நடிகை தமன்னா இன்று தமிழ், தெலுங்கில் மிகவும் பிசியான நடிகை. பாகுபலி வெற்றியை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். சீனியர் நடிகைகளுக்கு இணையான அளவில் இருக்கிறார்.
சமீபத்தில் இவரின் சகோதரனின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் குஷியான தமன்னா விசேஷத்தில் எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துகொண்டார்.
தமன்னாவுக்கு திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் நான் கலாச்சாரத்தையும், திருமணத்தையும் மதிக்கிறேன். சரியான நேரத்தில் திருமணம் செய்துகொள்வேன். இப்போது படங்களில் பிசியாக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்






