இனிமேல் முழு ஆடை அணியாமல் கடலில் குளிக்காதீர்கள்; ஆராட்சியாளர்கள் எச்சரிக்கை!

இனிமேல் முழு ஆடை அணியாமல் கடலில் குளிக்காதீர்கள்; ஆராட்சியாளர்கள் எச்சரிக்கை!

இயற்கைச் சூழல்களியேயே கடல் ஒரு அற்புதமான கொடை என்றுதான் சொல்லலாம். சமுத்திரங்கள், விரிகுடாக்கள், நீரேரிகள், உள்நாட்டுக் கடல்கள் என கடல் பல வகைகளில் பார்க்கப்படுகிறது.

இத்தகைய கடலில் உல்லாசமாக குளிக்கவேண்டும் என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் இருப்பது சாதாரணமே. இதற்கென்று உலகில் பல கடற்கரைகள் பிரத்தியேகமாக இருப்பதும் அறிந்ததே.

கடலில் நாம் நினைப்பதவிட மிகவும் ஆபத்தான உயிரினங்கள் எல்லாம் உண்டு. தரையில் உள்ள ராஜ நாகம் அல்லது கருநாகம் போன்ற பாம்புகளில் உள்ள விஷங்களை விட கடலில் வாழும் சிலவகையான பாம்புகளில் அதிக விஷம் உள்ளதாக ஆராட்சியாளர்கள் சொல்கிறார்கள்.

அவை கடித்த உடனே நமது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, தசைகள் செயலிழந்து உடனடியான மரணம் நிகழும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.

ஆனால் தரையில் உள்ள விஷப் பாம்புகளுக்கும் கடலில் உள்ள விஷப் பாம்புகளுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவை தரைப் பாம்புகள் போல மூர்க்கத்தனமானவையல்ல; தமது வழியில் குறுக்கிடுபவர்களுக்கு வழிவிட்டுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவை; பெரும்பாலும் நாம் அவற்றைத் தீண்டினால்கூட அவை திரும்ப தீண்டுவது குறைவு.

பாம்புகளை தவிர மனிதர்களையே உண்ணக்கூடிய திமிங்கிலம் உள்ளிட்ட வெள்ளைச் சுறா மற்றும் சிலவகையான மீன்கள், இராட்சத கணவாய்கள் என்பனவும் கடலில் உண்டு.

இவற்றிலிருந்து தப்பி வாழ்வது எவ்வாறு?

எப்பொழுதும் நாம் கடலில் குளிக்கும்போது உடலில் முழு ஆடையை அணிந்திருக்கவேண்டும் என்று கடல் உயிரினங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் வெள்ளைச் சுறா உள்ளிட்ட அபாயகரமான மீன் இனங்கள் பெரும்பாலும் தமது மோப்ப சக்தியையும் பார்வைத்திறனையும் வைத்தே வேட்டையாடலில் ஈடுபடுகின்றன.

மனிதர்கள் வெறும் உடலுடன் கடலில் குளிக்கும்போது சுறாக்களின் கண்ணில் அகப்பட நேர்ந்தால் சுறாவின் கண்களுக்கு மனிதர்களும் ஏதொவொரு கடல் உயிரினமாகவே தெரிவார்களாம். இதனாலேயே தமது பயங்கரமான ரம்பம் போன்ற பற்களால் மனிதர்களைத் தாக்கிவிட்டு செல்கின்றன.

முழு ஆடை அணிந்தவாறு குளிக்கும்போது சுறாவின் கண்களுக்கு கடல் உயிரினம் போல தெரிவதில்லை. அத்துடன் நாம் அணிந்திருக்கும் ஆடையில் படிந்திருக்கும் நிறப் பூச்சுக்களின் இரசாயண வாசனையானது எமது உடல் மணம் நேரடியாக செல்வதை தடுக்கவல்லது.

நீங்கள் குளிக்கும் கடலில் சுறா இல்லை என்ற துணிவோடு குளிக்காதீர்கள். ஏனெனில் சுறாக்களிலேயே ஆபத்து நிறைந்த வெள்ளைச் சுறாக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்றன.