விஜய் டிவி யில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பதை நகைச்சுவை நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போக போக மக்களுக்கு எரிச்சலை கிளப்ப ஆரம்பித்துள்ளது.
முதன் முறையாக கமல் சின்னத்திரையில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் மக்கள் உலகநாயகனை காண ஆர்வமுடன் இருந்தனர்.
ஆனால் இப்போது நிலைமையே வேறு. ஆண்டவரே உங்கள் தகுதிக்கு இந்த நிகழ்ச்சி சரியானது அல்ல நிகழ்ச்சியை விட்டு வெளியேறுங்கள் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக பிரபலங்கள் சதா ஜூலியை டார்கெட் செய்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி பங்கேற்றதால் அனைவரும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தனர்.
ஆனால் அவரின் நிஜ முகம் வேறாக இருப்பதாக கூறுகின்றனர். மேலும் அவர் தொடர்பாக வரும் வீடியோக்கள் முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது என்றும் ஆதங்கப்படுகின்றனர்.
குண்டு ஆர்த்தியும், காயத்ரி ரகுராமும் ஜூலியை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்புவதில் குறியாக இருக்கிறார்கள்.
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தான் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று பலரும் கணித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து நகைச்சுவை நடிகர் சதீஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தான் வெற்றி பெறுவார் என்றும், அதற்கு காரணமாக ஆர்த்தி மற்றும் காயத்ரி இருப்பார்கள் என்றும் தனது த்விட்டேர் பக்கத்தில் கூறியுள்ளார்.