உங்களை சீராக வைக்கும் யோகாவிற்கும் உங்கள் ஜாதகத்திற்கும் உள்ள ரகசிய சம்மந்தங்கள்!!

rasi
உங்களை சீராக வைக்கும் யோகாவிற்கும் உங்கள் ஜாதகத்திற்கும் உள்ள ரகசிய சம்மந்தங்கள்!!

உடம்பை எப்படி வேண்டுமானாலும் வளையும் தன்மை கொண்ட ராகு கேதுகளின் தொடர்பு மூன்று மற்றும் பதினோராம் பாவத்திற்கு தொடர்பு பெற்றால் யோகாசனத்தில் சிறந்து விளங்குகிறார்கள். யோகா உடம்பையும் மனதையும் சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஜோதிடத்தில் யோகாசனத்திற்கான கிரக நிலைகள்:

1. யோகாசனம் கற்கவும் தொடர்ந்து செய்யவும் ஒருவர் ஜாதகத்தில் லக்னம், முயற்சி பாவம் எனப்படும் மூன்றாம் பாவம் நிறைவேற்றும் பாவமான பதிறோராம் பாவம் ஆகிவை பலமாக இருக்க வேண்டும்.

2. காலபுருஷனுக்கு லக்னமாக மேஷமும் மூன்றாம் பாவமாக மிதுனமும் பதினொராம் பாவமாக கும்பமும் வருவதால் ஜாதகத்தில் செவ்வாய், புதன், சனி ஆகியவற்றின் தொடர்பு அவசியமாகும்.

3. கிரகங்களில் விளையாட்டை குறிக்கும் செவ்வாயும் சுவாசத்தை குறிக்கும் புதனும் எலும்பை குறிக்கும் சனியும் தொடர்பு பெற்றிருக்கவேண்டும். இவற்றோடு உடம்பை குறிக்கு சந்திரனும் தொடர்பு பெற்றிருக்கவேண்டும்.

4. உடம்பை எப்படி வேண்டுமானாலும் வளையும் தன்மை கொண்ட ராகு கேதுகளின் தொடர்பு மூன்று மற்றும் பதினோராம் பாவத்திற்க்கு தொடர்பு பெற்றால் யோகாசனத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.

5. வளையும் தன்மை பெறுவதற்கு மூலை ராசிகளின் தொடர்பும் லக்னத்திற்கோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களுக்கோ அமைய வேண்டும்.

6. யோகா ஆசிரியர்களாக அமைய ஆறு மற்றும் பத்தாம் பாவ தொடர்போடு குரு சேர்க்கையும் பெற வேண்டும்.

7. பிரபல யோகா குருமார்களின் ஜாதகங்களில் மூலை ராசிகளில் லக்னம் அமைவது அல்லது செவ்வாயின் வீடுகளில் லக்னம் அமைவது, சனியின் வீடுகளில் லக்னம் அமைந்து செவ்வாய் உச்சம் பெறுவது போன்ற நிலைகள் காணப்படுகின்றன. மேலும் செவ்வாய் உச்சம் பெற்று நிற்பது, சந்திரன் உச்சம் பெற்று நிற்பது ஆகியவையும் குறிப்பிடத்தக்க நிலைகளாகும்.

8. செவ்வாயின் வீடுகளை லக்னமாக பெற்றவர்களுக்கு மூன்றாம் பாவம் அல்லது பதினோறாம் பாவம் புதனின் வீடுகளாக வருவது யோகாவில் சிறக்க சிறப்பான கிரக நிலைகளாகும்.