வெறும் வயிற்றில் கறிவேப்பிலை போட்டு 1 டம்ளர் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்?

பொதுவாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பலரும் டீ அல்லது காபி தான் குடிப்பார்கள்.

இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும், டீ அல்லது காபி குடித்தால் உற்சாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் காபி, டீயை விட மூலிகை இலைகளை ஊற வைத்து தண்ணீர் குடித்தால் உடலுக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன.

தற்போது வரும் நோய்களுக்கு இதுவே சிறந்த தீர்வாகவும் இருக்கும். அப்படி நாம் தினமும் சமையலறையில் பார்க்கும் இலையான கறிவேப்பிலையை தண்ணீரில் போட்டு குடித்தால் ஏகப்பட்ட மருத்துவ பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில், காலையில் கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

கறிவேப்பிலையின் பலன்கள்
1. கறிவேப்பிலை நீர் உடலுக்கு ஆரோக்கியமானது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலை உற்சாகப்படுத்தும். அத்துடன் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.

2. கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் தலைமுடிக்கு ஊட்டம் கொடுத்து, முடி நுண்குழாய்களை வலுப்படுத்தி வளர்ச்சியை அதிகப்படுத்தும். தலைமுடி உதிர்வு பிரச்சினை உள்ளவர்களும் இந்த நீரை குடிக்கலாம்.

3. செரிமானத்திற்கு தேவையான நொதியம் கறிவேப்பிலையில் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது.

4. கறிவேப்பிலை ஒரு இனிமையான மூலிகை நறுமணத்தை கொண்டிருப்பதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். அதே சமயம், உடலில் இருந்து வரும் வாசணையும் அதிகமாகும்.

5. கறிவேப்பிலை நீரைக் குடிப்பது தசைகள் மற்றும் நரம்புகளைத் தளர்த்தி, மன அழுத்தம் குறைக்கிறது. அத்துடன் உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறுகிறது.

6. கறிவேப்பிலையில் உள்ள ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் பீனாலிக் கலவைகள் உடலில் உள்ள அதிக கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகள் போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது. அத்துடன் இதய ஆரோக்கியத்தையும் பார்த்தக் கொள்கிறது.

தென்கொரியா வெள்ளத்தில் சிக்கி மூவர் பலி!

தென்கொரியாவில் மூன்றாவது நாளாக கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மூன்றுபேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, மழை வெள்ளத்தினால் 5,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அத்துடன் பொருட் சேதம், உட்கட்டமைப்பு சேதம் என்பன இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாங்ஜூ நகரம் உள்ளிட்ட சில தென்பகுதி இடங்களில், 400 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைப்பொழிவு பெய்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்தோரில் இருவர், வெள்ளம் தேங்கியிருந்த வீதிகளில் நின்ற கார்களிலும் ஒருவர் வெள்ள நீர் நிரம்பிய கட்டிடத் தரைத்தளத்திலும் சிக்கிக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

தென்கொரிய ஜனாதிபதி லீ ஜேய் மியூங், இயற்கைப் பேரிடரைத் தடுப்பது சவாலாக இருந்தாலும் பாதிப்பை முன்பே உணர்ந்து பொதுமக்களை எச்சரிக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கப்பலில் இருந்து விழுந்த பெண் தொடரும் தேடுதல்!

கனடாவின் நொவா ஸ்கோஷியா மற்றும் நியூஃபவுண்லாந்த் & லாப்ரடார் மாகாணங்களுக்கு இடையில் கப்பலில் பயணித்த ஒரு பெண் கடலில் விழுந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, மீட்புக் குழுக்களால் தீவிரமாக தேடப்படுகின்றார்.

காணாமல் போனவர் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், மரீன் அட்லாண்டிக் புளு புடீஸ் Marine Atlantic Blue Puttees கப்பலின் ஊடான கடல் பயணத்தின் போது கடைசியாக காணப்பட்டுள்ளார்.

அந்தப் கப்பல் North Sydney (நொவா ஸ்கோஷியா) இருந்து Port aux Basques (நியூஃபவுண்லாந்த்) நோக்கி பயணித்தது.

ஹலிஃபேக்சில் உள்ள இணைந்த மீட்புப் பிரிவு மையத்தினைச் சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் லென் ஹிக்கி தெரிவித்ததின்படி, பெண் கப்பலில் இருந்து கடலில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

மீட்பு பணிகளில் விமானம், ஹெலிகாப்டர், மற்றும் ஒரு குடிமை விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடலில் உள்ள கடலோர காவல் கப்பலும் கப்பல் சென்ற பாதையை மீண்டும் கடந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

டொரொண்டோவில் மோசடி குற்றச்சாட்டில் இரண்டு சட்டத்தரணிகள் கைது!

டொரொண்டோ நகரத்தில் காணி தொடர்பான பல விற்பனைப் பத்திரங்களில் இடம்பெற்ற மோசடிகளின் அடிப்படையில் இரண்டு சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார்டல் என்ட் புய் Cartel & Bui LLP என்ற சட்ட நிறுவனத்தில் பங்குடமையாளர்களான சட்டத்தரணி சிங்கா புய் (வயது 42) கடந்த 2021 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் தனது சேவை பெறுனர்கள் உட்பட பலரை மோசடியின் மூலம் ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர்மீது தற்போது மொத்தம் 42 குற்றச்சாட்டுகள், அதில் 5,000 டொலருக்கும் மேற்பட்ட மோசடி தொடர்பான 24 வழக்குகள், மேலும் நம்பிக்கையை மீறிய குற்றச்சாட்டுகள் 17 என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதே நிறுவனத்தின் மற்றொரு பங்குடமையாளரான நிக்கோலஸ் கார்டெல் (வயது 61) மீது ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒன்டாரியோ சட்ட சங்கத்தின் தகவலின்படி, தற்போது சிங்கா புயும், நிக்கோலஸ் கார்டெலும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் உள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

போதையில் பாம்பை விழுங்கிய நபர்!

இந்தியாவின் உத்தரப்பிரதேஷ் பகுதியில் அகிலேஷ் என்பவர் மது போதையில் பாம்பை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் அதிகமாக மது அருந்திவிட்டு இறந்த பாம்பை கடித்து விழுங்கியுள்ளார்.

இதைப் பார்த்த அவரது தாயார் பாம்பை வெளியில் எடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்கள் பறக்க விட தடை!

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் (AASL) எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் (AASL) அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் உள்ளதாவது,

எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் 5 கிமீ சுற்றளவில் 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் அல்லது எந்தவொரு வான்வழிப் பொருளையும் பறக்கவிடுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.

விமான நடவடிக்கைகளுக்கு இடையூறு மற்றும் விமானங்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டும் வகையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அகமதாபாத் விமான விபத்தையடுத்து பல விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்களில் சிக்கிவருவதால் பயணிகளுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தவிர்க்கும் முகமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடவளவை சரணாலயத்தில் தஞ்சமடைந்த யானைகள்!

உடவளவை யானைகள் பராமரிப்பு நிலையத்தில் தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டன.

உடவளவ யானைகள் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 06 யானைகளை உடவளவ சரணாலயத்திற்கு விடுவிக்கும் பணி நேற்று (17) சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி தலைமையில் நடைபெற்றது.

தாயின் அன்பை இழந்து சுமார் 05 ஆண்டுகளாக உடவளவ யானைகள் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 06 யானைகள் இவ்வாறு உடவளவை சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் விலங்கியல் அமைப்புகள் இந்த யானைகளின் பராமரிப்பிற்கு பங்களித்தன.

தாயார் வெளிநாட்டில் பாடசாலை மாணவி காதலனுடன் ஓட்டம்!

அப்புத்தளை பகுதியில் வீடொன்றில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்தி வைத்திருந்த இளைஞர் ஒருவர் (17) இரவு லிந்துல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட மாணவி தலவாக்கலையில் உள்ள தோட்டமொன்றைச் சேர்ந்த 10 ஆம் தரத்தில் கல்வி கற்பவர் ஆவார். மாணவி பேஸ்புக் மூலம் சந்தேக நபரான இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறி நானுஓயாவில் இளைஞனை சந்தித்து அவனுடன் அப்புத்தளைக்கு ரயிலில் சென்றதாக விசாரணையில் மாணவி தெரிவித்துள்ளார்.

மாணவியின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், மாணவி தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மகளை காணவில்லை என தந்தை லிந்துலை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை அடுத்து, மாணவியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் மாணவி மருத்து பரிசோதனைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்த முயன்ற விமான நிலைய பணியாளர்கள் கைது!

கனடாவிலிருந்து பிரான்ஸிற்கு நூதனமான முறையில் கஞ்சா போதைப் பொருளை கடத்த முயன்ற இரண்டு விமான நிலையப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் நோக்கி சட்டவிரோதமாக 147,000 கனேடியன் டாலர் பெறுமதியிலான கஞ்சாவை கடத்த முயன்றதாக இந்த பணியாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

டொரோண்டோ விமான நிலையத்தில் பணியாற்றும் இரண்டு பயணப் பொதிகளை சுமக்கும் ஊழியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை 2025 மே மாதம் தொடங்கப்பட்டதாகவும், டொரோண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பிரான்ஸ் நாட்டவர் பாரிஸ் சென்ற பிறகு, அங்குள்ள காவல்துறையால் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

ஆரம்ப விசாரணைக்குப் பிறகு, அவர் குற்றமற்றவர் என்று தெரிய வந்ததையடுத்து, இந்த விசாரணைகள் கனடிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் மூலம், அந்த பயணியின் பரிசோதனைக்கு வந்த சுமை கட்டுப்பாட்டுப் பதாகைகள் (baggage tags) மாற்றப்பட்டு, அவர் அறியாமல் 21 கிலோ கஞ்சா கொண்ட வேறு பை இணைக்கப்பட்டிருந்தது என்பது தெரியவந்தது.

51 வயதான Woodbridge நகரைச் சேர்ந்த டூகல் ஹேர்ன், மற்றும் 56 வயதான பிரம்டனைச் சேர்ந்த எட்வர்டு வின்டர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை மட்டும் செய்யுங்க நான் சினிமாவை விட்டு போறேன் வனிதா பேட்டி!

வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் நாயகியாக அறிமுகமானார்.

ஆனால் தொடர்ந்து அவர் நடிக்கவில்லை, இடையில் திருமணம், குழந்தைகள் என சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தவர் தொடர்ந்து ஆக்டீவாக ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெறுவது, நடுவராக இருப்பது, சொந்த தொழில் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்.

இவரது மகள் ஜோவிகா தயாரிக்க வனிதா இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் Mrs & Mr. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அதில் வந்த பணத்தை வைத்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

படம் ஜுலை 11ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

சமீபத்தில் வனிதா விஜயகுமார் ஒரு பேட்டியில், நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன், முதலில் என்னுடைய படம் பாருங்கள், அதன் பிறகு என்னை என்னத் திட்டினாலும் நான் வாங்கிக் கொள்கிறேன்.

என் படத்தில் இருக்கும் எல்லா கண்டென்டும் என்னுடைய ஒரிஜினல் கண்டென்ட். என் படத்திலிருந்து ஒருகாட்சியைக் காபி என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்.

நான் எந்தப் படத்தில் இருக்கும் சுருட்டவில்லை, நீங்கள் படத்தை பார்த்தால் தான் புரியும் என தெரிவித்திருக்கிறார்.

டிரெண்டிங் திரை விமர்சனம்

கலையரசன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை தந்தவர்.

அவர் நடிப்பில் சிவராஜ் இயக்கத்தில் இன்றைய உலகில் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனையான சோசியல் மீடியா உலகம் குறித்து பேச வந்துள்ள ட்ரெண்டிங் படம் மக்கள் மனதை கவர்ந்தா? பார்ப்போம்.

கலையரசன், ப்ரயாலயா இன்றைய ட்ரெண்டிங் கபுள். காலை முழித்து கால் கழுவி பல் விளக்குவது வரை ரீல்ஸ், இன்ஸ்டா, யூடியூப்-ல் அப்லோட் செய்து கபுள் வீடியோ செய்பவர்கள்.

திடிரென ஒரு நாள் இவர்கள் சேனல் டெலிட் ஆகிறது, இதனால் வாங்கிய வீட்டின் லோன் தலையில் இடியாக விழ, அந்த நேரத்தில் ஒரு ஆன்லைன் ரியாலிட்டி ஷோ என்று கால் வருகிறது. 7 நாட்கள் உங்கள் வீட்டிலேயே இருக்கலாம், நாங்கள் சொல்லும் டாஸ்கை 4 கட்டமாக முடித்தால் உங்களுக்கு 2 கோடி கிடைக்கும் என சொல்கின்றனர்.

பெரிய பணம் லோன் தலைவலி எல்லாம் முடிந்து விடும் என இருவரும் அந்த டாஸ்-கிற்குள் வர, அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
இயக்குனர் சிவராஜ் பிக்பாஸ்+ Squid Game இரண்டையும் கலந்து இன்றைய ரீல்ஸ் மோக கபுள்ஸ் தலையில் கட்டினால் என்ன ஆகும் என்ற கான்செப்ட் உடன் திரைக்கதை அமைத்துள்ளார்.

அதற்கு கலையரசனும், ப்ரயாலையும் அப்படியே பொருந்தி போகின்றனர். எதோ ஜாலியாக ஆரம்பித்த டாஸ்க் அடுத்த அடுத்த கட்டமாக ஒருவரை ஒருவர் எமோஷ்னல் டேமேஜ் செய்வது போல் காட்டி, சமூகத்தின் இணைய அடிமைகளை தோல் உரித்து காட்டியுள்ளனர்.

அதிலும் டாஸ்க் ஆக கலையரசன் தன் மாமனர்க்கு விபத்து என்று சொல்வது, ப்ரயாலையா கலையரசனை பேசி நம்ப வைத்து ரெட் பட்டனை அமுக்க வைக்கும் காட்சி யூடியூபில் கபுள்ஸ் வீடியோ போடுவோரின் மற்றொரு முகத்தை காட்டிய விதம் சிறப்பு.

படத்தின் வசனங்கள் பல இடத்தில் ரசிக்க வைக்கிறது, நமக்கு தேவை என்றால் அங்கு கடவுள் வராமல் அங்கு பேய் வந்தால் நாம் அந்த பேய்-யை தான் கொண்டாடுவோம் போன்ற வசனங்கள் நச்.

படத்தின் முதல் பாதி டாஸ்க், என்ன செய்வார்கள் என்ற பதட்டம் இருக்க, இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு மேல் அட என்னப்பா இது என்ற மனநிலைக்கு கொண்டு செல்கிறது.

ஒருவரின் ஒருவர் உண்மை முகம் தெரிந்ததும், சண்டை பிரிவு என செல்ல, பிறகு புரிதல் வந்து ஒன்றிணைவது என செல்லும் இடத்தில் மீண்டும் கலையரசன் எடுக்கும் முட்டாள் தனம் மனிதர்களின் இயல்பு என்றாலும், அந்த இடம் கொஞ்சம் அலுப்பு தட்ட ஆரம்பிக்கிறது.

அதிலும் கிளைமேக்ஸில் வரும் டாஸ்க் எல்லாம் பணம் மனிதர்களை எந்த எல்லைக்கு கொண்டு செல்கிறது என்பதன் கருப்ப பக்கத்தை காட்டியுள்ளது.

ரீல்ஸ், வீடியோ லைக், சப்ஸ்கிரைப் மோகம், அதனால் கிடைக்கும் பெரிய பணம், திடிரென இதெல்லாம் இல்லை என்றால் அவர்களின் குணநலன் எப்படியெல்லாம் மாறும் என்பதை கண் முன் காட்டியுள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவு ஒரு வீடு இரண்டே கதாபாத்திரம் என அதற்குள் தன்னால் முடிந்த பெஸ்ட்-யை தந்துள்ளார், சாம் சி எஸ் பின்னணி இசை பெரும் பலம்.

க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம் கலையரசன், ப்ராயலையா நடிப்பு. பின்னணி இசை, படத்தின் வசனம்.

பல்ப்ஸ்
2 பேரை சுற்றியே கதை நகர்வது ஒரே விஷயம் திரும்பி திரும்பி நடப்பது போன்ற உணர்வு. இரண்டாம் பாதி என்னாகும் என்ற பரபரப்பு தாண்டி, அட என்னப்பா இது என உணர்வு வந்து விடுகிறது.

மொத்தத்தில் இன்றைய இணைய உலக சீர்கேடுகளை அப்படியே படம் பிடித்ததற்காகவே சில குறைகள் இருந்தாலும் இந்த Trending-யை Like செய்யலாம்.

2.75/5

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி பரிசு வென்ற நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை தேசிய லொத்தர் சபை வழங்கியுள்ளது.

மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா சூப்பர் பரிசுடன் கூடிய வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை, கொக்கரெல்ல பகுதியைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார்.

தேசிய லொத்தர் சபை ஏற்பாடு செய்த விடேச நிகழ்வு ஒன்றில் கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசாரினால் லொட்டரி பரிசை வென்ற நபருக்குரிய காசோலை உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

துணை மேயர் ஹேமந்த வீரகோன், தேசிய லொத்தர் சபை தலைவர் M.D.C.A. பெரேரா மற்றும் பொது முகாமையாளர் ஏ.எம். ஆரிஃப் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இயக்குனர் வேலு காலமானார்!

திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

மறைவு
இயக்குனர் வேலு பிரபாகரன் கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்தார்.

சென்னையில் உள்ள தனியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை துவங்கிய வேலு பிரபாகரன் இயக்குனர் மற்றும் நடிகர் என பல பரிமானங்களில் பிரபலமாக இருந்தார்.

கடந்த 1989ஆம் ஆண்டு நாளைய மனிதன் படத்தில் இயக்குனராக அறிமுகமாகி ‘அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் என பல படங்களை இயக்கியுள்ளார். இவரின் இறப்பு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் இறைச்சிகள்!

பொதுவாக தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கத்தினால் ஏகப்பட்ட நோய்கள் சிறுவயதிலேயே வந்து விடுகிறது. இதன்படி, உடலுக்கு தேவையான புரத சத்தை இறைச்சி வகைகள் வழங்குகிறது.

சுவைக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் நாம் எடுத்துக் கொள்ளும் இறைச்சி குடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கடைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யும் இறைச்சி வகைகள் தான் இதில் முக்கியம் பெறுகிறது.

செரிமானப் பாதையில் வாழும் டிரில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளின் சிக்கலான சமூகமாகும்.

இவை தான் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மனநிலை மாற்றம் வரையிலான செயன்முறைக்கு உதவியாக இருக்கின்றன. இதில் ஏதாவது கோளாறு ஏற்படும் பொழுது முழு உடலும் பாதிக்கப்படுகிறது.

அந்த வகையில், குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் இறைச்சி வகைகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

வெள்ளை இறைச்சி
பொதுவாக வெள்ளை இறைச்சி எனப்படுவது கோழி, வான்கோழி போன்ற இறைச்சியாகும். கோழி அல்லது வான்கோழி போன்ற வெள்ளை இறைச்சியை சாப்பிட்டால் சுமாராக 36 குடல் பாக்டீரியா இனங்களை மாற்றக்கூடும், ஆனால் குடல் நுண்ணுயிரி பன்முகத்தன்மை நிலையானதாகவே இருக்கும்.

பதப்படுத்தப்படாத சிவப்பு இறைச்சிகள் மிகவும் அடர் சிவப்பு நிறத்தை கொண்டிருக்கும். ஸ்டீக், ஆட்டுக்குட்டி, ஆடு மற்றும் பன்றி இறைச்சி ஆகிய இறைச்சிகள் இவற்றில் உள்ளடங்கும். அவை நுண்ணுயிரியலை மிகக் குறைவாகவே மாற்றுகின்றன.

ஸ்டீக் அல்லது ஆட்டுக்குட்டி போன்ற பதப்படுத்தப்படாத சிவப்பு இறைச்சியை காலையில் சாப்பிடும் பொழுது குடல் நுண்ணுயிரியல் பன்முகத்தன்மையில் சில ஆனால் குறைந்தபட்ச தாக்கத்துடன் சுமார் 14 பாக்டீரியா இனங்களை மாற்றும் வாய்ப்பு உள்ளது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பன்றி இறைச்சி, தொத்திறைச்சி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பெரும்பாலும் வேதியியல் ரீதியாக பதப்படுத்தப்படுகிறது. குடல் நுண்ணுயிரியலில் அவற்றின் விளைவு பாதகமானது என மருத்துவர் எச்சரிக்கிறார்.

தொத்திறைச்சி அல்லது பன்றி இறைச்சி போன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிட்டால் அவை 300 க்கும் மேற்பட்ட பாக்டீரியா இனங்களை மாற்றி, நுண்ணுயிர் பன்முகத்தன்மையைக் கணிசமாகக் குறைக்கும்.

குருபகவானுக்கு பிடித்த ராசியினர்!

அனைத்து கிரகங்களிலும் மங்களகரமானதும் சுபமானதும் குரு பகவான். அவர் கல்வி, அறிவு, செல்வம், செழிப்பு, திருமணம், குழந்தைகள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவானின் பார்வை இருந்தால் மட்டும் போதும் – அந்த நபர் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும், ஸம்ருத்தியையும் பெறுவார்.

ஜோதிடக் கணக்குகளின்படி, குரு பகவான் எல்லா ராசிக்காரர்களுக்கும் சமமான அன்பை வழங்குகிறார். ஆனால் சில ராசிக்காரர்களை அவர் அதிகமாக விரும்பி, அதிகமான அருளையும் ஆசியையும் வழங்குவதாக நம்பப்படுகிறது.

கடக ராசி

கடக ராசிக்காரர்கள், குரு பகவானின் ஆசியால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி மற்றும் நிம்மதியுடன் வாழும் அதிர்ஷ்டவசீயர்கள் என ஜோதிடம் கூறுகிறது. குரு பகவன் கடக ராசியில் சஞ்சரிக்கும் போதெல்லாம், இந்த ராசிக்காரர்கள் செல்வம், சமூக மரியாதை, மற்றும் வாழ்க்கை மேன்மை போன்ற பல நன்மைகளை பெறுகிறார்கள். குருவின் அருள் இவர்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும். எந்த ஒரு முயற்சியும் கல்வியில் சிறந்த வாய்ப்புகள் தொழிலில் முன்னேற்றம் சமூக சேவையில் கவுரவம் நிதி நிலை உயர்வு.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு: தன்னம்பிக்கை மிகுந்தது இலக்குகளை அடைய கடின உழைப்பு திறமை மற்றும் தலைவர் தன்மை ஆகியவை இயற்கையாகவே வழிவந்தவை. சிம்ம ராசிக்காரர்களுக்கு: தன்னம்பிக்கை மிகுந்தது இலக்குகளை அடைய கடின உழைப்பு திறமை மற்றும் தலைவர் தன்மை ஆகியவை இயற்கையாகவே வழிவந்தவை. குரு பகவானின் அருளால், இவர்களுக்கு கல்வி மற்றும் தொழிலில் முன்னேற்றம் நிதி நிலை மேம்பாடு குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சி மற்றும் மன அமைதி என அனைத்து வாழ்வதுறைகளிலும் நேர் பாதை கிடைக்கிறது.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்கள், இயற்கையாகவே உற்சாகம் மற்றும் விழிப்புணர்வுடன் நிறைந்தவர்கள். இவர்கள் எப்போதும் புதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஆவலுடன் இருப்பவர்கள். தனுசு ராசிக்காரர்கள்: நம்பிக்கையுடன் செயல்படுபவர்கள் தோல்வியில் கூட பயம் கொள்ளாமல் முயற்சி தொடர்வவர்கள் கடின உழைப்பினால் உயரம் எட்டுவார்கள் குரு பகவானின் ஆசீர்வாதத்தால், இவர்களின் தோல்வியடைந்த முயற்சிகளும் வெற்றியில் மாறுகின்றன. எந்தவொரு கடின சூழ்நிலையிலும், குருவின் அருள் இவர்களை பாதுகாக்கிறது.

மீனம்

மீன ராசி, ஜோதிடக் கணிப்புகளின்படி குரு பகவானுக்கு மிகவும் நேசமான ராசிகளில் ஒன்று. குரு இந்த ராசிக்காரர்களை வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து, வழிகாட்டி வருகிறார். கருணை மற்றும் தயையுள்ள மனப்பான்மையுடன் இருப்பவர்கள் சகிப்புத்தன்மை, அறம், மற்றும் தியானம் ஆகியவற்றில் ஆழமான ஈடுபாடு கொண்டவர்கள் கலை, இசை மற்றும் இலக்கியம் போன்ற சிருஷ்டி சார்ந்த துறைகளில் தனிச்சிறப்பைக் காட்டக்கூடியவர்கள் இவர்கள் உள்ளத்தில் இருக்கும் பொறுமையான மற்றும் அமைதியான தன்மை, குரு பகவானின் அருளைப் பெற மிக முக்கியமான காரணமாகும்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பெரும் விருந்து

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்-காசா போர், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் போன்றவற்றால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எனினும், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து விருந்து அளித்துள்ளார்.

அதன்படி, பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீபா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி ஆகியோரை தனித்தனியாக டிரம்ப் சந்தித்து விருந்து அளித்தார்.

ஏற்கனவே தனது 2-வது பதவிக் காலத்தின்போது சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். இதன்மூலம் காசா போரில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது.

தற்போதைய இந்தச் சந்திப்பின்போது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது, அமெரிக்க ஜெட் விமானங்கள், கணினி சேவையகங்கள், அலுமினிய உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

அதேபோல், அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின்னுடன் ஆலோசிக்கப்பட்டது.

பராக் ஒபாமா – மிச்சல் தம்பதி விவாகரத்து விவகாரம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா – அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரும் விவாகாரத்துப் பெறப்போவதாக எழுந்தது உண்மையில்லை, என்று இருவரும் ஒன்றாகத் தோன்றி உறுதி செய்துள்ளனர்.

சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்காத நிலையில், இந்த விவாகரத்து தொடர்பான வதந்தி பரவியுள்ளது.

இந்த நிலையில்தான், மிச்சல் ஒபாமா தன்னுடைய சகோதரருடன் இணைந்து நடத்தும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின்போது, ஒபாமாவும் தோன்றி பேசினார்.

அப்போது, இருவரும் தங்களுக்கே உரிய நகைச்சுவை மற்றும் சாதாரண பேச்சு வழக்கில், தங்களுக்கு இடையே விவாகரத்து என்பது வெறும் வதந்திதான், நாங்கள் நீடித்த, மிகவும் அன்பான வாழ்க்கையை தொடர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்துள்ளனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மிச்சல், இவர் எனது கணவர் என்று அன்போடு கூறினார்.

அப்போது, மிச்சலின் சகோதரர் கிரெய்க், இருவரையும் ஆரத் தழுவினார். உங்கள் இருவரையும் ஒரே அறையில் இன்று பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது என கிரெய்க் கூற, அதற்கு சிரித்தபடி, மிச்சல், ஆமாம், எனக்குத் தெரியும். நாங்கள் விவாகரத்துப் பெறாவிட்டாலும், பெற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள் என்றார்.

இன்றைய ராசிபலன்கள்18.07.2025

ரிஷபம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமுடன் பழகுங்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமுடன் பழகுங்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிப்புக் கூடும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்

எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சி அதிகாரிகள் பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும் புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்றப் பொலிவு கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

தனுசு

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். வியாபாரத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் தர்மசங்கடமான சூழல்களில் சிக்குவீர்கள். சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டிய நாள்.

மகரம்

திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள் புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

முல்லைத்தீவு ஆற்றில் மீட்க்கப்பட்ட சடலம்!

முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் உயிரிழந்த நிலையில் சடலம் வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது. சின்னாற்றுக்குள் உயிரிழந்தவரின் சடலம் நீரில் மிதந்துள்ளது.

அதனையடுத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உடலத்தினை மீட்டுள்ளார்கள்.

குறித்த சம்பவத்தில் செல்வபுரம் பகுதியினை சேர்ந்த 54 அகவையுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வயலில் இருந்து உயிருடன் மீட்க்கப்பட்ட குழந்தை!

குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தசம்பவம் இன்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயல் பகுதியில் குழந்தை ஒன்று இருப்பதாக பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மீட்க்கப்பட்ட குழந்தை மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் குழந்தையை வயலில் விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.