உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஜிகா வைரசின் ஆரம்பகால அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம்.
ஜிகா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் அறிகுறிகள்
- சாதாரண காய்ச்சல் எனில் 37.5 டிகிரி வரை இருக்கும். ஆனால் ஜிகா வைரஸ் என்றால் 38.5 டிகிரி வரை காய்ச்சல் இருக்கும்.
- உடலிலுள்ள நீர்ச்சத்து மற்றும் ரத்தத்தின் அளவு குறைந்துவிடும், அதிகமாக வியர்க்கும்.
- கண்கள் வறட்சி, கண் எரிச்சல் மற்றும் சிவத்தல்.
- சருமத்தில் அரிப்பு மற்றும் தோல் சிவந்து திட்டு திட்டாக இருக்கும்.
- உடலிலுள்ள நீர்ச்சத்துக்கள் குறைந்துவிடுவதால் சோர்வாக இருப்பார்கள்.
- கை மற்றும் கால் முட்டிகளில் வீக்கம்.
ஜிகா வைரஸின் உறுதி சோதனை எது?
இன்குபேஷன் பீரியட் (Incubation Period) என்று கூறப்படும் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை நடத்தப்படும் மருத்துவ சோதனை மூலம் ஜிகா வைரஸ் உள்ளதா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படும்.







