உடல் எடையில் கவனம் வேண்டும்

உடல் எடையை குறைக்க எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் சிலருக்கு அந்த கனவு கைகூடுவதே இல்லை. உடல்நலம் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக இன்று தெருவுக்கு ஒரு ஜிம் இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

உடல் எடை குறைய உடற்பயிற்சி செய்தால் போதும் என்று இருந்துவிடுவது எந்த பலனையும் தராது. வாழ்க்கை முறையிலும், உணவிலும் உரிய மாறுதல்களை ஏற்படுத்தாமல் உடல் எடையை குறைப்பது சாத்தியமற்றது. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நமது உணவுப் பழக்கம் பெரும் மாற்றம் கண்டுள்ளது. உடல் எடை குறையாமல் இருக்க இது ஒரு முக்கிய காரணமாகும்.

மரபியல், பழக்கவழக்கங்கள், வளர்சிதை மாற்றம் (metabolism) மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index) ஆகியவை ஒருவரின் உடல் எடையை தீர்மானிக்கிறது. சீரான உடல் எடை பராமரிப்பதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். எடை கூடினால் உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படக்கூடும்.

உடல் எடையை சீராக பராமரிக்க இவற்றை கடைபிடிக்கவும்:

உணவில் கவனம் தேவை
போதியளவு தூக்கம்
காலை உணவை தவிர்க்காதீர்
சுறுசுறுப்பாக இருக்கவும்
தவறாது உடற்பயிற்சி செய்யவும்
புரதச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ளவும்
உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும்போது இந்த உணவுகளை தவிர்க்கவும்:

குளிர்பானங்கள்
குக்கீஸ், கேக்
உருளைக்கிழங்கு சிப்ஸ்
கொழுப்பு மிகுந்த சிவப்பிறைச்சி
மல்டி-கிரெய்ன் பிரெட்
மைக்ரோவேவ் பாப்கார்ன்
பீட்சா
மாம்பழம், வாழைப்பழம், திராட்சை
சோயா சாஸ்
ஐஸ்கிரீம்
சாக்லேட்
எண்ணெயில் பொரித்த உணவுகள்
தர்ப்பூசணி பழம்
மதுபானம்
பிரஞ்சு பிரைஸ்

30 நாடுகளில் உள்ள தூதரகங்களை மூடும் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 30 நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மூடப்படவுள்ள தூதரகங்களில் 10 தூதரகங்களும், 17 துணைத் தூதரகங்களும் அடங்குகின்றன.

அதன்படி ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள சில தூதரகங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சோமாலியா, ஈராக், மால்டா (Malta), லக்சம்பர்க் (Luxembourg), கொங்கோ மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதேவேளை பிரான்சில் அமெரிக்காவிற்கு ஐந்து தூதரகங்கள் செயல்பட்டு வருவதால், அவற்றையும் மூட முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஜெர்மனி மற்றும் போஸ்னியாவில் உள்ள இரண்டு தூதரகங்கள் மற்றும் பிரித்தானியாவிலுள்ள ஒரு தூதரகத்தை மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு மூடப்படவுள்ள தூதரகங்களின் பணிகள், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மூலம் தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரித்து சில வீதிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி இப்பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து மக்கள் சுதந்திரமாக தமது பணிகளை மேற்கொள்ளக்கூடிய நாட்டை உருவாக்கும்.

மேலும், வடக்கு மாகாணத்தில் வீதிகள் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, வடக்கில் தென்னை செய்கைக்காகவும் அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அநுர குறிப்பிட்டுள்ளார்.

யாழ் விடுதி ஒன்றில் மோசமான செயலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களை , எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் தங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த கிடைத்த அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் 20 மற்றும் 30 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்களை கைது செய்தனர்.

கைதான இருவரும் விசாரணைகளின் பின்னர் நேற்று (16) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது இரு இளைஞர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கண்டிக்கு பயணிப்போருக்கு விசேட அறிவிப்பு!

தலதா கண்காட்சியை முன்னிட்டு விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (17) முன்னெடுக்கப்படவுள்ளது.

கண்டி நகருக்குள் யாத்திரைக்கு வருவோரை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வருவதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், இன்று முதல் கண்டி நகருக்குள் நுழையும் வாகனங்கள் மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாத்திரிகர்களின் வாகனங்களுக்கு விசேட வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் அந்தப் பகுதிகளிலிருந்து ஸ்ரீ தலதா மாளிகைக்கு பேருந்து சேவைகள் மூலம் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்குப் பிறகு யாத்திரிகர்களை வாகன நிறுத்துமிடத்திற்குத் திருப்பி அனுப்ப பொதுப் போக்குவரத்து சேவை செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் தயாள் இளங்கக்கோன் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி நடைபெறவுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், 19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா கண்காட்சி நடைபெற உள்ளது.

இதன் காரணமாக, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பொலிஸார் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.

மக்களை சோதனை செய்தல், போக்குவரத்து கட்டுப்பாடுகள், வீதித் தடைகள் அமைத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 10,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவ, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தரும் மக்கள் வெள்ளை நிற உடையை அணிய வேண்டும் என்றும், பாரிய பொருட்கள், கேமராக்கள், காணொளி உபகரணங்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

புத்தாண்டு கால பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடுகள்!

புத்தாண்டு காலத்தில் இயக்கப்பட்ட பேருந்து சேவைகள் தொடர்பாக பயணிகளிடமிருந்து 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களை வசூலிக்காதது தொடர்பாக 63 முறைப்பாடுகள் கிடைத்ததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்தார்.

1955 என்ற துரித இலக்கம் மூலம் குறித்த முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், டிக்கெட்டுகள் வழங்கப்படாதது குறித்தும் முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் கூறிய அவர், புது வருடத்திற்கு பின்னர் அந்த முறைப்பாடுகள் விசாரிக்கப்படும் என்றும் கூறினார்.

இலங்கையில் அற்புதமான சுவையில் செய்யப்படும் கிவிபழ கறி

இலங்கை உணவுமுறைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அங்கு இருக்கும் இயற்கை வளத்தை அங்குள்ள மக்கள் அனுபவிப்பது அவர்களின் உணவுமுறைகளில் காணலாம்.

இந்த உணவுகளுக்கு அங்கு பயன்படத்தம் வித்தியாசமான மசாலாப்பொருட்கள் தான் முக்கியமானவை. இந்த பதிவில் வித்தியாசமான முறையில் இலங்கையில் செய்யப்படும் கிவி பழத்தின் கறியை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை
கடுகு
சீரகம்
சிவப்பு வெங்காயம்
இஞ்சி
பூண்டு
மிளகாய்த் தூள்
கருப்பு மிளகு
சீரகம்
பெருஞ்சீரகத் தூள்
மஞ்சள்
கொத்தமல்லித் தூள்
தக்காளி
உப்பு
தேங்காய் நீர்
கிவி பழம்
தேங்காய்ப் பால்
செய்யும் முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கி, கறிவேப்பிலை, கடுகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து, கடுகு வெடிப்பதை நிறுத்தும் வரை வதக்கவும்.

சிவப்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பாண்டன் இலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் ​​உலர்ந்த மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும்

மிளகாய்த் தூள், கருப்பு மிளகு, சீரகம், பெருஞ்சீரகத் தூள், மற்றும் கொத்தமல்லித் தூள். மணம் வரும் வரை சுமார் 30 வினாடிகள் கிளறவும்.

புதிய மற்றும் உலர்ந்த மஞ்சளைச் சேர்த்து கிளறவும்.தக்காளி மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

தேங்காய் நீரில் பாதி (அல்லது தண்ணீர்) சேர்த்து, அனைத்தும் ஒன்றாகக் கலக்கும் வரை கிளறவும். 2-3 நிமிடங்கள் தொடர்ந்து கொதிக்க வைக்கவும்.

கிவி பழத்தைச் சேர்த்து, கறியை நன்கு கிளறி, மீதமுள்ள தேங்காய்த் தண்ணீரையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து, அனைத்தும் ஒன்றாகக் கலக்கக் கிளறவும்.

கிவி பழத்தின் புளிப்பைச் சமப்படுத்த தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும். இதை உங்களுக்கு பிடித்த சாதம் அல்லது ரொட்டி சப்பாத்தியுடன் வைத்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.

பழுத்த பலாப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

பெரும்பாலான மக்கள் பலாப்பழத்தை சாப்பிட விரும்புகிறார்கள். பலாப்பழத்தின் வெளிப்புறப் பகுதி பச்சையாகவும், முட்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.

இது பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக மாறும். பழுத்த பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். பலாப்பழத்தின் அமைப்பு, சைவ உணவு உண்பவர்களுக்கு இறைச்சி போன்ற உணவாகும்.

பலாப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. இதை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பழுத்த பலாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் உணவு நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் கலோரிகளும் குறைவாக இருப்பதால், எடையைக் குறைப்பவர்களுக்கு இதை ஒரு சிறந்த காலை உணவாக சாப்பிடலாம்.

செரிமானத்திற்கு நல்லது பழுத்த பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுத்து, குடல் இயக்கத்தை எளிதாக்குவதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இதனால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

இரத்த சர்க்கரையை குறைக்கிறது பழுத்த பலாப்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது இது இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காது.

இதனால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பும் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்தப் பழம் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.

புற்றுநோயைத் தடுக்கிறது பழுத்த பலாப்பழத்தில் உள்ள சேர்மங்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கலாம். இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்க உதவுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது பழுத்த பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்து ஆகும். இதனால் பழுத்த பலாப்பழத்தை சாப்பிடுவது தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவும்.

பிரியங்கா திருமணம் செய்த வசியின் வயது என்ன?பிரியங்கா காதலில் விழுந்தது எப்படி?

பிரபல ரிவி தொகுப்பாளினியான பிரியங்கா இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்த வசி என்பவரின் தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

கர்நாடகாவைச் சேர்ந்த இவர் பிரவீன் என்பவரைக் காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்பு கருத்து வேறுபாடு 2022ம் ஆண்டு பிரிந்து விவாகரத்து பெற்றனர்.

எப்பொழுதும் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை சற்று சறுக்கலாகவே இருந்தது.

இந்நிலையில் பிரியங்கா நேற்றைய தினத்தில் வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படம், காணொளிகள் இணையத்தை ஆக்கிரமித்தது.

யார் இந்த வசி?
டிஜே-வாக இருக்கும் வசியும், பிரியங்காவும் சில ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர். பின்பு இவர்களின் நட்பு காதலாக மாறிய நிலையில், இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

இவர் clique187 என்ற பெயரில் டிஜே தொழிலை நடத்தி வருகின்றார். லண்டனில் வசிப்பதாக கூறப்படும் நிலையில், இவர்களின் ரிசப்ஷன் ரேடிசம் ஹோட்டலில் கடந்த 15ம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு பிக் பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி, நிரூப் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது வசியின் வயதை ரசிகர்கள் அதிகமாக இணையத்தில் தேடி வருகின்றனர்.

பல கார்பரேட் நிகழ்ச்சிகள் மற்றும் பப்புகளில் டிஜேவாக பணியாற்றி உள்ள இவர், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார்.

ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தான் பிரியங்காவுக்கும் வசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

வயது வித்தியாசம் என்ன?
பிரியங்கா தேஷ்பாண்டேவின் இரண்டாவது கணவர் வசி, நரைத்த முடியுடன் வயதானவர் போன்ற தோற்றத்தில் இருந்ததால், அவரின் வயது என்ன என்பதை தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டிஜே வசிக்கு தற்போது 42 வயது ஆகிறது. அவரைவிட பிரியங்கா தேஷ்பாண்டே 10 வயது இளையவர். அவருக்கு தற்போது 32 வயது தான் ஆகிறது.

பிரியங்கா தேஷ்பாண்டே தன்னைவிட 10 வயது மூத்தவரை திருமணம் செய்துகொண்டுள்ள தகவல் அறிந்த பலரும் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்றைய ராசிபலன்கள்17.04.2025

மேஷம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயார் ஆதரித்து பேசுவார். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.

மிதுனம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்

எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிடைக்கும் நாள்.

சிம்மம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபமுண்டு. உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். துணிச்சலுடன் செயல்படும் நாள்.

கன்னி

கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் அனுசரிப்பார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

துலாம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

மகரம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

மீனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். நன்றி மறந்தவர்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகவுள்ள பிரம்மாண்ட திரைப்படம்!

ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் துல்கர் சல்மான்.

அதிலும் அவர் தெலுங்கில் நடித்த சீதா ராமம் படம் பெரிய அளவில் ரீச் கொடுத்தது. அதை தொடர்ந்து, துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் இவரது படங்களின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், தற்போது இவர் அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது, துல்கர் சல்மான் SLV தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அறிமுக இயக்குநர் ரவி இயக்கம் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரஜினி பட பிரபல நடிகை

மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்து வசூலில் சாதனை படைத்தது.

தற்போது விஜய் சேதுபதி பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து, தெலுங்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் உடன் விஜய் சேதுபதி தற்போது கூட்டணி சேர்ந்திருப்பதாக அறிவிப்பு இணையத்தில் வெளியானது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படத்தில் பிரபல நடிகையான ராதிகா ஆப்தே, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

குட் பேட் அக்லி பட வெற்றிக்கு பின்னர் அஜித்தை இயக்க போவது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்து அஜித் யார் நடிப்பில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இவரா?
இந்நிலையில், அடுத்து அஜித் ‘வாத்தி, லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரியின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெங்கி சூர்யா 46 படத்தை முடித்துவிட்டு அடுத்து அஜித் படத்தை இயக்குவர் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இந்த வருடம் பிக் பாஸ் ஷோ நடக்காதா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

பிக் பாஸ் ஷோ இந்தியாவில் எந்த அளவுக்கு பிரபலம் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. இதில் போட்டியாளர்களாக பங்கேற்கும் நபர்கள் பெரிய அளவில் பிரபலம் ஆகி புகழின் உச்சிக்கே செல்கிறார்கள்.

ஹிந்தியில் கடந்த 20 வருடங்களாக பிக் பாஸ் ஷோ நடைபெற்று வருகிறது. அதை தற்போது சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் ஷோ நடப்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஷோவை நடத்தும் தயாரிப்பு நிறுவனமான Banijay Asia (Endemol Shine) நிறுவனம் தற்போது விலகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் ஹிந்தியில் பிரபலமான Khatron Ke Khiladi ஷோவும் இந்த வருடம் நடக்காது என்றும் கூறப்படுகிறது.

ஹிந்தியை போலவே தமிழ், தெலுங்கிலும் பிக் பாஸ் ஷோவின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது.

நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை!

காலி – கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திவியகஹவெல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் கரந்தெனிய, திவியகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் கரந்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2 நாட்களில் 800 சாரதிகள் மீது வழக்கு பதிவு!

நாட்டில் கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது சாரதிகள் மதுபோதையில் இருந்தமை அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

ரசகியமாக திருமணத்தை முடித்த விஜே பிரியங்கா

விஜய் தொலைக்காட்சி அறிவிப்பாளரான விஜே பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று ஆகும் .

பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் விஜே பிரியங்கா, வெளிநாட்டில் ரகசியமாக திருமணத்தை முடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் தெற்கு கலிபோர்னியாவில் இடம்பெறாவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இதனை அதன்படி 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரின் கிரிக்கெட் போட்டிகள் தெற்கு கலிபோர்னியாவின் பமோனா நகரில் நடாத்தப்படுமென சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

வெளிநாடொன்றில் இலங்கை இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்!

மாலைத்தீவில் சாரதியாக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடங்கஸ்லந்த – உடு ஹொரம்புவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

15 நாட்களுக்கு முன்பு தனது தங்குமிடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியிக்கு குறித்த இளைஞன் சென்ற நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

2 நாட்களுக்குப் பிறகு, கடலில் அவரது உடல் மிதப்பதைக் கண்டு மாலைத்தீவு பிரஜை ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த இலங்கை இளைஞன் நீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டதாக மாலைத்தீவு அரசாங்கமும் நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியும் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் உடலை இன்று காலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் மாலைத்தீவில் சுமார் 3 ஆண்டுகள் பணி புரிந்து, 3 மாதங்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்து மீண்டும் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தீ விபத்து ஒருவர் பலி!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் ஃபோர்ட் செயிண்ட் ஜான் நகரத்திற்கு வடக்கே உள்ள இயற்கை வாயு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இயற்கை வாயு தொழிற்சாலையின் பணியாளர்கள் குழாயைத் தட்டி காயப்படுத்தியபோது தீ விபத்து ஏற்பட்டதாக பி.சி. எனர்ஜி ரெகுலேட்டர் அறிவித்துள்ளது.

தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக நிறுவனம் தரிவித்துள்ளது.

“இந்த விபத்தில், ஒப்பந்த பணியாளர் ஒருவர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. மேலும் மற்றொரு பணியாளர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவரின் குடும்பம், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று Tourmaline நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீ விபத்திற்கான காரணங்களை கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.