
அரசியல் அமைப்பு உருவாக்கும் செயற்குழு மற்றும் அரசியல் அமைப்பு பேரவை ஆகியனவற்றிலிருந்து விலகிக் கொள்ளப் போவதில்லை என கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சுயாதீனமாக இது குறித்து தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்சிகளும் தங்களது அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் தீர்மானம் எடுக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து விலகிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், கூட்டு எதிர்க்கட்சியினர் அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, மஹஜன எக்சத் பெரமுன, லங்கா சமசமாஜ கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிவித்துரு ஹெல உறுமய ஆகியன அரசியல் அமைப்பு பேரவையில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க விருப்பம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






