந்து சென்ற சாந்தி மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்று காலை 2 பேரையும் வாலாஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸ் அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.

தள்ளு வண்டியில் மனைவியின் சடலத்தை 60கிமீ தூரம் கொண்டு சென்ற மனிதர்

ஐதராபாத்தில் இருந்து விகரபாத் வரை, 60 கிமீ தூரம் மனைவியின்(கவிதா) சடலத்தை தள்ளு வண்டியில் வைத்து கொண்டு சென்றிருக்கிறார் ராமுலு என்னும் பிச்சைக்காரர்.

ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல 6,000 ரூபாய் செலவாகும் என்பதால் இந்த நிலை.

இருவரும் தொழு நோயாளிகள்.

60 கிமீ தள்ளிய பிறகு, மக்கள் உதவியால் ஆம்புலன்ஸ் கிடைத்துள்ளது

பூஜையறையில் இருக்கும் விளக்குகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டுமா?

வீடுகளில் பூஜையறையில் இருக்கும் விளக்குகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டுமா? அதேபோல், தினமும் திரி மாற்றவேண்டுமா?  என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஆனால் விளக்கை சுத்தம் தினமும் செய்யத்தான் வேண்டும். அது தங்க விளக்காக இருந்தாலும் வெள்ளி விளக்காக இருந்தாலும் துடைக்க வேண்டும்.

பித்தளையாக இருந்தால் தேய்த்தே ஆக வேண்டும். திரியையும் முந்தைய நாளின் மிச்சமாக விட்டுவிடாமல் தூக்கி எறியத்தான் வேண்டும். ஒரு நாளைக்கு எரியும் படியான திரியைத்தான் போட வேண்டும். போடுவது போடுகிறோம், ஒரேயடியாகப் போட்டு விடலாம் என்று முழ நீளத்துக்குப் போடக்கூடாது.

விளக்கு என்பது வெளிச்சம் சம்பந்தப்பட்ட சமாசாரம் இல்லை. அது மங்களகரமானது. கலாசாரம். வெறும் வெளிச்சத்தைக் காட்ட வேண்டுமானால் மின்விளக்கே போதுமே. விளக்கு எரிகிறது என்றால் அங்கே அக்னி பகவான் அமர்ந்திருக்கிறார் என்று பொருள். நேற்றைய கரியிலேயே இன்று அவரைக் கொண்டு போய் உட்கார வைப்பதா?

தினமும் திரி மாற்ற வேண்டும். விளக்கை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு சோம்பலாக இருந்தால் விளக்கே ஏற்றாதீர்கள். கடவுளை மனதில் நினைத்துக்கொண்டாலே போதும். பரமாத்மாவின் சொரூபமாக விளக்கை ஆராதனம் பண்ணிக்கொண்டிருக்கிறோம். அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும்.

சூரன்போர் பார்க்கச் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

சூரன் போர் பார்ப்பதற்கு  செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு சென்ற  சிறுவன்   தொண்டமானாறு கடலில் நீராடி  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனந்தகுமார் ஜெயபிரகாஸ் வயது (14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

.கந்தசஷ்டியின் இறுதி நாளான நேற்று குறித்த சிறுவன் உறவினர் ஒருவருடன் செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு  சென்றுள்ளான். இந்நிலையில் உறவினருக்கு தெரியாமல் சிறுவன் அருகில் உள்ள கடலில் சென்று நீராடியுள்ளான்.

இதன்போது, குறித்த சிறுவன் கடலில் மூழ்குவதைக் கண்ட ஏனைய பக்தர்கள் அவனை மீட்டு ஊறணி வைத்தியசாலையில் அனு மதித்தபோது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இது  தொடர்புடைய மேலதிக விசா ரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தலைவலி, வாந்தி பிரச்சினைகளுக்கு சிறந்த பாட்டி வைத்தியம்!

நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.

ஏலக்காய்க்கும் மூக்கடைப்பு சிகிச்சைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே திறக்கும். வெயிலில் அதிகம் அலைவதால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம் உண்டாகும்.

நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, நன்கு கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால், இந்த மயக்கம், தலைசுற்றல் உடனே நீங்கும். விக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும்.

மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும். மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்!

வாயுத் தொல்லையால் பொது இடங்களில் அவமானத்தைச் சந்திக்கிறவர்கள், கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும்.

உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது. குழந்தைகளுக்கு வாந்தி பிரச்சினை இருந்தால் பயப்படாமல் ஏலக்காயை மருந்தாகத் தரலாம்.

இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப்பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவுங்கள். இப்படி மூன்று வேளை செய்தால், வாந்தி உடனே நிற்கும்.