சிம்பாப்வே அணிக்கெதிராக அபார வெற்றி ; இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐசிசி

சிம்பாப்வே அணிக்கெதிரான இன்று நடைப்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறிப்பிட்ட கால நேரத்தின் போது பந்துவீச்சை நிறைவு செய்யாத காரணத்தால் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸிக்கு அபராதம் விதிக்க போட்டி நடுவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி , போட்டியின் சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் மெத்தியூஸிற்கு விதிக்கப்படவுள்ள நிலையில் அணியின் மற்றைய வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 மாதங்களுக்குள் இடம்பெறும் போட்டியில் இதுபோன்று காலதாமதம் ஏற்படுமாயின் மெத்தியூஸிற்கு அணியிலிருந்து இடைநீக்கம் வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.