வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

kancha

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தின் மையப் பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை நேற்று இரவு 8 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சியிலிருந்து அக்கரைப்பற்றுக்கு பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் பயணப் பொதியினை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் பொலிஸார் சோதனை மேற்கொண்டபோது பொதி செய்யப்பட்டு அவரின் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

அத்துடன், 1 கிலோ 950 கிராம் கேரளா கஞ்சாவினை சட்ட விரோதமாக கொண்டு செல்லமுற்பட்ட போது சிவில் உடையிலிருந்த பொலிஸார் பயணியின் பயணப்பையினை சோதனை மேற்கொண்டபோது கஞ்சா கடத்தும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கஞ்சாவுடன் இந்த நபரையும் கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.