“எனக்­காக வேலை ­நி­றுத்த போராட்­டங்கள் வேண்டாம்”

அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் வேலை­நி­றுத்தப்போராட்­டத்­தினை முன்­னெ­டுக்கக்கூடாது என அரச மருத்­துவ சபையின் முன்னாள் தலைவர் பேரா­சி­ரியர் கார்லோ பொன்­சேகா தெரி­வித்­துள்ளார்.

அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் நேற்­றைய தினம் பேரா­சி­ரியர் கார்லோ பொன்­சே­காவை சந்­தித்து அவர் தொடர்ந்தும்  மருத்­துவ சபையின் தலை­வ­ராக கட­மை­யாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மக­ஜரை கையளிக்க சென்­றது. அதனை ஏற்ற பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்,

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

வேலை நிறுத்­த­ப்போ­ராட்­டங்­களை நான் விரும்­பு­வ­தில்லை. நான் அரச மருத்­துவ சபையின் தலை­வ­ராக 5 வரு­டங்­க­ளாக கட­மை­யாற்­றி­விட்டு மேலும் 5 மாதங்­க­ளுக்கும் கட­மை­யாற்­றினேன்.

எவ்­வா­றா­யினும் நான் தலைமைப் பத­வியில் இருப்­பது குறித்து சிந்­திக்­கின்றேன். ஆனாலும் தற்­போது எனது உடல்­நி­லைமை குறித்து அவ­தானம் செலுத்­த­வேண்­டிய நிலை­மையில் தலை­மைப்­ப­த­வியில் இருப்பது சற்று கடி­ன­மான செய­லாகும்.

எவ்­வா­றா­யினும் (கைகூப்பி வணக்­கத்­துடன்) இனி எனக்­கா­க­வென கூறிக்­கொண்டு எந்­த­வி­த­மான வேலை­நி­றுத்தப்போராட்­டங்­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டாம். இருப்­பினும் எனது பங்­க­ளிப்பு இல்­லா­வி­டினும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­திற்கு எனது ஆத­ரவு என்றும் இருக்கும்.

அத்­துடன் நாட்டில் வைத்­தியர் ஒருவர் உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்­கான சட்டதிட்டங்களின் வலுவை குறைக்காமல் இருக்க வேண்டும். அதனால் சைட்டம் நிறுவனத்தை சட்ட பூர்வமான ஒன்றாக அனுமதிக்ககூடாது என்று தெரிவித்தார்.