மஹிந்தவின் வழியை மைத்திரியும் பின்பற்றுகின்றரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வழியை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பின்பற்றுகின்றரா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது பங்களாதேஸிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ள இலங்கைப் பிரஜைகளின் எண்ணிக்கை 73 என பங்களாதேஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பாரிய பரிவாரங்களுடன் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்வதாக, தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் பின்னணியில் தற்போதைய ஜனாதிபதியும் பாரிய செலவில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கின்றாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களும் இணைந்து கொண்டுள்ளதாக பங்களாதேஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத் தரப்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.