புத்தசாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை அரசியல் அமைப்பில் எந்த வகையிலும் மாற்றப்படமாட்டாது

புத்தசாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை அரசியல் அமைப்பின் மூலம் எந்த வகையிலும் மாற்றப்படவோ, நீக்கப்படவோ மாட்டாது  என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்hளர்.
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன புதிய அரசியல் யாப்பில் பௌத்த சமயத்திற்கு உரிய இடம் வழங்கப்படமாட்டாதென குறிப்பிட்டு வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் அறிக்கை தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியும், தாமும், இரண்டு பிரதான கட்சிகளும் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை இரத்துச் செய்யப்போதில்லையென்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆறு துணைக்குழுக்கள் இது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. பல்வேறு சங்கங்கள் யோசனைகளை முன்வைத்துள்ளன. ஆனால் அரசியல் யாப்பு நடவடிக்கைக்குழு இது தொடர்பாக எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆமலும் கூறினார்.