நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை மறைக்க சதி?

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை மறைக்கும் முகமாக ஒரு நபர் ஊடகங்களுக்கும் யாழ்ப்பாண பிரதி பொலிஸ் அத்தியட்சகருக்கும் சித்தரித்த கதைகளை வெளியிட்டுள்ளார்.

குறித்த நபர் கருத்து தெரிவிக்கையில் சம்பவத்தை நேரில் பார்வையிட்டதாக கூறியுள்ளார்.

உண்மையில் நீதிபதி மீதும், நீதிபதியின் கார் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் கைலாசபிள்ளையார் கோவிலில் இருந்து கோவில் வீதியூடாக வந்த வேறொரு நபரை இலக்கு வைத்து நடைபெற்றதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, நீதிபதி மா. இளஞ்செழியனின் கார் எதேச்சையாகவே வந்தது. நீதிபதி மீதோ அல்லது நீதிபதியின் கார் மீதோ துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட வில்லை என திசை திருப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் நீதிபதி இளஞ்செழியன் மீதே இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாகியுள்ள இந்த சூழ்நிலையில், தனி நபர் ஒருவர் துணிச்சலாக நீதிபதி மீதோ, பொலிஸார் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், அது வேறு எவரையோ இலக்கு வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தாக்குதலை திசை திருப்பும் செயல் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

படுபயங்கரமான முறையில், சன நடமாட்டமுள்ள இடத்தில் வைத்து மிகத் தெளிவான முறையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

இதன் போது, ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இன்னொரு அதிகாரி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஆனால், மிகச் சுலபமாக இந்த தாக்குதல் சம்பவத்தை திசை திரும்பும் முயற்சி இதன் மூலமாக முன்னெடுக்கப்படுகின்றதா என்னும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.