இமையை மூட விடாமல் திரையில் ரசிக்க செய்யும் இமைக்கா நொடிகள்

எந்த வேடம் ஏற்றுக கொண்டாலும் அந்த பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொண்டு தனக்கான பெயரை ஈட்டிக் கொள்வதில் அதர்வா சமார்த்தியகாரர் என்று திரை உலகினர் பாராட்டி வருவதுண்டு.
ஒரு ஆக் ஷன் ஹீரோவுக்கு உரிய கட்டுமஸ்தான உடலமைப்பு, குரல்  வளம், நடிப்பு திறன் மற்றும் தோற்ற அமைப்பு கொண்ட அதர்வா தற்போது நடித்து வரும்  இமைக்கா நொடிகள்” படம் மூலம் ஒரு முழுமையான ஆக் ஷன் ஹீரோ உரு எடுப்பார் என பெரிதும் நம்புகிறது திரை உலகம்.
கேமியோ பிலிம்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பில் சி ஜெயக்குமார் தயாரிக்கும் “இமைக்கா நொடிகள்” படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவர்  டிமோண்ட்டி காலனி  , திரைப் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.நயன்தாரா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அதர்வாவுக்கு இணையாக நடிப்பவர் புது முகம் ராஷி கண்ணா.பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் மிக முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன்  கௌரவ  வேடத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகும் இமைக்கா நொடிகள் படம்  திரை உலகில் பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.
சமீபத்தில் பெங்களூரு நகரில் படமாக்கக்  பட்ட  இந்த படத்தின் சண்டை காட்சி சர்வதேச தரத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.  ஹாங்காங் – ஐ சேர்ந்த லீஹானீயூ  என்கிற உலக புகழ் பெற்ற சைக்கிள் ஸ்டுண்ட் நிபுணர், சண்டை இயக்குனர் ஸ்டன் சிவாவுடன் இணைந்து  பணியாற்றிய இந்த சண்டை காட்சியில் அதர்வாவுடன் பல சண்டை கலைஞர்களும் பங்கு பெற்றனர்.
“இயக்குனர் இந்த காட்சியை விவரித்தவுடன் இதை எப்படி பிரமாண்டமாக, மற்றவர்கள் பிரமிக்கும் படி செய்ய முடியும் என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அதர்வா போன்ற வளர்ந்து வரும் ஒரு 
ஆக் ஷன்
 ஹீரோவுக்கு இப்படி ஒரு பிரம்மாண்டம் அவசியம் என்பதை உணர்ந்து ஹாலீவுட்  ஸ்டண்ட்   இயக்குநர்  ஒருவரை கொண்டு வந்து உள்ளேன்.  படம் எங்கும் பரவி நிற்கும் இத்தகைய  பிரம்மாண்டம் ரசிகர்களை இமையை மூட விடாமல் திரையில் ரசிக்க செய்யும் என்றார் தயாரிப்பாளர் சி ஜெயக்குமார்.