சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோர் இதனாலேயே உயிரிழந்தனர்…!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராசா கஜன் ஆகியோர் உயிரிழந்தமை தொடர்பான மரண விசாரணை அறிக்கை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வாசிக்கப்பட்டது.

இதில் சுலக்ஷன் துப்பாக்கிக் குண்டு பட்டு உயிரிழந்ததுடன், நடராசா கஜன் விபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குறித்த இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தனது மரண விசாரணையின் அறிக்கையில், நீதவான் இவற்றை குறிப்பிட்டுள்ளார். ‘மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சுலக்ஷன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன் போது இடம்பெற்ற விபத்தினால் ஏற்பட்ட காயம் காரணமாக கஜன் உயிரிழந்தார்’ என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வழக்கின் சான்றுப்பொருட்கள் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்..!

பல்கலைக்கழகங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதில் தலைவர் பேராசிரியர் எஸ்.எம். குணரட்ன தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் தற்பொது சுமார் 27500 மாணவர்கள் பல்கலைகலைக்கழகங்களில் உள்ளீர்க்கப்படுகின்றனர். பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட பிள்ளைகளை பல்கலைக்கழகத்தில் சேர்க்க வேண்டும் என்பதையே பெற்றோர் எதிர்பார்ப்பதாக அமைந்துள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நேரிட்டுள்ளது.

மக்களின் வரியைக் கொண்டே மாணவர்கள் உயர் கல்வியை கற்கிக்கின்றார்கள். பல்கலைக்கழக கட்டமைப்பு நாட்டுக்கு மிகவும் அவசியமானது, மதிநுட்பமான சமூகமொன்றையே கட்டியெழுப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய ராசி பலன் 05-11-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நவீன மின்னணு  சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த  நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில்  அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். போராடி வெல்லும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில்  எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.  வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை  குறையும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

  • கன்னி

    கன்னி:  பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். அரசு  அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.  தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில்  இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும்  நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால்  நன்மை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

  • தனுசு

    தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.  வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

  • மகரம்

    மகரம்:  குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.  வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம்  உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

  • மீனம்

    மீனம்:  எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில்  பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிந்தனை திறன் பெருகும் நாள்.

 

உடல் பருமனால் உண்டாகும் 7 வகையான புற்று நோய் பற்றி அறிந்திருக்கிறீர்களா?

உடல் பருமன்தான் பல வகை மரபுக் கோளாறுகள் உருவாவதற்கு காரணம் என தெரிந்து கொண்டிருப்பீர்கள். இதய நோய் தொடங்கி புற்று நோய் வரை பல பாதிப்புகளை உடல் பருமன் உண்டாக்கும். பலப்பல மோசமான விளைவுகளை தரும் உடல் பருமனைப் பற்றி சற்றும் சிந்திப்பீர்களா?

வாய்க்கு பூட்டு போடாவிட்டால் நோய்கள் நுழைந்துவிடும் என்பதை கண்ட தீனிகளை சாப்பிடும்போது நினைத்துக் கொள்ளுங்கள். தீராத அபாய நோயான புற்று நோய் பாதிப்பு மற்றவர்களை விட உடல் பருமனானவர்களுக்கு தாக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை மறக்காதீர்கள். எந்த வகையான புற்று நோய் அதிகம் உடல் படுமானவர்களை தாக்கும் என்பதை பார்க்கலாம்.

வயிறு :

வயிற்றுப் புற்று நோய்க்கும் உடல் பருமனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதிகப்படியான கொழுப்பு உடல் படிவதால் அவற்றை எரிக்க முடியாமல் பாதிப்பிற்குள்ளாகிறது. உணவுக் குழாய் புற்று நோயும் பெருமளவு தாக்குகிறது.

பித்தப்பை :

உடல் பருமன் பித்தப்பையில் கற்களை உண்டாக்குகிறது. அதோடு கொழுப்புகளும் பித்தப்பையில் சேர்ந்து பாதிப்பை உருவாகும். பித்தப்பை கற்கள் புற்று நோய்க்கு வழிவகுக்கக் கூடும். பித்தப்பை புற்று நோயும் உடல் பருமனால் வரும் வாய்ப்புகள் அதிகம்.

கணையம் :

உடல் பருமனால் இன்சுலின் சுரப்பது குறையும். கணையத்திலுள்ள பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்க அதிக சிரமம் மேற்கொள்ளும். இதனால் பாதிப்படைந்து புற்று நோய் உருவாக ஏதுவாகிவிடும்.

கருப்பை :

அதிக கொழுப்பு செல்கள் ஈஸ்ட்ரோஜனை அதிகரிக்கச் செய்யும். மாதவிடாய் நிற்கும் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரந்தால் அவை கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்று நோய்க்கு வழிவகுக்கும்.

தைராய்டு :

உடல் பருமனாகும்போது தைராய்டு சுரப்பியும் அளவில் பெரிதாகும் என ஆய்வுகள் கூறுகின்றது. அளவில் பெரிதாகும்போது செல்களில் மாற்றம் உண்டாகி அவை புற்று நோய் செல்களால மாறும் அபாயமும் இருக்கிறது என மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ரத்தம் :

உடல் பருமன் எலும்பு மஜ்ஜையில் அதிக மைலாய்டு செல்கள் உற்பத்தி செய்கின்றன. அளவுக்கு அதிக ரத்த செல்கள் உருவாகும்போது அவ்ற்றில் திடீர் மாற்றம் உண்டாகி ரத்த புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது.

கல்லீரல் :

மது அருந்துபவர்களுக்கு உண்டாகும் பாதிப்பு போலவே உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் கல்லீரல் பாதிக்கிறது. கல்லீரல் வீக்கம் உண்டாகி, கொழுப்பு கல்லீரல் உண்டாகி அது புற்று நோயாக மாறும் அபாயம் உள்ளது.

ஏன் டீ குடிப்பதை மட்டும் நிறுத்தக்கூடாது என்பதற்கான காரணங்கள்!

பலரும் அடிக்கடி டீ குடிப்பது கெட்ட பழக்கம் என்று சொல்வார்கள். உண்மையில் அளவுக்கு அதிகமாக டீ குடித்தால் தான் அது ஆபத்தானது. ஆனால் அளவாக குடித்தால், அதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

மேலும் சில ஆய்வுகளிலும் டீ பல உடல்நல பிரச்சனைகளைத் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு தினமும் டீ குடிப்பதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

சர்க்கரை நோய்

நியூட்ரிஷன் புல்லட்டின் என்னும் பத்திரிக்கையில் வெளிவந்த ஆய்வில், தினமும் 2 கப் டீ குடித்தால், டைப்-2 சர்க்கரை நோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், டீயில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான்.

இதய ஆரோக்கியம்

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், டீ குடிப்பதால், இதய நோய் வரும் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். மேலும் அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள், தினமும் டீயைக் குடித்து வந்தால், 7-8 சதவீதம் இதய நோய் வரும் அபாயம் குறைவதாகவும் நம்புகின்றனர்.

மார்பக புற்றுநோய்

டீயில் உள்ள அதிகப்படியான பாலிஃபீனால்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும். மேலும் ஆய்வு ஒன்றில், டீயில் உள்ள பாலிஃபீனால், 21 சதவீதம் மார்பக புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

இரத்த அழுத்தம்

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தினமும் 8 கப் டீ குடித்தால் இரத்த அழுத்தம் குறைவதாக கண்டறிந்துள்ளனர்.

வயிற்று அல்சர்

ப்ளாக் டீ குடித்தால் நோயெதிர்ப்பு சக்தி ஊக்குவிக்கப்படும் என்பது தெரியும். ஆனால் ஆய்வு ஒன்றில், ப்ளாக் டீ வயிற்று அல்சரை சரிசெய்வதாக தெரிய வந்துள்ளது.

கருப்பை புற்றுநோய்

அமெரிக்கன் ஜெர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளிவந்த ஆய்வில், ப்ளாக் டீ குடிப்பதால் கருப்பை புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே பெண்கள் தினமும் 2 கப் ப்ளாக் டீ குடிப்பது மிகவும் நல்லது. மேலும் ப்ளாக் டீயில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் ஏராளமாக உள்ளது.

இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரித்தாலும் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை

இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரித்தாலும் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை என களனி பல்கலைக்கழகத்தின் வெகுஜன தொடர்பு பீடத்தின் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடமத்திய மாகாண ஆசிரியர்களுக்காக நடத்தபபட்ட கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

செய்திகளை விற்பனை செய்வதே ஊடகங்களின் நோக்கமாக அமைந்துள்ளது. 83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தின் ஓர் குற்றவாளியாக ஊடகங்களையும் குறிப்பிட வேண்டும்.

விருதுகளுக்காகவும் விற்பனை நோக்கிலும் செயற்படும் ஊடகவியலாளர்களினால் நட்டுக்கு பயனில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒழுக்க விழுமியங்களை கட்டியெழுப்பக்கூடிய ஊடக கலாச்சாரமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை!

என்ன ஒரு அருமையான டான்ஸ்: மிஸ் பண்ணாம பாருங்க!

உலகில் மிக பெரிய கட்டி முடிக்கப்பட்ட கப்பல்கள் கடலில் இறங்கும் அரிய காட்சி!

பிரம்மிக்க வைக்கும் ஆடி பேருந்து!

வடிவேல், சூரி கலந்த நடிப்பில் கத்திச்சண்டை!

வாரம் இருமுறை பாகற்காய் சாப்பிடுங்க

பாகற்காய் கசப்பாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் அதை சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் பாகற்காயை ஒருவர் தங்களது உணவில் வாரத்திற்கு இருமுறை சேர்த்து வந்தால், எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

பாகற்காயை ஒருவர் வாரம் இருமுறை உணவில் சேர்ப்பது மட்டுமின்றி, ஜூஸ் தயாரித்து, தேன் கலந்து, வாரத்திற்கு இருமுறை குடித்து வந்தால், ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

பாகற்காய் ஜூஸ் உடலின் ஆற்றலை மேம்படுத்தும், வலிமையை அதிகரிக்கும். எனவே உடலின் ஆற்றலை அதிகரிக்க கண்ட எனர்ஜி பானங்களைப் பருகாமல், பாகற்காயை சாப்பிடுங்கள். அதுவே போதும்.

பாகற்காய் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் நோய்க் கிருமிகளிடமிருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பாகற்காயை விட சிறந்த காய்கறி வேறொன்றும் இல்லை. ஆகவே சர்க்கரை நோயாளிகள் தங்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாகற்காய் செரிமானத்திற்கு நல்லது. இது செரிமான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற பாகற்காய் உதவும். மேலும் பாகற்காய் உடலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். அதற்கு பாகற்காயை ஜூஸ் எடுத்து தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

உதவிக்கு வந்த இளம்பெண் மீது பாலியல் தாக்குதல்: இருவர் அதிரடி கைது

கனடா நாட்டில் உதவிக்கேட்டு வந்த இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற இரண்டு பேரை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ரொறொன்ரோ நகரை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் Spadina என்ற பகுதியில் இருந்த மதுவிடுதிக்கு சென்றுள்ளார்.

விடுதியில் இரண்டு நபர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர்களிடம் இளம்பெண் உதவி ஒன்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை ஏற்றுக்கொண்டு இருவரும் அவருக்கு உதவுவதாக கூறி அவர்களில் ஒருவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சில மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு சென்றதும் திடீரென இருவரும் இளம்பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கடுமையாக போராடி அங்கிருந்து தப்பியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அவர் உடனடியாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்ற பொலிசார் விரைவாக தேடுதல் வேட்டையை தொடங்கியபோது 23 மற்றும் 31 வயதான இரண்டு பேரையும் கைது செய்தனர்.

மேலும், இளம்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தியது உண்மை தான் என இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் பேசியபோது, இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், இருவரையும் நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பார்வை கோளாறை சரிசெய்யும் கேரட்டின் மற்ற நன்மைகள்

உங்களை நம்பித்தான் இருக்கேன்: கருணாநிதியிடம் உருகிய அழகிரி

உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் கருணாநிதியை பார்ப்பதற்காக முக அழகிரி தனது மனைவி காந்தியுடன் சென்றதால் சிறிது நேரம் கோபாலபுர இல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மனைவி சகிதமாக உள்ளே நுழைந்த அழகிரி, நேராக மாடியில் இருந்த கருணாநிதி அறைக்குச் சென்றார். அங்கு கட்டிலில் படுத்திருந்த கருணாநிதியைச் சந்தித்துள்ளார்.

அழகிரி கருணாநிதி அறைக்குச் சென்றபோது, கருணாநிதியின் மூத்த மகன் செல்வியும் அங்கு இருந்துள்ளார். அழகிரி மனைவி காந்தி, கருணாநிதியிடம் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, ‘‘முன்பைவிட இப்போது பரவாயில்லை” என்று சொல்லியுள்ளார்.

கருணாநிதியைப் பார்த்துவிட்டுக் கிளம்பியபோது… அழகிரி, ‘‘உங்களுக்கு உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்டதும், பதற்றத்தில்தான் அன்னைக்கு வந்து பார்த்தேன். நான் வெளியூர் போறதால என் மனைவியோடு வந்து உங்களைப் பார்த்துட்டுப் போறேன். உங்க பேச்சுக்கு மரியாதை கொடுத்து நான் அமைதியாக இருக்கேன் அப்பா. நீங்க உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை நம்பித்தான் இருக்கேன்” என்று உருக்கமாகப் பேசிவிட்டு வெளியில் வந்துள்ளார்.

குடும்ப விஷயத்தை வெளியே சொன்ன சமந்தா!

சமந்தா என்றாலே சம்திங் ஸ்பெஷல் என்று அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியாக சொல்வார்கள். தமிழ், தெலுங்கில் ஸ்டாராக தனியே தெரியும் இவர் இன்று டாப் நடிகைகள் பட்டியலில் ஒருவர்.

சினிமா, சேவை என இருந்தாலும் இப்போது காதலிலும் கமிட்டானதால் மிக பிசியாக உள்ளார். புது வருட பிறப்பு மிக நெருங்கி வரும் வெளியில் நாக சைதன்யாவுடனான இவரின் திருமணம் விரைவில் நடக்க போகிறது.

சென்ற தீபாவளியை தனது ப்ரத்யுஷா அறக்கட்டளை குழந்தைகளுடன் கொண்டாடிய இவர் தன் குடும்பத்தவர்கள் பற்றிய தன் கருத்துக்களை மிக வெளிப்படையாக கூறியுள்ளார்.

எனக்கு ஜோனாதன், டேவிட் என இரு அண்ணன்கள் இருக்கிறார்கள். வழக்கமான அண்ணன் தங்கையை போல் சிறுசண்டைகள் எது இல்லாமல், அவர்களின் மீது அணைப்பு கலந்த மரியாதை உள்ளது.

சொல்லப்போனால் அவர்கள் எனக்கு அப்பா அம்மா மாதிரி. அதிலும் 2 வது சகோதரருடன் மிக ஈசியாக பழகிவிடலாம் என கூறினார்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு ஒரு சகோதரி இருந்தால் வாழ்த்திக்கொண்டே இருப்பாள். என்னுடைய அம்மா எனக்கு, அந்த இரு சகோதர்களுக்கு பதிலாக ஒரு சகோதரியை கொடுத்திருக்கலாம் என குறும்பு நகைச்சுவையுடன் சமந்தா கூறியுள்ளார்.

இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்

ஆர்யா தூது, ஹன்சிகா ஷாக், சொன்னது என்ன?

ஆர்யா தற்போது கடம்பன் படத்தில் யானைகளுடன் பயங்கரமாக நடித்து வருகிறார். வெளிநாடுகளில் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.

மிக மகிழ்ச்சியாக இருக்கும் இவர் படத்திற்காக உடலை மிகவும் வருத்தி உடற்பயிற்சி செய்த நாட்களில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டிருந்தார்.

இன்று ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்ஷிகா நடித்திருந்த போகன் படத்தின் டீசர் வெளியானதை பார்த்துவிட்டு டீஸர் சூப்பராக இருந்தது. ஹீரோஸ் இருவரும் ராக்கிங். ஹன்ஷிகா மிக ஹாட்டாக இருக்கீங்க என ட்வீட் செய்திருந்தார்.

இருவரும் ஆர்யாவுக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளனர். பலரும் இதை பார்த்து வாழ்த்தி வருகிறார்கள்.

ஆண்கள் சாப்பிட வேண்டிய பழம்

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள் அதிகளவில் உள்ளன. இது பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும்.

பப்பாளியின் பலன்கள்
  • மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
  • பப்பாளியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் காரணமாக உடலில் மூப்பு சார்ந்த நோய்கள் வராமல் இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கிறது.
  • டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பப்பாளி இலைச் சாறைப் பருகக் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், டெங்கு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரத்த அணுக்கள் பெருகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • நார்ச்சத்து மிக்கது, உடலில் கொழுப்பின் அளவை குறைக்கும். கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதைத் தடுக்கும் என்சைம்களைக் கொண்டிருப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
  • பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
  • பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
  • பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்
  • பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
  • பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
  • பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
  • பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
  • பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளிகளில் வருவதற்குப் பப்பாளி பழம் உதவுகிறது. மேலும், பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
  • பேன், பொடுகைப் போக்கும் திறன் பப்பாளிக்கு உண்டு. அதனால் தான் பெரும்பாலான ஷாம்புகளில் பப்பாளி பயன்படுத்தப்படுகிறது.
  • பப்பாளிப் பழத்தின் தோல், சதைப் பகுதிகளை மசித்து முகத்தில் பூச்சாகப் பயன்படுத்தினால் கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்றவை மறைந்து, முகம் பளிச்சிடும்.

அனிருத்தை பின்னுக்கு தள்ளிய சந்தோஷ் நாராயணன்

இன்றைய தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களுக்கு அனிருத் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் இசையமைத்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டில்தான் தங்கள் இசைப் பயணத்தை சினிமாவில் தொடங்கினர்.

ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் சந்தோஷ்.

இவர் இன்று ரஜினி படத்திற்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் அறிமுகமான அனிருத் இன்று அஜித், விஜய், சூர்யா படங்களுக்கு இசையமைக்கிறார்.

இந்த நான்கு ஆண்டுகளில் சந்தோஷ் நாராயணன் 20 படங்களை நெருங்கிவிட்டார். அனிருத் 17 படங்களை தொட்டு இருக்கிறார்.