கணவரையும், நான்கு குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்த பெண்ணை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
அமெரிக்காவின் Georgiaவை சேர்ந்தவர் Martin Romero, இவர் மனைவி Isabel Martinez.
இவர்களுக்கு Isabela (10), Dacota Romero (7), Dillan Romero (7), Axel Romero (2) மற்றும் Diana Romero (9) என ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று தனது மகள் Diana தவிர அனைவரையும் கொலை செய்து விட்டதாக பொலிசாருக்கு Martinez தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் 5 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விட்டு Martinezவை கைது செய்தார்கள்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், Martinez தனது குடும்பத்து ஆட்களை கொலை செய்தது குறித்த காரணத்தை அவரிடம் விசாரித்து வருகிறோம்.
அவர் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக கூறியுள்ளனர்.
மேலும், இந்த கொலை Martinez போன் செய்யும் சில மணி நேரத்துக்கு முன்னர் நடந்ததா அல்லது சில நாட்களுக்கு முன்னரே அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்களா எனவும் விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
Martinez வீட்டின் அருகில் வசிக்கும் Letty Perez கூறுகையில், Martinezன் தந்தை சமீபத்தில் உயிரிழந்தார். அதிலிருந்தே அவர் மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக கூறியுள்ளார்.