104 பெண்களை கன்னி கழிய பூசாரியிடம் அனுப்பிய பெற்றோர்கள்

மாளாவி என்ற ஆப்ரிக்க நாட்டில் பெண்களுக்கு பேய் ஓட்டுபவரை?! “ஹைனா” என அழைக்கின்றனர். அவரிடம் தங்களின் வயதுக்கு வந்த பிள்ளைகளை பெற்றோரே ஒரு இரவுக்கு அனுப்பி விடுவர்.

மாதவிடாய் முதல்முறையாக வந்த பிறகு இந்த சடங்கு நடைபெறும். இதனை நடத்தும் ஹைனா பெண்களுடன் ஒரு நாள் இரவு முழுவதும் இன்பம் அனுபவிப்பார்.

அப்போது சில பூஜைகளையும் செய்வார். பின்னர் காலையில் அனுப்பி விடுவார். இப்படி செய்தால் பிற்காலத்தில் அந்த பெண்ணிற்கு தீய ஆவிகள் தீங்கு தராது என்பது நம்பிக்கை. இப்படி ஒரு ஹைனா தான் எரிக் அன்னிவா. இவர் பூஜை என்ற பெயரில் 104 பெண்களை பலாத்காரம் செய்துள்ளார். இவராக விரும்பிப் போய் இதனை செய்வதில்லை.

பெற்றோர்களே தங்களது பெண் பிள்ளைகளை இவரிடம் அனுப்பி வைப்பதோடு, பலாத்காரம் செய்வதற்கு அவருக்கு சம்பளமும் கொடுக்கின்றனர். இதற்காக இவர் வாங்கும் தொகை 4 அமெரிக்க டாலர் முதல் 7 டாலர் வரை. பல பெண்களுடன் உடலுறவு கொண்டதால் இவருக்கு எய்ட்ஸ் நோயும் வந்து விட்டது.

இந்த உண்மைகள் அனைத்தும் பிபிசி எடுத்த ஆவணப் படம் மூலம் வெளி உலகிற்கு வந்து ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார் எரிக் அன்னிவா. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து அந்நாட்டு அதிபர் பீட்டர் முத்தாரிக்கா இவரை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து எரிக் அன்னிவா கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது ஊர்ஜிதமாகியது?

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது மக்களின் சந்தேகத்திற்குற்பட்டதாகவே இருக்கின்றது.

இந்நிலையில், இன்றைய தினம் சரத்பொன்சேகா வழங்கிய செவ்வியொன்றினை ஞாபகப்படுத்துகிறது

புலிகளுடனான போரில் முக்கிய பாத்திரம் வகித்த முன்னாள் இராணுத் தளபதி சரத் பொன்சேகா சிறை மீண்டு இந்தியாவின் பிரபல தமிழ் ஊடகமான ஆனந்த விகடனுக்கு  வழங்கியுள்ள பேட்டிலில் பிரபாகரனின் மனைவி, இளைய மகன் மற்றும் மகளுக்கு என்ன நடந்தது..

.தமக்கே தெரியாது எனவும் பிரபாகரன் உடலத்தை அவருக்கு நெருக்கமானவர்களை கொண்டு அடையாளம் கண்டதுடன் மரபணுப் பரிசோனை மூலம் சந்தேகத்துக்கு அப்பால் ஊர்ஜிதம் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.ltte-prabakaran-dead-20

”ராஜபேக்ஷ ‘நினைத்ததை முடிப்பவர்’ ஆக அவரின் தளபதியாக இருந்த நீங்களே, அவருக்கு எதிரியாகிப்போனதன் பின்னணி என்ன?”

”இலங்கை மக்களிடையே எனக்கு ஒரு கதாநாயகன் அந்தஸ்து கிடைத்ததுதான் காரணம். எங்கள் மக்கள் இந்தப் போர் வெற்றியை இன்னொரு விடுதலையாகக் கருதினார்கள். இந்த வெற்றிக்குப் பின் இராணுவம் எவ்வளவு பெரிய விலை கொடுத்திருந்தது என்பது மக்களுக்குத் தெரியும். அதனால், என்னைக் கொண்டாடினார்கள். என்னைப் பொறுத்த அளவில், இந்தப் போர் பயங்கரவாதத்தில் இருந்து மக்களை விடுவிக்க நாங்கள் நடத்திய போர். ஒரு இராணுவத் தளபதியாக அதை மீறிய எதிர்பார்ப்பு எதுவும் எனக்கு இல்லை. ஆனால், ராஜபேக்ஷவுக்கு நிறைய உள்நோக்கங்கள் இருந்தன. போர் வெற்றியைத் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொள்வது அதில் முக்கியமானது. போர் வெற்றிக்குப் பின் மக்கள் என்னைக் கொண்டாடியது, அவருக்குப் பெரிய பொறாமையை உருவாக்கியது. அவருடைய அரசியல் கணக்குகள் காலியாகிவிடுமோ என்று பயப்பட்டார். அதனால், அவரே என்னை அவருக்கு எதிரிஆக்கினார்.’

”உங்கள் அரசியல் அபிலாஷையும் அதற்கு ஒரு காரணம் அல்லவா?”

”இல்லை. போருக்குப் பின் பல்வேறு தரப்பினரும் என்னைச் சந்தித்தபோது, ஊழலும் அடக்குமுறையும் கொண்ட ராஜபேக்ஷ குடும்பத்தின் கூட்டாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற விஷயத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனாலும், நான் அமைதியாகத்தான் இருந்தேன் . ஒரு கட்டத்தில் ராஜபேக்ஷவே என்னை அரசியலை நோக்கித் தள்ளினார்.”

” சரி, போர் காலகட்டத்துக்குப் போவோம் . விடுதைலப் புலிகளின் வீழ்ச்சிக்கு எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? புலிகளின் பலம் என்ன… பலவீனம் என்ன?”

”இலங்கை இராணுவத்தின் பலவீனம்தான் புலிகளின் பலமாக இருந்தது. நான் பொறுப் பேற்பதற்கு முன்பு இலங்கை இராணுவம் எல்லா வகைகளிளும் பின்தங்கி இருந்தது. குறிப்பாக, தொழில்நுட்பத்தில். அதே போல, எங்கள் கடற்படை பலவீனமாக இருந்தது. அரசியல் சூழலும் புலிகளுக்குச் சாதகமாக இருந்தது. இவைதான் புலிகளின் முக்கியப் பலமாக இருந்தது. நான் பொறுப்பேற்றதும் இவை எல்லாவற்றையுமே மாற்றினேன். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், புலிகள் நவீனப் போர் உத்திகள், தொழில்நுட்பங்களில் மிகவும் பின்தங்கி இருந்தார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகான சர்வதேசச் சூழலை அவர்கள் உணராததும் முக்கியக் காரணம்.

”உண்மையச் சொல்லுங்கள்… பிரபாகரனின் முடிவு என்னவானது?”

”ஒரே உண்மைதான். பிரபாகரன் இப்போது உயிரேடு இல்லை. போரில் அவர் இறந்துவிட்டார்!”

”போரில் சண்டையின்போதுதான் பிரபாகரன் இறந்தாரா? அவர் சரணடையவில்லை என்றும் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படவில்லை என்றும் உங்களால் உறுதி அளிக்க முடியுமா?”

”கண்டிப்பாக.

அந்த இரவு எனக்கு எப்போதுமே மறக்க முடியாதது. ஒரு சின்ன பகுதிக்குள் பிரபாகரைனச் சுற்றி வளைத்தோம். மூன்று அணிகளைக் கொண்டு மூன்று வளையங்களை புலிகள் அமைத்திருந்தார்கள். அதிகபட்சம் அவர்கள் 400 பேர் இருந்திருக்கலாம். முதல் அணியில் 100 பேர். நடேசன், புலித்தேவன் தலைமையிலானது. அழித்தோம். அடுத்த அணியில் 200 பேர். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் தலைமையிலானது. அழித்தோம். கடைசிக்கட்டத் தாக்குதல் நள்ளிரவில் நடந்தது. 100 பேர்கொண்ட அணி அது. பிரபாகரன் தலைமையிலானது. அழித்தோம். சண்டையில் குண்டடிபட்டுத்தான் பிரபாகரன் இறந்தார்.”

” உங்கள் கூற்றுப்படி , நீங்கள் கொன்றது உண்மையான பிரபாகரைனத்தான் என்றால், ஊடகங்களைக் கூட்டிக் காட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?”

”உங்கள் கேள்வியில் ஒரு திருத்தம். நாங்கள் பிரபாகரனைக் கொல்லவில்லை. அவர் போரில் இறந்தார் என்பதே சரி. யுத்த களத்துக்குச் செல்லும்போது அங்கு என்ன நடக்கும் என்பதை யாராலும் அனுமானிக்க முடியாது. பத்திரிகையாளர்கைளை உடன் அழைத்துக்கொண்டு போருக்குப் போக முடியாது. அங்குள்ள சூழலே வேறு. பிரபாகரன் சடலம் கிடைத்தவுடன் அவருடைய மரணத்தை அறிவிப்பதற்கு முன் நாங்கள் அதைத் துளியும் சந்தேகம் இன்றி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி இருந்தது. பிரபாகரைனத் தெரிந்தவர்களை அழைத்துவந்தோம். பிறகு, மரபணுப் பரிசோதைன மேற்கொண்டோம் . முற்றுமுழுதாக இறந்தது பிரபாகரன் என்று தெரிந்து கொண்ட பின்னரே அறிவித்தோம். உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்… நம்புங்கள். ஊடகங்களில் நாங்கள் பார்த்த சடலம் பிரபாகரனுடையதுதான்.”prabakaran

 

”எந்தத் தருணத்திலாவது பிரபாகரனுடன் பேசி இருக்கிறீர்களா?”

”ஒருபோதும் இல்லை!”

”சரண் அடையும் முடிவை விடுதைலப் புலிகள் எடுத்த பின்னணி என்ன?”

” அவர்கள் அந்த முடிவை எடுக்கவில்லை. அந்த முடிவை நோக்கித் தள்ளப்பட்டார்கள் . நாலாபுறமும் நாங்கள் சுற்றி வளைத்து இருந்தோம். அவர்கள் வசம் இருந்த பகுதி கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக்கொண்டே வந்தது. தப்பிக்க வழியே இல்லாத நிலையில்தான் அவர்கள் ஆயுதங்கைள மௌனிக்கச் செய்தார்கள்.”

”ஆனால், சரண் அடைவது தொடர்பாக இராணுவத்துடன் புலிகள் பேசினார்கள் இல்லையா?”

”இல்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிலும் இராணுவம் புலிகளுடன் ஈடுபடவில்லை.”

” அப்படி என்றால் , சரண் அடைவது தொடர்பாக யார் யாருக்கிடேய பேச்சுவார்த்தை நடந்தது? தமிழகத் தலைவர்கள் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள்? அப்போது இராணுவத்தின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?”

”அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தமிழகத் தலைவர்கள் யாரெல்லாம் பேசினார்கள் என்று தெரியவில்லை. அரசு சாரா அமைப்புகள் பேசியது தெரியும். எங்களிடம் கேட்டபோது, ‘ யார் சரண் அடைந்தாலும் நாங்கள் வரேவற்கிறோம். சர்வதேசப் போர் விதிமுறைகளின்படி சரண் அடைபவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவார்கள்’ என்று சொன்னோம். எங்களை நம்பி வந்த பொதுமக்களையும் சரி, புலிகளையும் சரி, அப்படித்தான் நடத்தினோம்.’

”வெள்ளைக் கொடி ஏந்தி சரண் அடைய வருபவர்கள் கொல்லப்பட்டதுகூட போர் விதிமுறைகள் படிதானா?”

”சரண் அடைய வருபவர்கள் தொடர்பாக என் வீரர்களுக்கு நான் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தேன். அதனால்தான் இன்றைக்கு உயிரோடு விடுதைலயாகும் புலிகைள நீங்கள்; பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபோல வெள்ளைக் கொடியை ஏந்திக்கொண்டெல்லாம் எவருமே சரண் அடைய வரவில்லை . நாங்கள் போர் அறநெறிகளை எந்த வகையிலும் மீறவில்லை என்பதுதான் உண்மை.”

”எண்ணற்ற குழந்தைகள் போரில் கொல்லப்பட்டார்கள் . உதாரணமாக, பிரபாகரனின் இளைய மகன். அவர் மீது இருந்த காயங்கள் மிகக் குறைந்த தூரத்தில் இருந்து அவர் கொல்லப்பட்டதை உறுதி செய்கின்றன. அதாவது, பிடித்துவைத்துக் கொன்டு இருக்கிறீர்கள் . உங்கள் போர் அறம் இதுதானா?”

”நீங்கள் தொடர்ந்து யூகத்தின் அடிப்படையிலான விஷயங்கைள முன்வைத்தே கேள்விகளைக் கேட்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடுவதுபோல பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டுவிட்டதாக நான் நம்பவில்லை. கடைசி நாள் தாக்குதல் நடந்த இடங்களில் சில பெண்கள், நான்கைந்து சிறுவர்களின் சடலங்கைளக் கைப்பற்றினோம். அதில் பெரும்பாலானவர்கள் சயனைடு உட்கொண்டு இறந்தவர்கள். பிரபாகரனுக்கு நெருக்கமானவர்கள் – கருணா அம்மான் போன்றவர்கைள அழைத்துவந்து காட்டினோம். பிரபாகரன் மனைவியோ, இளைய மகனோ   மகளோ அதில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எங்கைளப் பொறுத்த அளவில் பிரபாகரன் குடும்பத்தில் கொல்லப்பட்டது பிரபாகரனும் அவருடைய மூத்த மகனும் மட்டும்தான். மற்ற மூவரின் நிலைபற்றி எங்களுக்கே இதுவரை எந்தத் தகவலும் தெரியாது.”

”ஒரு போர் அறநெறியும் பின்பற்றப்படாத இறுதிக் கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தப் போரை முன்னெடுத்த மனிதனாக உங்கள் மனநிலை எப்படி இருந்தது?”

” இந்தப் போரைத் தொடங்கியபோதே என் வீர்களுக்கு நான் பிறப்பித்த முக்கியமான உத்தரவு, பொதுமக்கள் உயிர் முக்கியம். கடைசி வரை அந்த உத்தரவை என் வீரர்கள் காப்பாற்றினார்கள். நீங்கள் சொல்வதுபோன்றெல்லாம் நடக்கவே இல்லை. ஒரு போரை முன்னெடுத்தவனாக நான் முழுத்திருப்தியான மனநிலையிலேயே இருக்கிறேன்.”

”இந்தப் போரில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் பங்களிப்பு என்ன? விடுதைலப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுக்கக் காரணம் என்ன?”

”அது அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகேளா… பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எல்லா நாடுகளுமே நினைக்கின்றன. புலிகள் விஷயத்தைப் பொறுத்த அளவில் மாற்றுப் பாதை அல்லது வேறு விதமான தீர்வுகளுக்கு அவர்கள் தயாராக இல்லை என்பதை இந்த நாடுகள் தெளிவாகப் புரிந்துகொண்டன. அதற்குப் பிறகுதான் எங்கள் நிலைப்பாட்டை ஆதரித்தன. சீனாவைப் பொறுத்த அளவில் அது எப்போதுமே எங்கள் நண்பன். எங்களுக்கு முக்கியமான ஆயுத இறக்குமதியாளர் சீனா என்பதும் முக்கியமானது.”

”முன்பு ஒரு முறை ‘சிங்களவர்களிடம் தமிழர்கள் அடங்கித்தான் போக வேண்டும்’ என்று பேசி இருந்தீர்கள். இப்போதும் ‘தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காகக் காத்திருக்கத்தான் வேண்டும்’ என்று பேசி இருக்கிறீர்கள். தமிழர்கள் மீதான உங்கள் வெறுப்புக்குக் காரணம் என்ன?

சிங்களவர்களுக்குக் கீழேதான் தமிழர்கள் இருக்க வேண்டுமா?”

”என்னுடைய பேச்சுகள் திரிக்கப்படுகின்றன என்று நினைக்கிறேன். நான் அப்படிப் பேசுபவன் இல்லை. தமிழர்கள் மீது எனக்கு வெறுப்பு எதுவும் இல்லை. இலங்கை இன்றைக்கு ஒரே நாடு. அதில் எல்லோருக்கும் சம உரிமை உண்டு. எல்லோரும் கூடி வாழ வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அமெரிக்காவில் எப்படி ஒபாமா அதிபர் ஆனாரோ… அதேபோல, இலங்கையில் ஒரு தமிழர் அதிபராகும் நாள் வர வேண்டும் என்றே விரும்புகிறேன்.”

”போருக்குப் பின் தமிழர் பகுதிகள் இராணுவமயமாக்கப்பட்டு இருக்கின்றன. இன்னமும் அங்கு இவ்வளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்க என்ன தேவை இருக்கிறது?”

”நான் இப்போது இராணுவத் தளபதி இல்லை என்பதை முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், 2010-க்குள் அங்கு எல்லா புனரமைப்புப் பணிகளையும் முடித்து, படையினரை வெளியேற்றிவிட வேண்டும் என்று அப்போது அரசிடம் சொல்லி இருந்தேன். அரசு இன்னமும் புனரமைப்புப் பணிகளை முடிக்கவில்லை. பணிகள் முடியாத நிலையில், படையினரை முழுமையாக வெளியேற்றுவது தொடர்பாகவும் முடிவெடுக்க முடியாது.”

இந்தியா – சீனா… இலங்கையின் இணக்கமான கூட்டாளி யார்?

”இந்தியா எங்களுக்கு மிக அருகில் இருக்கும் நாடு. வரலாற்று ரீதியாக, கலாசார ரீதியாக நம் இரு நாடுகளுக்கும் இiடேய உள்ள உறவு முக்கியமானது. எந்த ஒரு கட்டத்திலும் நாங்கள் இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட மாட்டோம். அதே சமயம், சீனா எங்களுக்கு மிக முக்கியமான நண்பன். இரு நாடுகளுமே இலங்கையால் தவிர்க்க முடியாதவர்கள்.”

”உங்களுடைய அடுத்த கட்ட அரசியல் திட்டங்கள் என்ன?”

”இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்வது… எல்லோருக்கும் பேச்சு உரிமை, எழுத்துரிமை, வாழ்வுரிமை கிடைக்கவும் ஊழலற்ற நிர்வாகத்தைக் கொண்டுவரவும் உழைப்பது!”

” ஒருவேளை அதிபர் தேர்தலில் வென்றால், தமிழர்கள் பிரச்சினைக்கு என்ன தீர்வை முன்வைப்பீர்கள்?”

”ஓட்டுக்காகப் பொய் பேசும் அரசியல்வாதி இல்லை நான். இந்தப் பிரச்னைக்கான தீர்வு காகிதங்களிலோ, வார்த்தைகளிலோ இல்லை. மனித மனங்களில் இருக்கிறது. அதை நான் சொல்ல விரும்பவில்லை. செய்துகாட்டுவேன்.”

”சர்வேதச நீதிமன்றம் போர்க் குற்றங்களுக்காக சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டைன விதித்திருக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?”

”வரவேற்கிறேன். போர்க் குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அதற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நான் விரும்புருகிறேன்.”

”எதிர்கால வரலாறு உங்கள் பெயரை ஹிட்லர், முசோலினி, போல்பாட் வரிசையில் வைக்கும். இதை உணர்கிறீர்களா?”

”இராணுவத்தைக் கையாண்டவர்கள் என்பதாலேயே அவர்களோடு என் பெயரை வரலாறு சேர்த்துவிடாது. நீங்கள் குறிப்பிடுபவர்கள் எல்லோருமே சர்வாதிகாரிகள். நானோ ஜனநாயகத்துக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறேன்!”

இரண்டாவது “எழுக தமிழ் பேரணி” மட்டக்களப்பில்!

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்யும் இரண்டாவது   “எழுக தமிழ் பேரணி”   மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த பேரணி நடைபெறவுள்ளதாக  தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் உருவரான வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவை நேற்று மாலை கொழும்பு மன்றக்கல்லூரியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சூழ்நிலைகளாலும் நிர்பந்தங்களாலும் அழுத்தங்களாலும் எமது மக்களின் நீதிக்கான பயணம் மழுங்கடிக்கப்படலாம் என்ற ஐயப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக நிலவி வந்தது.

எனவே அதனைத்தடுக்கும் வகையில் விழிப்புணர்வு செயற்பாடொன்றின் அவசியம் உணரப்பட்டது.

அதனால்தான் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ். நகரில் “எழுக தமிழ் பேரணி நடத்தப்பட்டது.

எனவே மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும் வெளிக்கொண்டுவந்து அதற்கு தீர்வு காணும் நோக்கில் இரண்டாவது “எழுக தமிழ் பேரணியை ” எதிர்வரும் ஜனவரி மாதம் மட்டக்களப்பில் நடத்துவதற்கு எதிர்பார்த்துதள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்ற முதல் நாளில் செய்யப்போவது என்ன?

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்களை காணொளி செய்தி ஒன்றில் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி மாதம் 20-ந் திகதி அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்களை காணொளி செய்தி ஒன்றில் அறிவித்துள்ளார்.

அதில் அவர், பதவி ஏற்கும் முதல் நாளில் ‘டி.பி.பி.’ என்று அழைக்கப்படுகிற பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, விலக்கிக்கொள்ளப்போவதுதான் முதல் வேலை என குறிப்பிட்டுள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தம், கடந்த ஆண்டு அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட 12 நாடுகளிடையே ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இன்னும் அந்தந்த நாடுகள் முறைப்படி ஒப்புதல் வழங்கவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் 12 நாடுகளின் மந்திரிகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது உலக பொருளாதாரத்தில் 40 சதவீத பங்களிப்பு செய்யக்கூடியதாகும். இப்போது அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகும் அமெரிக்காவின் நடவடிக்கை, உள்நாட்டில் புதிய தொழிற்சாலைகளையும், வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித்தரும் என்பது டிரம்பின் நம்பிக்கை.

அதே நேரத்தில் ஒபாமா கேர் சுகாதார காப்பீடு திட்டத்தை ரத்து செய்வது பற்றியோ, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவது பற்றியோ டிரம்ப் தனது முன்னுரிமைப்பட்டியலில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிண்ணியாவில் கர்ப்பிணிப் பெண் கொலை

கிண்ணியா – சூரங்கல் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் குளியலறையில் வழுக்கி வீழ்ந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அது தொடர்பான அறிக்கையும் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சூரங்கல் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியான இளம் யுவதியொருவர் கடந்த மாதம் 20 ஆம் திகதி குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவர் குளியலறையில் வழுக்கி வீழ்ந்து உயிரிழந்ததாக யுவதியின் கணவர் மற்றும் அவரின் உறவினர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

இந்த மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் பிரகாரம் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், கழுத்து நெறிக்கப்பட்டு யுவதி கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, யுவதியின் கணவரைக் கைது செய்துள்ள கிண்ணியா பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உங்களை பேஸ்புக்கில் யார் யார் நோட்டமிட்டுள்ளார்கள்? அறிய வேண்டுமா?

நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று

அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும்.
அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.
அந்த Search Bar இல் {“list” இதை Type செய்து Enter பண்ணவும்.
இது மாதிரி {“list””1000011345400-2″,”10000043254566-3″ இருக்கும் list கிடைக்கும்.
உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code
அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2″ இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது
சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம்?
புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை
paste பண்ணவும்.
இதுமாதிரி [ www.facebook.com/1000011345400] இப்போது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.
நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்.

எலியை பிடித்து தூக்கி செல்லும் இராட்சத சிலந்தி…

2.0 First Look – சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 – அசத்தும் First Look

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் முன் இதை கொஞ்சம் படிங்க..!

முன்பெல்லால் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் பல கடைகள் விசாரித்து அதன் தரம் குறித்துக் கடைக்காரரிடம் கேட்டு அறிந்து அதன் பின்னர் வாங்கி நாமே ஒரு வண்டி ஏற்பாடு செய்து வீட்டிற்கு நம்முடைய பொறுப்பில் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

ஆனால் தற்போதைய டிஜிட்டல் உலகில் கம்ப்யூட்டரை ஆன் செய்து நாம் வாங்க வேண்டிய பொருளின் தரம், விலை, ஒப்பீடு ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு ஆன்லைனிலேயே ஆர்டர் கொடுத்துவிட்டால் போதும், பொருள் நம்முடைய வீடு தேடி வந்துவிடும். பொருளுக்குரிய பணத்தையும் ஆன்லைனிலோ அல்லது பொருள் கொண்டு சேர்ப்பவர்களிடமோ கொடுத்து விடலாம்.

அந்த அளவுக்கு இது கஸ்டமர்களின் உலகமாக மாறிவிட்டது. ஆனால் அதே நேரத்தில் ஒரு பொருளை ஆன்லைனில் தேர்வு செய்துவிட்டு க்ளிக் செய்தவுடன் அந்தப் பொருள் உங்கள் வீட்டைத் தேடி வருவதற்குள் எத்தனை பிராசஸ் நடக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதையும் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆன்லைன் பர்சேஸில் என்ன நடக்கின்றது?

நீங்கள் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து Buy Now என்ற பட்டனை க்ளிக் செய்தவுடன் உடனடியாக உங்களது பின்கோட் நம்பர் சரிபார்க்கப்படுகிறது. பின்னர் அந்தப் பின்கோடு நம்பர் பகுதிக்கு அருகில் இருக்கும் நீங்கள் தேர்வு செய்த பொருளின் குடோனுக்கு அந்தத் தகவல் உடனடியாக அனுப்பப்படுகிறது.

உங்கள் ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படுகிறது

நீங்கள் தேர்வு செய்த பொருளை குடோனில் உள்ள ஊழியர்கள் சரிபார்த்து, பின்னர் அதன் தரம் பார்த்து அந்தப் பொருளை பேக்கேஜிங் செக்சனுக்கு அனுப்புவார்கள். பாதுகாப்பான முறையில் பேக்கேஜ் செய்யப்பட்டவுடன் அந்தப் பொருள் டெலிவரி செக்சனுக்குச் செல்லும்.

டெலிவரி செக்சனில் என்ன நடக்கும்?

உங்கள் பொருள் பாதுகாப்பான முறையில் டெலிவரி செக்சனுக்குச் சென்ற பின்னர்ச் செண்ட்ரல் ஹப் என்று சொல்லக்கூடிய முக்கியப் பகுதியில் உள்ள உங்கள் ஏரியாவின் பின்கோட் நம்பருக்கு உரிய இடத்தில் வைக்கப்படும்.

சரிபார்க்கப்படும் முறை:

நீங்கள் கொடுத்த ஆர்டர்தான் பேக்கிங் செய்யப்பட்டுள்ளதா?, பேக்கிங் தரம் எப்படி ஆகியவற்றைச் சோதனை செய்து பின்னர் உங்கள் பின்கோட் நம்பர் முகவரிக்கு டெலிவரி செய்ய எது சரியான வழி என்பது குறித்து ஆராயப்படும்.

டெலிவரி செய்யும் முறை:

குடோனில் அனைத்து வித செக்கப்களும் முடிந்த பின்னர் டெலிவரி ஊழியரிடம் பொருள் ஒப்படைக்கப்படும். இதற்கென உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் உதவியால் குடோனில் இருந்து டெலிவரி செய்யப்படும் இடத்திற்குச் செல்வதற்கான சரியான பாதையைத் தேர்வு செய்து பாதுகாப்பாகப் பொருள் அனுப்பி வைக்கப்படும்.

பின்கோட் முறைப்படி அனுப்புதல்:

ஒவ்வொரு ஆர்டரும் எந்தப் பின்கோட் நம்பரில் இருந்து வந்துள்ளது என்பதை அறிந்து அவை ஒவ்வொன்றாக அனுப்பி வைக்கப்படும். அருகில் இருக்கும் பின்கோடு நம்பருக்குரிய பொருள் உடனுக்குடனும், தூரத்தில் உள்ள பின்கோடு நம்பருக்குரிய பொருள் ஒருசில கால அவகாசம் எடுத்தும் அனுப்பி வைக்கப்படும்.

எடைக்குத் தகுந்தவாறு பேக்கிங்:

ஆர்டர் வந்த ஒவ்வொரு பொருள் அதன் எடைக்குத் தகுந்த பாதுகாப்புடன் பேக் செய்யப்பட்டு அதற்குரிய ஷெல்ப்களில் வைக்கப்படும். இந்த ஷெல்ப்களில் பொருட்கள் வைக்கப்படும்போது ஆர்டர் வந்த தேதியின் வரிசைப்படி வைக்கப்படும். இந்தியாவில் இந்தப் பிராசஸ் அனைத்துமே ஆட்டமெட்டிக் முறையில் லோட் செய்வது, ஸ்கேன் செய்வது மற்றும் பேக்கிங் செய்வது ஆகியவை முறையாகச் செய்யப்படுகின்றது ஒவ்வொரு பொருளும் அதன் எடைக்கேற்ப கன்வேயர் பெல்ட் மூலம் அந்தந்த பின்கோடுக்குரிய இடத்திற்கு ஆட்டமெட்டிக்காகக் கொண்டு சேரும் வகையில் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்டர் வந்த பொருள் சோதனை செய்யப்படுகிறது.

குடோனில் இருந்து ஆர்டர் வந்த பொருள் டெலிவரி செய்யப்படுவதற்கு முன்னர்க் கம்ப்யூட்டர் ஸ்கேனிங் மூலம் அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்படுகிறது. இதனால் அந்தந்த பொருள் உரியவர்களுக்கு மிகச்சரியாகப் போய்ச் சேரும். மேலும் டெலிவரி செய்வதற்கு முன்னர்த் தயாரிப்பு நிறுவனங்களின் பார்கோட் சரிபார்க்கப்பட ஸ்கேன் செய்யப்படுகிறது.

நீங்கள் ஆர்டர் கொடுத்த பொருள்தானா?

ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் அளித்தவுடன் உங்கள் ஆர்டரில் அந்தப் பொருளின் பார்கோடு ஆட்டமெட்டிக்காகப் பதிவு செய்யப்பட்டுவிடும். பின்னர் டெலிவரி செய்யும்போது ஸ்க்ரீனில் ஆர்டர் காப்பியில் உள்ள பார்கோடும், டெலிவரி செய்யப்படும் பொருளில் உள்ள பார்கோடும் சரியாக இருக்கின்றதா? என்று சோதனை செய்யப்படும். இரண்டும் சரியாக இருந்தால் மட்டுமே டெலிவரிக்கு அனுமதிக்கப்படும். எனவே நீங்கள் ஆர்டர் செய்த பொருள் மாறி வந்திருக்குமோ என்ற கவலையோ அல்லது அச்சமோ தேவையில்லை.

மேப்பிங் டெக்னாலஜி

ஆர்டர் செய்யும்போது நீங்கள் கொடுத்த முகவரி மற்றும் பின்கோடு நம்பர் மேப்பிங் டெக்னாலஜி மூலம் முதலில் சரிபார்க்கப்படுகிறது. உங்கள் முகவரி ஒருவேளை சரியானதாக இல்லையென்றால் மேப்பிங் டெக்னால்ஜி மூலம் கண்டுபிடிக்கப்படும். உதாரணமாகத் தெரு பெயரை மட்டும் நீங்கள் குறிப்பிட்டு ஏரியாவின் பெயரை குறிப்பிடவில்லை என்றால் மேப்பிங் டெக்னாலஜி மூலம் அது கண்டுபிடிக்கப்படும்,

ஒருவழியா உங்கள் பொருள் வந்துருச்சா?

மேற்கண்ட அனைத்து பிராசஸ்களும் ஒவ்வொன்றாக முடித்த பின்னர் நீங்கள் ஆர்டர் செய்த பொருள் உங்களைத் தேடி வரும். அதற்கென நியமனம் செய்யப்பட்ட டெலிவரி பாய் உங்களிடம் உரியப் பொருளை ஒப்படைப்பார். என்ன வாசகர்களே, ஒரு பொருளை ஆர்டர் செய்தால் அதை டெலிவரி செய்வதற்கு அதற்குப் பின்னால் இவ்வளவு பிராசஸ் இருக்கின்றது என்று ஆச்சரியப்படுகிறீர்களா?

 

டிவியில் வீரம் காட்டும் மோடி என்னிடம் காட்டக்கூடாதா? ராகுல்காந்தி

New Delhi: Congress Vice President Rahul Gandhi addressing the media at Parliament during the winter session, in New Delhi on on Tuesday. PTI Photo by Subhav Shukla (PTI11_22_2016_000122B)

கருப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாக மணிக்கணக்கில் டிவியில் தன்னுடைய சாதனையை பேசிவரும் பிரதமர் மோடி என்னுடன் பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் வாக்குவாதம் செய்ய தயாரா? என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி சவால் விட்டுள்ளார்.

இந்த சவாலுக்கு மோடியின் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை. ,மேலும் ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் எவ்வித பதிலும் அளிக்க மாட்டார் என்று பாஜக வட்டாரம் கூறுகின்றது

இந்நிலையில் ரூபாய் நோட்டு அதிரடியை அடுத்து மேலும் சில அதிரடியை அறிவிக்கவுள்ளதாகவும், ரூபாய் நோட்டு விவகாரம் ஒரு சின்ன புள்ளிதான் என்றும் இன்னும் பெரிய கோலத்தை மோடி போடும்போது கருப்புபண முதலாளிகள் அதிர்ச்சி அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

‘பாகுபலி 2’ போர்க்காட்சியை வெளியிட்ட எடிட்டர் அதிரடி கைது

‘பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான’ பாகுபலி 2′ படத்தில் முதல் பாகத்தை விட பிரமாண்டமான போர்க்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி கடைசி அரை மணி நேரம் இருக்கும் என்று படக்க்ழுழுவினர் தெரிவித்துள்ள நிலையில் இந்த போர்க்காட்சியின் ஒருசில வீடியோ க்ளிப்பிங்குகள் இன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து படகுழுவினர்களால் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்ததில் கிருஷ்ணா என்ற வீடியோ எடிட்டர் செய்த கைவரிசை என தெரியவந்தது.

பின்னர் கிருஷ்ணாவை கைது செய்த போலீஸார் இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

முழு நிர்வாண நிலையில் இறந்து கிடந்த சபர்ணாவின் அதிர்ச்சி வீடியோ

சின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகியவற்றில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் சபர்ணா திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மதுரவாயலில் இவர் வசிந்து வந்த வீடு கடந்த மூன்று நாட்களாக திறக்கபடாமல் இருந்துள்ளது. மேலும் துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்த சென்ற காவல் துறையினர் சபர்ணாவின் உடலை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நடிகை சபர்ணா முழு நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், அவரது கையில் பிளேடால் அறுத்த அடையாளங்கள் இருந்தன. இது அவரே அறுத்துக்கொண்டதா? அல்லது வேறு எவரேனும் செய்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சபர்ணாவின் உடல் மீட்கப்பட்ட அப்பார்ட்மெண்டில் மதுபானங்கள், சிகரெட், கஞ்சா போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் கதவு தாழ்ப்பாள் போடாமல் இருந்துள்ளது. இதனையடுத்து சபர்ணாவின் டைரியை கைப்பற்றியுள்ள காவல்துறை அதனை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

குண்டு வெடித்த பிறகு தணு நடந்து போனார்!- நளினி சொல்லும் ராஜீவ் கொலைக் களம்

‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்” என்ற தலைப்பில் நளினி முருகன், தனது எண்ணங்களைப் புத்தகமாக ஆக்கி உள்ளார்.

பத்திரிகையாளர் பா.ஏகலைவன் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து எழுதியுள்ளார். வரும் 24-ம் தேதி சென்னையில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட உள்ளது.

 

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தன் எண்ணங்களை இந்தப் புத்தகத்தில் நளினி சொல்லி இருக்கிறார். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் பல முதன்முறையாக வெளிவருகின்றன.

அதன் சில பகுதிகள் மட்டும் இங்கே…

இருட்டறையில் இருந்து!

இது கால் நூற்றாண்டைத் தாண்டி இருட்டறைக்கு உள்ளாக ஒலித்துக் கொண்டிருக்கும் என் மனசாட்சியின் குரல். இப்போது, சிறைக் கொட்டடியைத் தாண்டி உங்களின் இதயத்தைத் தட்டப்போகிறது.

எனக்கான கனவுகளோடு அந்த வசந்தகால நடைபாதையில் எல்லோரையும் போல நானும் இளமையைச் சுமந்து கொண்டு காத்திருந்தேன். திடீரென ஒரு வெடிகுண்டுச் சத்தம், என் கனவுகளை எல்லாம் சிதைத்துவிட்டுப் போகும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

இப்போது 26 ஆண்டு காலம், நீண்ட நெடிய சிறைவாசத்தை அனுபவித்தபடி நிற்கிறேன். இதில் பாதிக் காலம், ‘நாளை என் உடல் தூக்கில் தொங்குமோ’, என்ற மிரட்சியில் கழிந்தது. எப்போது விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்தில் என் கணவரையும், குழந்தையையும் பிரிந்த துயரில் கண்ணீரில், கவலையில் என் மீதி வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.

தாஸ் தங்குவதற்கு ஓர் இடம்!

ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல ஊர்களில் தங்கியிருந்தார்கள். அப்படி போராளிகளுக்கு ஆதரவாக நின்ற இளைஞர் பட்டாளத்தில் என் தம்பி பாக்கியநாதனும் ஒருவன். சென்னையில் பிரபலமாக இருந்த சுபா சுந்தரம் போட்டோ ஸ்டூடியோவுக்கு பாக்கியநாதன் போய்வருவான். அங்குதான் பேரறிவாளன், ஹரிபாபு, முத்துராஜ் உள்ளிட்ட பலரும் புகைப்படக்கலை பயிற்சி கற்றுக்கொண்டிருந்தார்கள். அப்படியான நண்பர்கள் பட்டியலில் புதிதாக வந்து சேர்ந்தவர்தான் தாஸ் என்ற முருகன்.

தாஸ் தங்குவதற்கு ஓர் இடம் வேண்டும் என்று தம்பி பாக்கியாவிடம் பேசியிருக்கிறார்கள். ‘வேறு வாடகை வீடு பார்த்துக்கொள்ளும் வரை என் வீட்டில் இருந்துகொள்’ என்று தாஸை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறான் தம்பி. 1991 பிப்ரவரி எட்டாம் தேதி முருகனை முதன்முதலாக சந்தித்தேன். ராயப்பேட்டையில் சபரி காலேஜ், தியாகராய நகரில் விவேகானந்தா காலேஜ் என இரண்டு டுடோரியல் கல்லூரிகளில் சேர்ந்து ஆங்கில வகுப்புக்கு தினமும் காலையிலும் மாலையிலும் தவறாமல் போய்விடுவார்.

வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்காக அவரை அவரது அப்பா, ஒரு ஏஜென்ஸியைப் பிடித்து படகு மூலம் தமிழகத்தின் வேதாரண்யத்துக்கு அனுப்பி வைத்துவிட்டார். அப்படி வேதாரண்யம் வந்த இடத்தில் தான் ஒற்றைக்கண் சிவராசன் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் ஏஜென்ட்டாக அறிமுகமாகியிருக்கிறார்.

நாங்கள் இருவரும் சம்பந்தமில்லாமல் நிறையப் பேசிக் கொண்டோம். எங்கள் மனதைப் புறக்கணித்து விட்டு இதயங்கள் இரண்டும் தமக்குள்ளே பேசிக்கொள்ளத் தொடங்கி விட்டன. 1991 ஏப்ரல் 21-ம் தேதி திருப்பதி கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றோம். என் கழுத்தில் முருகன் தாலி கட்டினார். அவர் விருப்பப்படி என் காலில் மெட்டியைப் போட்டுவிட்டார். தாலியையும், மெட்டியையும் என் வழக்கில் ஏன் மறைத்தார்கள்? எங்கள் உறவையும் ஏன் கொச்சைப்படுத்தினார்கள் என்பதுதான் எங்கள் காதலுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய துரதிஷ்ட வலியாகும்.

தணுவைச் சந்தித்தேன்!

திருமணத்துக்குப் பிறகு, அவரது வெளிநாட்டுப் பயணத்தில் நான் அதிக அக்கறை செலுத்த ஆரம்பித்தேன். பயண முகவர் என்ற அளவில் முதன் முதலில் சிவராசன் என்பவரைப் பற்றி சொன்னார்.

‘ஈழ விடுதலைக்கு இந்தியத் தலைவர்களின் ஆதரவை சிவராசன் திரட்டி வருபவர். ஒவ்வொருவராக சந்தித்து நட்பு ஏற்படுத்தி வருபவர்’ என்று என் கணவர் சொன்னார். 1991 மே மாதம் மூன்றாம் தேதி அன்றுதான் சிவராசன் எனக்கு முதன்முதலாக அறிமுகமானார். சுபா, தணு ஆகிய இருவரையும் அழைத்து வந்து அறிமுகம் செய்தார் சிவராசன். வில்லிவாக்கத்தில் உள்ள எனது வீட்டில் தங்கி இருந்தார்கள்.

7.5.91 அன்று நந்தனத்தில் நடந்த வி.பி.சிங் கலந்து கொண்ட கூட்டத்துக்கு என்னை அழைத்தார்கள். சென்றேன். கூட்டத்தில் ஹரிபாபு, பேரறிவாளன் ஆகிய இருவரையும் பார்த்தேன். வி.பி.சிங்குக்கு மாலை அணிவிக்க தணு முயற்சி செய்தார். முடியவில்லை. மேடையில் இருந்து இறங்கிப் போகும்போது மாலையைக் கையில் வாங்கிக்கொண்டார் வி.பி.சிங். சுமார் ஏழு மணி நேரம் அங்கு இருந்தோம். பிறகு நடந்த விசாரணையில் அந்தக் கூட்டத்தில் எங்களை பார்த்ததாக ஒருவர்கூட சாட்சியம் அளிக்கவில்லை.

12.5.91 அன்று சுபாவும், தணுவும் என் வீட்டுக்கு வந்தார்கள். அன்று எனக்கு விடுமுறை நாள் என்பதால் அவர்களை மீண்டும் சினிமாவுக்கும் கோயிலுக்கும் கடைக்குமாக அழைத்துப்போய் வந்தேன். மே 18-ம் தேதியும் வந்தார்கள். அன்று முழுவதும் மகாபலிபுரம் சென்று வந்தோம். 19-ம் தேதியும் வெளியில் சுற்றினோம். விடிந்ததும் அவர்கள் கிளம்பினார்கள். நான் வேலைக்குச் சென்றுவிட்டேன்.

அந்த நாளும் வந்தது!

21-ம் தேதி சுபா, தணுவுடன் பாரிஸ் கார்னர் பேருந்து நிலையம் போய் இறங்கினோம். அங்கு சிவராசனும் ஹரிபாபுவும் காத்திருந்தார்கள். சுமார் ஏழு மணி அளவில் ஸ்ரீபெரும்புதூரில் இறங்கினோம். சாப்பிட்டோம். கூட்டமே இல்லை. போலீஸார் தான் அதிகம் இருந்தார்கள். சிவராசனும், தணுவும் ஏதோ கோபமாகப் பேசிக் கொண்டார்கள். அங்கிருந்த முக்கிய நபர்களை சிவராசனுக்குத் தெரிந்திருந்தது. அவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் சிவராசன். வி.ஐ.பி-கள் உட்காரும் இடத்துக்குள் தணுவை மட்டும் அழைத்துக்கொண்டு போனார். பெண்கள் பகுதியில் நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில் வி.ஐ.பி-கள் வரிசையில் தணுவை முதலாவதாகக் கொண்டுபோய் நிறுத்திவிட்டு, வேறு ஒரு பகுதியில் தூரமாகப்போய் நின்றுகொண்டு, அங்கிருந்த தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருந்தார் சிவராசன்.

சுமார் 10.15 இருக்கும் ராஜீவ் காந்தி வந்து விட்டார். அவரை அருகில் சென்று பார்க்க எனக்கு ஆர்வமாக இருந்தது. சுபாவை அழைத்தேன். வேண்டாம் என்று என் கையைப் பிடித்து இழுத்த சுபா, வெளியே இழுத்துச்சென்றார். கூட்டத்தைவிட்டு வெளியே நகர்ந்து சற்று தள்ளி தூரமாகப் போய் நின்றுகொண்டார். ‘என்னாச்சு சுபா… ஏன்?’ என்று கேட்டேன். ‘ஒன்றுமில்லை பேசாமல் இருங்கள்’ என்றாள். என்னையும் வெளியே இழுத்துச் சென்றாள்.

சாலையை நோக்கி நடந்திருப்போம். இது வரையிலும் நான் கேட்டிராத பெரிய வெடிச்சத்தம். திரும்பிப் பார்த்தேன். ஒரே புகைமண்டலம். கூட்டத்துக்குள் இருந்து சிவராசன் எங்களை நோக்கி வந்தார். ஆட்டோவில் ஏறினோம். ‘நிறைய குழப்படிகள்’ என்று சொல்லிக் கொண்டார். புதிதாக ஒரு வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றார் சிவராசன்.

கண் முன்னால் நடந்து போனார் தணு!

நாங்கள் மூன்று பேரும் ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடக்கிறோம். பட்டென்று எங்கள் முன்பாக கண்ணெதிரே தணு நடந்து போய்க்கொண்டிருந்தார். இது கற்பனை அல்ல. நாங்கள் எல்லோருமே அந்தக் காட்சியைக் கண் கூடாகப் பார்த்து நிற்கிறோம். எங்களுக்குமுன் தணு அங்கு எப்படி வந்தாள் என நான் அதிர்ச்சியானேன். எப்படி என சுபாவை சைகையில் கேட்டேன். அவளுக்கும் அதிர்ச்சி. தணுவை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, வாயில் விரல் வைத்துச் சத்தம் போடாதீர்கள் என காட்டினாள். வீட்டில் இருந்து கிளம்பும்போது எந்த உடையில் கிளம்பினாளோ அதே உடையில், கையில் சந்தன மாலையோடு அப்படியே நடந்துசென்றபடி இருக்கிறாள் தணு.

பிறகு, எங்களை எல்லாம் சி.பி.ஐ. பிடித்து விசாரித்தபோது நாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே ‘தணுவின் ஆவி’ காட்சியைப் பதிவு செய்திருந்தோம் என்பதைப் பின்நாட்களில் தெரிந்து கொண்டோம். அது பிரமையா அல்லது உண்மையா என்று இன்றுவரை என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால், ஒரே நேரத்தில் பலர் பார்த்தோம் என்பதை சி.பி.ஐ-யினரும் உறுதிப்படுத்தியிருந்தார்கள். கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. இப்போது நினைத்தாலும் எனக்கு அந்தக் காட்சி உதறலாகத்தான் இருக்கிறது. அதை நினைத்துப் பல இரவுகள் நான் பயந்து நடுங்கியிருக்கிறேன்.

எங்களுக்குத் தெரியாது!

அப்போது நான் குழந்தைப் பேறு அடைந்திருந்தேன். என் கணவரை எப்படியாவது வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவிட நினைத்தேன். அதனால்தான் சிவராசன் கோபப்படாதவாறு நடந்தேன். என் கணவர் நன்மைக்காக சுபா, தணுவை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்துதான் மனதில் ஒரு சந்தேக நெருடல் இருந்தது. ஏதோ சிக்கலில் எங்களை அறியாமல் சிக்கி விட்டோமோ என நினைத்தேன்.

கணவரை அழைத்துக்கொண்டு திருப்பதி செல்ல திட்டமிட்டேன். மே 10-ம் தேதி அவரை பார்த்தது. மே 25-ம் தேதிதான் பார்த்தேன். வில்லிவாக்கம் வீட்டில் இருந்தபோது சிவராசன் வந்துவிட்டார். எங்களோடு அவரும் திருப்பதி வருவதாகச் சொல்லிவிட்டார். ‘உன் அம்மாவையும் கூப்பிடு’ என்றார் சிவராசன். தம்பிக்கு போன் செய்து சொன்னேன். கொலைத் திட்டம் பற்றி எல்லாம் எங்களுக்குத் தெரிந்திருந்தால் யாராவது சொந்தப் பெயரில் கார் பதிவு செய்து சிவராசன், சுபா உடன் திருப்பதி போயிருப்பார்களா?

சிவராசனும், என் கணவரும் ஒரே அறையிலும்… நான், சுபா, என் அம்மா மூவரும் ஒரு அறையிலும் இருந்தோம். ‘தணு எங்கே?’ என்று என் கணவர் கேட்க, சிவராசன் மழுப்பி இருக்கிறார். 26-ம் தேதி காலையில் தணுவின் புகைப்படம் வெளியாகிவிட்டது. அதன் பிறகுதான் என் கணவருக்கே தெரியும். என்னிடம் இதுபற்றி பேசினார். பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்பதை அவரும் உணர்ந்தார். நம்மால், நமக்கு உதவி செய்த குடும்பத்துக்குச் சிக்கல் வந்ததாக என் கணவர் நினைத்தார். என்னைவிட என் கணவரின் உயிரும் பாதுகாப்பும் எனக்கு முக்கியமாகப்பட்டது.

நாங்கள் காதலிப்பது சிவராசனுக்குத் தெரியும், ஆனால், இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டோம் என்பது தெரியாது. ‘உங்கள் காதல் எனக்குத் தெரியும். நீ சரியாக ஒத்துழைக்கவில்லையானால் உங்களுக்குள் சிக்கல் ஏற்படுத்துவேன்’ என்பது மாதிரி அவர் அணுகுமுறை இருந்ததால், சிவராசன் விஷயத்தில் தள்ளியே இருப்போம் என்ற முடிவில் இருந்தேன்.

வேலையை ராஜினாமா செய்தேன்!

திருப்பதியில் இருந்து திருத்தணி வந்து முருகனை வேண்டிக்கொண்டு சென்னை வந்தோம். மாலை நாளிதழ்களில் மனித வெடிகுண்டு என்று தணு படம் வந்திருந்தது. எனக்குக் கண்கள் இருட்டிக் கொண்டுவிட்டது. கத்திக் கதறினேன். சுற்றி இருந்த எல்லோருமே அழுதார்கள். போலீஸ் வந்து கேட்டால் உண்மையைச் சொல்லப்போகிறோம். எப்படியும் என் மீது தவறு ஏதும் இல்லை என நிச்சயம் புரிந்து கொண்டு விடுவார்கள் என நினைத்தேன்.

அதன்பிறகுதான், எங்களுக்குள் திருமணம் நடந்து விட்டதை அம்மாவிடம் சொன்னேன். தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அம்மா அழுதார். என் கணவரை சபித்தார். நடந்த தவறில் என் கணவருக்கு ஒரு பங்கும் இல்லையம்மா என்று நான் சொன்னேன்.

என்னுடைய அலுவலகத்துக்கு சி.பி.ஐ. வர ஆரம்பித்தது. சங்கர் என்பவர் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர் வைத்திருந்த காகிகத்தில் என் அலுவலக போன் நம்பர் இருந்ததாகவும் சொன்னார்கள். ஜூன் 10-ம் தேதி நான் எனது வேலையை ராஜினாமா செய்தேன். அலுவலகம் சென்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, அலுவலக ஊழியர் சுஜயா வீடு சென்று அலுவலகச் சாவியை ஒப்படைத்துவிட்டு திரும்பினேன்.

ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பிருந்தால் இப்படியா நடந்து கொண்டிருப்பேன்? தப்பிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ஒருவர் இப்படிச் செய்வாரா? மனதளவில் நான் குற்றவாளி இல்லை என்பதால் என்னையும் அறியாமல் அப்படி நடந்து கொண்டிருக்கிறேன்.

அலையாய் அலைந்தோம்!

நானும் என் கணவரும் சாந்தி (ஜூன் 11) தியேட்டர் அருகே சந்தித்தோம். திருப்பதி போனோம். அதற்குள் என் குடும்பத்தினர் அனைவரும் சி.பி.ஐ-யால் வளைக்கப்பட்டார்கள். ‘என் கணவரையும் குழந்தையையும் காப்பாத்துப்பா’ என்று கடவுளிடம் நான் வேண்டினேன். கணவரை முடி காணிக்கை செய்ய வைத்தேன். ‘ராஜீவ் கொலையை வெற்றிகரமாக முடித்து விட்டதற்கு நேர்த்திக்கடன் செய்தோம்’ என்று சி.பி.ஐ தனது வழக்கில் ஜோடித்தது.

மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்குமா பெருமாள் ஆசீர்வாதம் கொடுத்துக் கொண்டிருப்பார்? ஏழுமலையானுக்கு இதெல்லாமும் ஒரு வேலைதான் என்று சி.பி.ஐ-யினர் எப்படித் தெரிந்து கொண்டார்கள்? மதுரை, பெங்களூர், விழுப்புரம் என அலைந்தோம். விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்தோம். சைதாப்பேட்டையில் இறங்கியபோது போலீஸ் கைதுசெய்தது.

சித்ரவதைகள்!

அடி, சித்ரவதை, பாலியல் கிண்டல்கள், நிர்வாணம் என ‘மல்லிகை’ விசாரணையில் அனைத்தையும் கொடுத்தார்கள். முக்கிய அதிகாரியான ரகோத்தமன், என் தாலியைப் பிடித்து இழுத்து, ‘இது எதுக்கடி’ என்று அறுத்தெடுத்தார். வளையல்களை உடைத்து நொறுக்கினார். காலில் அணிந்திருந்த மெட்டி, கொலுசையெல்லாம் பலவந்தமாகப் பிடுங்கினார். என்னை அலங்கோலப்படுத்தி நிறுத்தி வைத்திருந்தார். தூங்கவிடவில்லை. அடி வயிற்றுக்கு கீழே எத்தினார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சித்ரவதைகள்.

சுபா, தணுவுடன் நான் பழகி இருக்கிறேன். என் கணவர், சிவராசனுடன் பழகி இருக்கிறார். இதனால் அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் மேல் திணித்து எங்களை முதன்மை குற்றவாளியாக்க நினைத்தார்கள். சி.பி.ஐ. சொல்வதை எல்லாம் என்னை ஒப்புக்கொள்ளச் சொன்னார்கள். என்னை அப்ரூவராக்கி, என் கணவரை நானே காட்டிக்கொடுக்க வேண்டும் என்று கார்த்திகேயன் நினைத்தார். எங்களுக்குள் திருமணமே நடக்கவில்லை என்று போலி ஆவணத்தை உருவாக்கினார்கள். எங்கள் காதலையும், கற்பையும் கொச்சைப்படுத்தினார்கள். எங்கள் இருவரையும் பிரிக்க நினைத்தார்கள். நாங்கள் உறுதியாக இருந்தோம்.

சி.பி.ஐ சொல்வதைப் போல பொய் வாக்குமூலம் கொடுத்தால் என் கணவருக்கு தூக்குத் தண்டனை உறுதியாகும். முடியாது என்றால் இங்கேயே அவரை அடித்துக் கொன்று போடுவார்கள். இரண்டுமே எனக்கு எதிரானதுதான். எதைச் செய்வது? எதை விடுவது?

அப்ரூவராகி நானே அவருக்குத் தூக்குக் கயிறை எடுத்துக் கொடுப்பதைவிட கடைசி வரை நான் அவருக்கு உண்மையாகவே நின்று போலி என்கவுன்டர் மரணத்தைத் தருவது எவ்வளவோ மேல்!

(நளினியின் கருவை கலைக்கச் சொன்ன போலீஸ் அதிகாரி, பிரியங்கா கேட்ட கேள்விகள் போன்ற அதிர்ச்சியான விஷயங்கள் அடுத்த இதழில்…)

ஆதார் கார்டு இல்லாவிட்டால் திருப்பதி கோவிலுக்கு போக முடியாது. அதிர்ச்சி அறிவிப்பு

திருப்பதி திருமலையில் ஏற்கனவே வாடகை அறை பெறுதல், தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தல் ஆகியவற்றிற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இனிமேல் நடைபாதை மற்றும் தர்ம தரிசனம் வழியாக வரும் பக்தர்களுக்கும் ஆதார் அட்டையை இனி கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. எனவே இனிமேல் திருப்பதிக்கு கோவிலுக்கு ஆதார் அட்டை இல்லாதவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடைபாதை பக்தர்களுக்கு அளிக்கும் டோக்கன் மூலம் தான் லட்டு முறைகேடு அதிக அளவில் நடைபெற்று வருவதாக தேவஸ்தானத்திற்கு அதிக புகார்கள் வந்துள்ளது.

எனவே லட்டு முறைகேட்டை தடுக்கவே ஆதார் கட்டாயம் என்ற நடைமுறையை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் தங்களிடம் உள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டையை கட்டாயம் திருமலைக்கு வரும்போது கொண்டு வர வேண்டும் என்றும் தேவஸ்தானம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அறிவித்துள்ளது.

அடக்குமுறையின் புதிய வடிவமே விசேட பொலிஸ் பிரிவு- மஹிந்த குற்றச்சாட்டு

நல்லிணக்கத்துக்கு எதிரானவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் பிரிவொன்றை அமைப்பதன் மூலம் அரசாங்கம் புதிய அடக்குமுறையொன்றை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள முன்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்மூலம், நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள் எனத் தெரிவித்து, விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்தன, உதய கம்மம்பில மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரை கைது செய்ய அரசாங்கம் சூழ்ச்சி செய்கின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் குரோதப் பேச்சுக்கள், அறிக்கைகள் விடுதல் போன்றவற்றினால் மக்களைத் தூண்டி விடும் விதமாக செயற்படும் நபர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நேற்று முன்தினம் (21) ஆரம்பிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ச எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார்

ரூ.82 லட்சத்திற்கு விலை போன உலகின் மிகவும் மதிப்புமிக்க போகிமொன் அட்டை!

உலகின் மிகவும் மதிப்புமிக்க போகிமொன் அட்டை ஒன்று ரூ.82 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஏலத்தில் குறித்த போகிமொன் அடையை ஏலத்தில் வைத்திருந்தனர்.

இதுவரையான அனைத்து சாதனைகளையும் குறித்த போகிமொன் அட்டை தகர்த்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். காலிபோர்னியாவின் Beverly Hills பகுதியில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 44,000 பவுண்டு தொகைக்கு (இலங்கை மதிப்பில் ரூ.81,080,80) நபர் ஒருவர் ஏலம் எடுத்துள்ளார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு CoroCoro Comic நிறுவனமானது பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்திருந்த போட்டி ஒன்றில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு போகிமொன் அட்டைகளை வழங்கியிருந்தது.

குறித்த போட்டியில் வெற்றிபெற்ற 30 நபர்களுக்கு அந்த ஜப்பான் நிறுவனம் Pikachu Illustrator அட்டைகளை வழங்கியிருந்தது.

தற்போது சாதனை விலையில் விற்பனையாகியிருக்கும் குறித்த அட்டையானது போகிமொன் ஆட்டத்தில் சிறந்து விளங்கிய அந்த நபருக்கே 15 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த அட்டையை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

30 அட்டைகள் வெளியடப்பட்டதில் தற்போது 10 அட்டைகள் மட்டுமே சேதமடையாமல் கைப்பற்றியுள்ளதாகவும் மீதமிருப்பவை பொதுமக்களிடம் இருக்கலாம் எனவும் CoroCoro Comic நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

16 போட்டிகளில் 33 வீரர்களுக்கு அணியில் இடம் : 2017 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெல்லுமா ?

இலங்கை அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் தடுமாறி வருகிறது.

இதனால் இலங்கை அணி வரும் 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கிண்ணத்தை வெல்லுவார்களா, எவ்வாறு களமிறங்கப்போகிறார்கள் என்ற சந்தேகம் இலங்கை ரசிகர்கள் பலரிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அணியை பற்றி ஒரு மினி சர்வே பார்ப்போமே.

இலங்கை அணி 1996 ஆம் ஆண்டிலிருந்து தனது ஆதிக்கத்தை காட்டத்தொடங்கியது. இதற்கு அணியில் இருந்த திறமையான வீரர்கள், ஜெயசூர்யா, சங்ககாரா, டிசில்வா, வாஸ், ஜெயவர்த்தனே, டில்சான், முரளிதரன் என பல வீரர்கள் இருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் அன்றைய காலக்கட்டத்தில் இலங்கை அணியின் வீரர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்தவர் இலங்கை அணியின் அன்றைய பயிற்சியாளர் டாவ் வாட்மோர். இவருடைய அனுபவமான பயிற்சியின் மூலம் தான் இலங்கை அணி சாதிக்கத் தொடங்கியது. அதன் பின்னர் தான் இலங்கை என்ற அணி உள்ளது என்பதே தெரிய வந்தது.

இதனாலே இலங்கை அணியைக் கண்டு பலரும் அஞ்சினர். அதைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம், 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலககிண்ணம் இறுதிப்போட்டி என பல தொடர்களை வென்று அசத்தியது.

அதன் பின்னர் 2014 ஆண்டு மலிங்கா தலைமையிலான அணி டி20 உலகக்கிண்ணத்தை வென்று சாதித்து காட்டியது. இப்படி வலம் வந்த இலங்கை அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் 25 போட்டிகளில் பங்குபெற்று 12 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் டெஸ்ட் அணிகளுக்கான 2015 ஆம் ஆண்டு தரவரிசைப்பட்டியலில் 8 வது இடத்தில் நீடிக்கிறது.

2015 தான் அப்படி என்று பார்த்தால் 2016 இலங்கை அணிக்கு அதை விட மோசமான வருடமாக மாறியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் தற்போது மேற்கிந்திய தீவு அணியுடம் மோதியது வரை இலங்கை அணி 16 போட்டிகளில் பங்குபெற்றுள்ளது.

இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் நான்கு போட்டிகளில் மட்டுமே இலங்கை அணி வென்றுள்ளது. இதனால் 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் அணிகள் தரவரிசைப்பட்டியலில் இலங்கை அணி 32 சதவீதம் வெற்றிகளைப் பெற்று 8 வது இடம் வகிக்கிறது.

இதற்கு காரணம் இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் இலங்கை அணிக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் அனுபவ வீரர்களின் ஒருமித்த ஓய்வுகளும் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் இலங்கை அணியில் 25 போட்டிகளுக்கு 31 வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும் நடப்பாண்டில் இதுவரை 16 போட்டிகளில் மட்டும் 33 வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர்.

பலர் காயம் காரணமாக வெளியில் உள்ளனர். அதில் மூத்த வீரராக கருதப்படும் மற்றும் அணியின் தலைவரான மேத்யூசும் தான்.

இதனால் எதிர்வரும் ஜிம்பாப்வே, வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர்களில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் நடப்பு தொடர்கள் சிலவற்றில் குசல் மென்டிஸ் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரை தொடர்ந்து பயன்படுத்தினால் எதிர்காலத்தில் அவர் ஒரு சங்ககாராவாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

அசேல குணரத்ன மற்றும் நிரோஷன் டிக்வேல்ல போன்ற வளர்ந்து வரும் புதிய வீரர்களுக்கு மேலும் பல வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

மேலும் சில திறமை வாய்ந்த இளம் வீரர்கள் சரியாக பயன்படுத்தப்படாமல் வெளியில் உள்ளனர். இதனால் இவர்களை எதிர்வரும் ஜிம்பாப்வே, வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட வங்கதேச அணி கூட சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து அணியை மிரட்டியது.

இதனால் எதிர்வரும் தொடர்களில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணியை வலிமைமிக்க அணியாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் வரும் 2017 ஆம் ஆண்டு நடக்கு உலகக்கோப்பைக்கு சிறந்த அணியாக இலங்கை அணி களமிறங்க வேண்டும்.

இலங்கை அணியுடன் மோதுவதற்கு அனைத்து அணிகளும் சற்று பயத்துடனே விளையாட வேண்டும். அந்த அளவிற்கு இலங்கை அணி வர வேண்டும் என்பதே அனைத்து இலங்கை ரசிகர்களின் கனவாக கருதப்படுகிறது.

பருவ நிலை மாற்றத்தால் 48 நாடுகள் அழியும் ஆபத்து..! வெளியான அதிர்ச்சி தகவல்!

புவி வெப்பமயமாதலால் 48 நாடுகள் அழியும் ஆபத்து இருப்பதால் 2050ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, 100 சதவீதம் பயன்படுத்த 48 நாடுகளும் தீர்மானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் புவி அதிக அளவு வெப்பமாகி வருகிறது, இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றன. அவை தண்ணீராக உருவெடுத்து கடல் நீரில் சேர்கின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதே நிலை நீடிக்குமானால், பூகோள ரீதியாக பல்வேறு நாடுகள் அழியும் நிலை ஏற்படும். இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இதை சாமளிப்பதற்காக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதில் ஒரு பகுதியாக தற்போது ஐநாவில் நடைபெற்று வரும் பருவ நிலை மாற்ற மாநாட்டின் போது பூமியின் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவர சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை, சுமார் 1.5 டிகிரி செல்சியல்ஸ் அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று குறித்த நாடுகள் அனைத்தும் தீர்மானித்துள்ளன என கூறப்படுகிறது. இதனால் 2050 ஆம் ஆண்டிற்குள் புதுபிக்கத்தக்க எரிசக்தியை 100 சதவீதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

48 நாடுகள் கூட்டமைப்பில், Afghanistan, Haïti, Philippines, Bangladesh, Honduras, Rwanda, Barbados, Kenya, Saint Lucia, Bhutan, Senegal, Burkina Faso, Madagascar,South Sudan,Cambodia,Malawi, Sri Lanka,Comoros, Maldives, Sudan, Costa Rica, Marshall Islandsza, Tanzania, Democratic Republic of the CongoMongolia, Timor-Leste, Dominican Republic, Morocco, Tunisia, Ethiopia, Nepal, Tuvalu Fiji, Niger, hanuatu, Ghana, Palau, Vietnam, Grenada, Papua New Guinea, Yemen, Guatemala உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன

நடு வீதியில் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்ட பெண்கள்- வைரல் வீடியோ