கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

கொழும்பின் சில இடங்களில் நாளை மறுதினம்(09) நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கொழும்பு, கோட்டை பிரதேசத்தை சுற்றியுள்ள பகுதிகளிலேயே இவ்வாறு 12 மணித்தியாலங்கள் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, கொஸ்வத்தை மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளிலேயே தடை அமுல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

குறித்த நீர் விநியோகத் தடையானது திருத்தப்பணிகளின் காரணமாக அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.